கணவன் மனைவிக்குள் சண்டை வருவது என்பது மிகவும் சாதாரணமான ஒன்று கணவன் மனைவி இரண்டு பேருமே எலியும் பூனையும் ஆக எப்பொழுதுமே சண்டையிட்டுக் கொண்டே தான் இருப்பார்கள் ஆனால் புரிதல் இருந்தால் வாழ்க்கை அழகானதாக மாறிவிடும் ஆனால் ஒரு சில நேரத்தில் அந்த சண்டையே பெரிய பிரச்சனையாகவும் முடிய வாய்ப்பு உள்ளது எனவே கணவன் மனைவிக்குள் சண்டைகள் வராமல் இருக்க ஒரு சில விஷயங்களை கடைப்பிடித்தால் மட்டும் போதுமானது. அப்படி செய்வதால் பெரிய சண்டைகள் கூட எளிதில் முடிந்து விடும்.

நீயா நானா என்ற போட்டி
எப்பொழுதுமே கணவன் மனைவிக்குள் ஒரு சிறிய புரிதல் வேண்டும் ஈகோவுடன் இருக்கக் கூடாது கணவன் மனைவி என்று வரும்போது இருவர் மெய் விட்டுக் கொடுத்து போனால்தான் நல்லது அதை விட்டுவிட்டு நீயா நானா என்கின்ற போட்டியோடு இருந்தால் நிச்சயமாக வாழ்க்கையில் நிம்மதி மட்டும் கிடைக்காது. கணவன் மனைவிக்குள் பிரச்சனை இருக்கும் போது யாராவது ஒருவர் அதற்குள் வந்து தலையிட்டால் பிரச்சினை இன்னும் அதிகமாகும் எனவே அந்த சமயத்தில் யாருடைய பேச்சையும் கேட்காமல் இருவரும் அமர்ந்து ஒருவருக்கு ஒருவர் மனம் விட்டு பேசிக் கொள்ள வேண்டும். இருவர் மேல் தப்பு இருந்தாலும் முதலில் யார் சண்டையை வளர்த்தார்களோ அவர்கள் மீது தான் முழுவதுமாக பழி விழும். எனவே

கணவன் மனைவிக்குள் சண்டை வராமல் இருக்க செய்ய வேண்டிய மந்திரம்
கணவன் மனைவிக்குள் புரிதல் வந்து விட்டாலே போதுமானது இருவருக்கு இடையில் சண்டை வரப்போகிறது என்கின்ற நேரத்தில் சண்டை போட்டு கத்தாமல் இந்த ஒரு எளிமையான மந்திரத்தை மட்டும் சொல்லுங்கள்.
“ஓம் மனி பத்மினி ஹம்”
இந்த மந்திரத்தை கூறிவிட்டு 18 நிமிடங்கள் மௌனமாக எதுவும் பேசாமல் இருந்தால் போதும் மிகப்பெரிய பிரச்சனையும் கரைந்து ஓடிவிடும் பிறகு உங்களுக்குள் எந்த சண்டையும் வராது கோபம் இருக்கும் சமயத்தில் இந்த மந்திரத்தை மட்டும் உச்சரிங்கள் அதற்கு மேலும் நம்மிடம் பொறுமை மிகவும் தேவை பொறுமையை கடைப்பிடித்தாலும் சண்டைகளை குறைக்க முடியும். விட்டுக் கொடுத்து போவதால் கெட்டுப் போவதில்லை என்று சொல்வார்கள் அதன்படி விட்டுக் கொடுத்து போனால் எந்த பிரச்சனையும் வராது. நிம்மதியான வாழ்க்கை வாழ பிரச்சனை இல்லாத வாழ்க்கையை வாழ இந்த ஒரு சிறிய மந்திரத்தை மட்டும் உச்சரித்துப் பாருங்கள்.
இதனையும் படியுங்கள் : சண்டை சச்சரவு என வெறுப்பில் வாழும் கணவன் மனைவி ஒற்றுமையா வாழ இந்த பூ இருந்தால் போதும்!




