கையில் தாராளமாக பணம் புழங்க வேண்டும். மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும். பணம் நம்மிடம் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமாக உள்ளது. ஆனால் அனைவருக்கும் அப்படி அமைவது கிடையாது. பணம் இல்லை என்ற பிரச்சனை தான் அதிகமாக உள்ளது. வாழ்க்கையில் எல்லோரும் விருப்பமிருந்தாலும் இல்லாவிட்டாலும் பணத்தை நோக்கி ஓட வேண்டியிருக்கிறது. அப்படிப்பட்ட பணத்தை அதிகளவு பெறுவதற்கு செய்யக்கூடிய ஒரு சனிக்கிழமை பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பரிகாரம் செய்யும் முறை
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையில் சிறப்பு பெற்றவையாகும். இந்து மதத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வத்திற்கு உரிய நாளாக கருதப்படுகிறது. அதே போல் வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நவகிரகத்திற்கு உரிய நாளாகவும் கருதப்படுகிறது. அந்த வகையில் சனிக்கிழமை சனி பகவானுக்குரிய நாள் என்பதால் இந்த நாளில் எளிமையாக எந்தவித செலவு இல்லாமல் செய்யக்கூடிய பரிகாரம் மிகவும் பலனளிக்கும். எத்தனையோ கோவிலுக்கு போய்விட்டோம், பார்க்கும் ஒவ்வொருவரும் சொல்லும் பரிகாரங்கள் அனைத்தையும் செய்து, பல மந்திரங்களையும் சொல்லியும் எந்த பலனும் இல்லை. வருமானம் பெருகுவதற்கு வழியே இல்லையா என வருத்தப்படுபவர்களுக்கு இந்த பரிகாரம் கைகொடுக்கும்.
இந்த பரிகாரம் செய்வதற்கு அருகில் இருக்கக்கூடிய அரச மரத்திற்கு சென்று அதை வணங்கி விட்டு சுற்றி வந்து ஒரே ஒரு கிழியாத நல்ல அரச இலையை எடுத்து வாருங்கள். பின் பயன்படுத்தாத தயிரில் சிறிதளவு மஞ்சள் தூளை கலந்து மோதிர விரலால் “ரீம்” என்ற எழுத்தை அரசு இலையில் எழுத வேண்டும். இதனை சிறிது நேரம் காய விட்டு பிறகு அதை நம்முடைய மணி பர்ஸில் வைக்க வேண்டும். ஒரு வாரம் முழுவதும் இந்த இலையை அப்படியே வைத்து விட்டு அடுத்த சனிக்கிழமை இந்த இலையை அரச மரத்தடியில் போட்டு புதிதாக ஒரு இலையில் இதே போல் செய்து பர்ஸில் வைத்து கொள்ளுங்கள். இப்படி தொடர்ந்து இந்த பரிகாரத்தை நாம் செய்து வருவதன் மூலம் நம்முடைய பர்ஸில் பணம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்து பலன் அடையலாம்.
இதனையும் படியுங்கள் : பண வரவு அதிகரிக்க மகாலட்சுமி தேவியார் பரிகாரம்!


