
பணம் சம்பாதிக்க முடியாமல், சேர்த்து வைக்க முடியாமல் திண்டாடுபவர்கள் ஒரு புறம் என்றால், கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை மற்றவர்களை நம்பி ஏமாந்தவர்கள் மற்றொரு புறம் இருக்கத் தான் செய்கிறார்கள். நாம் கஷ்டப்பட்டு சேர்த்த அல்லது சம்பாதித்த பணத்தை, யாரையாவது நம்பியோ அல்லது அவர்களுக்கு உதவி செய்வதற்காகவோ கொடுத்து ஏமார்ந்திருக்கலாம். நண்பர்கள், தெரிந்தவர்கள் என யாருக்காவது இரக்கப்பட்டு, அவசர காரணத்திற்காக பணம் கொடுத்து ஏமாந்த தவிப்பவர்கள் ஏராளமாக உள்ளனர். அப்படி இழந்த பணத்தை, திரும்ப இனி வரவே வராது என என நினைத்த பணத்தை கூட சில எளிய தாந்ரீக பரிகாரங்களை முறையாக செய்தால் திரும்பப் பெற முடியும். அது என்ன பரிகாரம் அதை எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம்.
கொடுத்த பணம் கிடைக்க பரிகாரம்
கடன் பட்டார் நெஞ்சம் கலங்கினார் போல என்று கூறுவார்கள். கடன் வாங்கியவர்கள் தான் கலங்குவார்கள் என்றில்லை கடன் கொடுத்தவர்களும் சில சமயங்களில் கலங்க வேண்டி இருக்கும். ஏனெனில் பணத்தை வாங்கியவர்கள் சரியான நேரத்தில் கொடுத்து விடுகிறேன் என்று கூறிய நேரத்தில் கொடுக்க இயலாமல் போகும் போது பிரச்சினை எழுகிறது. அப்படிப்பட்டவர்களிடமிருந்து நீங்கள் உங்கள் பணத்தை திரும்ப பெற செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றி பார்ப்போம்.
பரிகாரம் செய்யும் முறை
இந்த பரிகாரம் செய்வதற்கு 11 கோமதி சக்கரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டிற்கு அருகில் அரசமரம் இருந்தால் அங்கு சென்று, அரசமரத்தடியில் சற்று ஆழமாக குழி தோண்ட வேண்டும். பின் அந்த குழியில் ஒவ்வொரு கோமதி சக்கரத்தை, உங்களுக்கு பணம் தர வேண்டியவரின் பெயரை ஊறி வைக்க வேண்டும். இப்படி 11 முறை செய்ய வேண்டும். பிறகு மண்ணை போட்டு மூடிவிட்டு அந்த இடத்தை தொட்டு வணங்கி விட்டு வீட்டிற்கு செல்ல வேண்டும். நீங்கள் எடுத்த கோமதி சக்கரம் புதிது என்றால் அதனை கங்கா ஜலத்தில் சுத்தம் செய்து விட்டு இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். மேலும் இந்த பரிகாரத்தை சுபமுகூர்த்த நாளாக பார்த்து காலை 10 மணிக்குள் செய்ய வேண்டும். இந்த எளிமையான பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்து பாருங்கள் நீங்கள் கொடுத்த பணம் திரும்பி வரவே வராது என நினைத்த பணத்தை, உங்களிடம் பணம் வாங்கிய நபரே மனம் மாறி, அவராக வந்து உங்களிடம் திருப்பி தருவார்.
இதனையும் படியுங்கள் : கை நிறைய பணம் கிடைக்க தீப வழிபாடு



