பணத்தை ஏதாவது ஒரு ரூபத்தில் அனைவரும் சம்பாதித்துக் கொண்டிருப்போம். ஆனால் அது ஏதாவது ஒரு ரூபத்தில் செலவாகிக் கொண்டே தான் இருக்கும். அந்த செலவுகளை சமாளிப்பதற்கு பணம் இல்லாமல் ஒரு சிலர் மிகவும் அவதிப்படுவார்கள் பண வரவை அதிகரிப்பதற்கு எவ்வளவு முயற்சி செய்தும் அதற்கான சூழல் இல்லாமலே போய்விடும் அப்படி கஷ்டப்படுபவர்கள் ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த ஒரு பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயமாக பணத்தேவை பூர்த்தி அடையும் அதனைப் பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.

கடன் பிரச்சனைகள்
நாம் பிறரிடம் கொடுத்து வைத்த பணம் வரவில்லை என்றால் பிறரிடம் நாம் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படும். கடன் நமக்கு கிடைக்கவில்லை என்றாலும் இந்த ஒரு பரிகாரத்தை செய்வதன் மூலம் நிச்சயமாக எதிர்பார்க்காத முறையில் இருந்து நமக்கு பணம் வந்து சேரும். இந்த பரிகாரத்தை முழு நம்பிக்கையோடு செய்ய வேண்டும். கடன் பிரச்சினைகள் இருந்தாலும் அதுவும் சரியாகும்.
பரிகாரம் செய்ய வேண்டிய முறை
ஞாயிற்றுக்கிழமை அன்று எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த ஒரு பரிகாரத்தை செய்யலாம். இந்த பரிகாரத்தை யார் செய்தாலும் நிச்சயமாக பண தேவைகள் பூர்த்தியடையும். இந்த பரிகாரத்தை செய்வதற்கு எந்தவித நிபந்தனைகளும் இல்லை இதே செய்முறையில் இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயமாக நல்லதே நடக்கும். இந்த பரிகாரத்தை செய்வதற்கு நமக்கு ஆரஞ்சு நிறத்தில் எழுதக்கூடிய ஒரு பேனா தேவைப்படும். ஒரு அமைதியான இடத்தில் அமர்ந்து ஒரு வெள்ளை நிற பேப்பரை எடுத்து மூன்று முறை மூச்சை இழுத்து விட்டு இரண்டு கைகளையும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து அந்த சூட்டை கண்களிலும் தலையிலும் வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு இடது உள்ளங்கையில் அந்த பேனாவை வைத்து ஒரு பெரிய வட்டத்தை போட்டு அதில் cash flow என்று எழுத வேண்டும். அதற்கு கீழே 318 614 518 714 என்ற எண்களை எழுதி அவசர பணத்தை எவ்வளவு உள்ளதோ அது உங்களுடைய கைகளுக்கு வந்து சேர்ந்தது போல் கற்பனை செய்து கொள்ள வேண்டும். அந்த பணத்தை வைத்து நீங்கள் என்னவெல்லாம் செய்ய நினைத்தீர்களோ அதனையும் கற்பனை செய்ய வேண்டும்.
நிபந்தனை இல்லா பரிகாரம்
வீட்டில் பிறப்பு இறப்பு தீட்டு மாதவிடாய் தீட்டு போன்ற எந்த தீட்டு இருந்தாலும் இந்த பரிகாரத்தை தாராளமாக செய்யலாம். எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் கூட இந்த பரிகாரத்தை யார் வேண்டுமானாலும் செய்யலாம். அவசரப் பணத்தை வைத்து மட்டுமே இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் ஆடம்பரப் பண தேவைக்காக இதனை செய்தால் நிச்சயமாக அதற்கான பலன் கிடைக்காது. எந்த சந்தேகமும் இல்லாமல் முழு நம்பிக்கையோடு மனதார இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயமாக உங்களுடைய பணத்தேவை பூர்த்தி அடையும்.
இதனையும் படியுங்கள் : கடன் தீர செவ்வாய்க்கிழமை வழிபாடு


