ஒவ்வொரு பெண்களும் சக்தியின் அம்சம் கொண்டவர்களாக திகழப்படுகிறார்கள். ஒரு வீட்டில் பெண்கள் சந்தோஷமாக இருந்தால் அந்த வீட்டில் மகாலட்சுமி தேவியாருடைய அருள் பரிபூரணமாக இருக்கும். பெண்கள் வீட்டில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்து வந்தால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும். பெண்களுக்கு தெய்வ வழிபாட்டில் மிகுந்த ஆர்வம் இருக்கும் அதே போல் தெய்வ வழிபாட்டிற்கும் பெண்களுக்கும் நிறைய சம்பந்தம் உள்ளது. வெள்ளிக்கிழமை என்று பெண்கள் இந்த ஒரு வழிபாட்டை செய்தால் ஐஸ்வரியம் பெருகும் அதனை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.

வழிபடும் முறை
வெள்ளிக்கிழமை அன்று காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து முடித்துவிட்டு புடவை அணிந்து நெற்றியில் பொட்டு வைத்து பூக்கள் வைத்து வளையல் அணிந்து கொண்டு இந்த வழிபாட்டை பெண்கள் செய்வது மிகவும் நல்லது. வீட்டு பூஜை அறையில் எப்பொழுதும் போல் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு வீட்டில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் மலர்களால் அலங்காரம் செய்து மகாலட்சுமி தாயாருக்கு ரோஜா பூ, தாமரை பூ போன்ற மலர்களால் அலங்காரம் செய்து ஒரு விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். தாமரைத்தண்டு திரி போட்டு தீபம் ஏற்றுவது நல்லது இந்த பூஜையை நாம் வெள்ளிக்கிழமை என்று காலை 6 மணியில் இருந்து 7:00 மணிக்குள் சுக்கிர ஹோரையில் செய்ய வேண்டும்.
ஐஸ்வர்யத்தை பெருக்கும் வழிபாடு
மகாலட்சுமி தயாரிப்பு பானகத்தை நெய்வேதியமாக வைத்து வாசனை மிகுந்த மலர்களால் “ஓம் ஸ்ரீம் ஸ்ரீயை நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்து அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு கற்பூர ஆராத்தி காட்டி சாம்பிராணி தூபம் போட்டு வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை காலை சுக்கிரஹோரையில் இந்த வழிபாட்டை செய்வதன் மூலம் வீட்டில் உள்ள தரித்திரம் நீங்கி ஐஸ்வர்யம் பெருகும். நம்பிக்கையோடு பெண்கள் இந்த ஒரு வழிபாட்டை செய்வதன் மூலம் வீடும் லட்சுமி கடாட்சத்தோடு இருக்கும்.
இதனையும் படியுங்கள் : ஒற்றுமையை அதிகரிக்கும் உப்பு மிளகு பரிகாரம்


