நமக்கு எதிரே நின்று நம்மிடம் சண்டை போட்டு பிரச்சனை செய்தால் கூட அதனை சமாளித்து போராடலாம். ஆனால் நேரில் பார்க்கும் போது நன்றாக பேசிவிட்டு மனது முழுக்க தீய எண்ணங்களோடு பொறாமை எண்ணம் கொண்டவர்களாக நம்மில் வம்சத்தை வைத்துக் கொண்டே இருப்பவர்களை மட்டும் நாம் ஒருபோதும் நம்பவே கூடாது. மனிதர்களாக பிறப்பவர்கள் எல்லாருக்குமே பொறாமை குணம் இருக்கத்தான் செய்யும். சில பேருக்கு அது சீக்கிரம் வெளிப்படும் சில பேருக்கு அது வெளிப்படாது.

கண் திருஷ்டி
நம்முடைய சொந்த பந்தங்களை விட வசதி வாய்ப்பில் நாம் கொஞ்சம் உயர்ந்த இடத்தில் இருந்தால் நமக்கு பிரச்சனைகள் கூடுதலாகவே வரும் நிச்சயமாக நம் குடும்பத்தின் மீது கண் திருஷ்டி படும். ஓடி ஓடி வேலை பார்த்துக் கொண்டிருந்தாலும் அதனை தடுக்கும் வகையில் சில ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகள் கண்திருஷ்டியாக ஏற்படும். இவைகளில் இருந்து தப்பிக்க கண் திருஷ்டியில் இருந்து நம்மை பாதுகாக்க எளிமையான வழிகள் உள்ளது அதில் இந்த ஒரு வழிபாட்டை செய்து பாருங்கள். எதிர்மறையாற்றல் உங்களை நோக்கி வரும்போது இந்த மை அதனை தடுத்துவிடும் சக்தி வாய்ந்த இந்த மையை தயாரிப்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
தர்ப்பை புல்
நாட்டு மருந்து கடைகளில் தர்ப்பை புல்விற்கும் ஆன்மீகத்தை பொருத்தவரையில் இதற்கு சக்தி அதிகம். இதை வைத்து நாம் மை தயார் செய்யப் போகின்றோம் வெள்ளிக்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமைகளில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து வழிபாடு செய்து விட்டு தர்ப்பை புல்லை உள்ளங்கைகளில் வைத்து குல தெய்வத்தின் பெயரை 108 முறை உச்சரிக்க வேண்டும். பிறகு அந்த தர்ப்பை புல்லை எரிகின்ற விளக்கில் பொசுக்க வேண்டும் அதில் கிடைக்கின்ற சாம்பலை ஒரு டப்பாவில் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.
மை செய்யும் விதம்
அந்த சாம்பலை எடுத்து கொஞ்சமாக நெய் விட்டு கலந்தால் கருப்பு நிறம் மாறி கிடைக்கும். அந்த மையை தினமும் நெற்றிகள் இட்டுக்கொள்ள கண் திருஷ்டியில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளலாம். கருப்பு நிற மையை நெற்றியில் வைக்கும் போது குலதெய்வத்தின் பெயரை சொல்லிக் கொண்டே வைக்க வேண்டும். 10 நாட்களுக்கு ஒரு முறை இதுபோல மையை தயார் செய்து பயன்படுத்த வேண்டும் வருடம் முழுவதும் வைத்துக் கொண்டால் வேலை செய்யாது. எனவே அடிக்கடி தயார் செய்து இந்த மையை பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதிகபட்ச ஒரு மாதத்திற்கு ஒரு முறையாவது மையை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டவர்கள் உடல் வலியால் அவதிப்படுபவர்கள் அனைவரும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.
இதனையும் படியுங்கள் : அளவில்லா செல்வத்தை தரும் கண்ணாடி பரிகாரம்