நிலைவாசலில் இந்த பெருளை கட்டி விட்டால் கெட்ட காற்று கூட வீட்ற்குள் நுழைய முடியாது ?

- Advertisement -

என்ன தான் நமது வீட்டை சுற்றி பல கோவில்கள், திருத்தலங்கள் இருந்தாலும் நமது வீட்டில் பூஜை அறை வைத்து ஏன் வழிபடுகிறோம் தெரியுமா ? நமது வீட்டில் நல்ல ஆற்றல்கள் நிரம்பி இருக்கும் பொழுது சிறிதளவு கெட்ட ஆற்றல் வீட்டிற்குள் வந்து விட்டால் போதும் வீட்டில் இருக்கும் அனைத்து கெட்ட நல்ல ஆற்றல்களையும் வெளியேற்றிவிட்டு வீடு முழுவதும் கெட்ட ஆற்றல்களை நிறைந்து விடும். இதுபோல் வீடுகளில் நடக்க கூடாது என்பதற்காகவே நமது முன்னோர்கள் வீட்டிலும் பூஜை அறையை வைத்து கடவுள்களுக்கு, மந்திரங்கள் ஓதி வழிபட சொன்னார்கள். இதை மீறி வீட்டிற்குள் நுழையும் கெட்ட சக்தியை எப்படி வெளியேற்றுவது பற்றிய பரிகாரத்தை தான் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

வெள்ளிக்கிழமை

பொதுவாக நம் வீட்டில் உள்ள பூஜை அறையில் அமர்ந்து கடவுள்களுக்கு பூஜை, புனஸ்காரங்கள் போன்றவை செய்யும்போது எந்த அளவிற்கு நமக்கு நேர்மறை ஆற்றல் கிடைக்கின்றதோ அதே அளவிற்கான நேர்மறை ஆற்றல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும் உங்கள் வீட்டில் இருக்கும் வேண்டும் என்று நினைப்பார்கள் இந்த பரிகாரத்தை அவசியம் செய்து பாருங்கள். இந்த பரிகாரத்தை செய்வதற்கு வெள்ளிக்கிழமை மிகவும் சிறந்த தினம். அதனால் இந்த பரிகாரத்தை செய்வதற்கு வெள்ளிக்கிழமை தினத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். மேலும் வெள்ளிக்கிழமை தினம் என்றாலே நமது வீடும் பூஜை அறையும் மங்களகரமாகத்தான் இருக்கும் இல்லை என்றாலும் சுத்த பத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பரிகாரம்

சரி வாருங்கள் அது என்ன பரிகாரம் என்று பார்த்து விடுவோம் வெள்ளிக்கிழமை அன்று குலதெய்வத்தை மனதில் நினைத்துக் கொண்டு ஒரு மஞ்சள் துணியில் கொஞ்சமாக புணுகு தடவி கொள்ளுங்கள். பின் இதனுடன் ஒரு துண்டு பச்சை கற்பூரம், சிறிது சோம்பு, இரண்டு ஏலக்காய் வைத்து முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். அப்படியே இந்த மஞ்சள் துணியில் கட்டிய முடிச்சை வீட்டின் நிலை வாசலில் கட்டி தொங்க விட்டுக் கொள்ளுங்கள். இதை நிலை வாசலுக்கு உள்பக்கம் கட்டுவது அல்லது நிலை வாசலுக்கு வெளிப்பக்கம் வைத்து கட்டுவது எதுவாக இருந்தாலும் உங்கள் விருப்பப்படி கட்டிக் கொள்ளுங்கள்.

கெட்ட காற்று கூட நுழையாது

ஆனால் முக்கியமாக இந்த முடிச்சை நிலை வாசலின் வலது பக்கத்தில் கட்டுவது உங்களுக்கு சிறப்பான பலனை மட்டும் கொடுக்கும். இப்படி நாம் இந்த முடிச்சை நிலை வாசலில் கட்டும்போது இந்த முடிச்சுக்குள் இருந்து வரும் வாசனை உங்கள் வீட்டிற்குள் எந்த விதமான கெட்ட சக்தியையும் நுழையாத வண்ணம் பாதுகாக்கும் ஏன் உங்கள் வீட்டில் கெட்ட காற்று கூட நுழைய முடியாது. அதைவிட நமது பெரும் கஷ்டங்களை கொடுக்கும் அடுத்தவர்களின் கண் திருஷ்டி வீட்டுக்குள் நுழையாமல் பாதுகாத்து நமக்கு நேர்மை ஆற்றலை மட்டும் இந்த முடிச்சு தரக்கூடியது.

வாசனை குறையும் போது

இப்படி இந்த முடிச்சை நிலை வாசலில் கட்டி விட்டால் மட்டும் போதுமானதாக இருக்காது நீங்கள் தினசரி காலை மாலை பூஜையில் பூஜை செய்யும் போது ஊதுபக்தியை சாமிகளின் திருவுருவப்படங்களுக்கு காண்பிப்பது போல இந்த முடிச்சிக்கும் காண்பிக்க வேண்டும். அதன் பின் இந்த முடிச்சிலிருந்து வெளிவரக்கூடிய நல்ல வாசனை எப்போது குறைவாக குறைகிறதோ அப்போது இந்த முடிச்சை மாற்றி புதியதாக இன்னொரு முடிச்சை கட்டி விடுங்கள் அப்போது உடனடியாக உங்கள் வீட்டிற்குள் ஒரு லட்சுமி கடாட்சம் உண்டாகிவிடும். இந்த பரிகாரம் மிகவும் எளிமையானது என்பதால் நீங்கள் தாராளமாக செய்து பார்க்கலாம்.

-விளம்பரம்-

நம்பிக்கை

இப்படி நாம் ஆன்மீகத்தில் பார்க்கும் விஷயங்கள் கடுகளவு தான் இதைவிட கடலளவு விஷயங்கள் இன்னும் ஆன்மீகத்தில் எவ்வளவோ உள்ளது ? அதற்கு நீங்கள் முதலில் ஆன்மீகத்தை நம்ப வேண்டும் நீங்கள் ஆன்மீகத்தை நம்பி கையளவு மண்ணை வைத்து கடவுள் என பிரார்த்தனை செய்தால் கூட உங்களுக்கு வேண்டிய வரங்கள் கிடைக்கும். ஆனால் மனதில் நம்பிக்கையில்லாமல் தங்க சிலையை வைத்து பிரார்த்தனை செய்தால் கூட உங்களுக்கு எந்த வித நல்ல பலன்களும் கிடைக்காது. அதனால் ஆன்மிகத்தை முதலில் நம்புங்கள் அதன்பிறகு அதன் சக்தியை நீங்களே உணர தொடங்கி விடுவீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here