கண்களில் உள்ள கருவளையத்தை இயற்கையாக நீக்க!

- Advertisement -

இந்த நவீன காலகட்டத்தில் கண்களில் கருவளையம் இல்லாமல் ஒருவரை பார்ப்பது தான் கடினம் தவிர எல்லோருக்கும் இப்போது கண்களில் கருவளையம் இருக்கும் பிரச்சினைகள் வந்துவிட்டது. ஏனென்றால் இப்போது நாம் இருக்கும் ஒவ்வொரு இடங்களிலும் கணினி, டிவி மற்றும் மொபைல் என ஒவ்வொருத்தரும் ஒரு விதமான பொருட்களுடன் ஒன்றிபோய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் இரவிலும் தூங்காமல் அதிக நேரம் செல்போனை யூஸ் பண்ணி கொண்டு இருக்கின்றனர். இதுபோன்று நாம் தொடர்ந்து இப்படி கணினிகள் முன்னாடியும் டிவிகள் முன்னாடியும் அமர்ந்து கொண்டு பார்த்துக் கொண்டே இருப்பதினால் தங்களின் கருவளையம் மட்டுமில்லாமல் கண் சார்ந்த பிரச்சனைகளும் வரக்கூடும் இப்படி கண்களில் வரும் கருவளையம் போக்குவதற்காக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து குணப்படுத்தலாம். ஆம் உங்கள் வீட்டில் இருக்கும் சில இயற்கையான பொருட்களை வைத்து எப்படி கருவளையத்தை நீக்குவது என்று இந்த உடல் நலம் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் பாருங்கள்.

-விளம்பரம்-

வெள்ளரிக்காய்

நீங்கள் அதிகம் பார்த்திருப்பீர்கள் பியூட்டி பார்லர்களில் கண்களில் வெள்ளரிக்காயை வைத்திருப்பார்கள். ஏனென்றால் வெள்ளரிக்காயில் அதிகப்படியான நீர் சத்துக்கள் நிறைந்து உள்ளதால். அதனால் வெள்ளரிக்காயை கண்களில் வைப்பதன் மூலம் கண்களில் சுற்றியுள்ள கருவளையத்தையும் நீக்க முடியும். அது மட்டுமில்லாமல் நம் கண்களுக்கு குளிர்ச்சியை தரவல்லது.

- Advertisement -

தக்காளி

தக்காளி அடியில் ஓட்டை போட்டு தக்காளி சாறை பிழிந்து பவுளில் சேகரித்து எடுத்துக் கொள்ளுங்கள். பின் இதனுடன் சிறிது எலுமிச்சை சாறையும் சேர்த்து கலக்கி கொள்ளவும். இதை உங்கள் கண்களில் உள்ள கருவளைய பகுதிகளில் தடவி பத்து நிமிடம் உலர வைத்து. அதன் பின் தண்ணீர் கொண்டு கழுவி எடுத்தால் கருவளையம் பிரச்சினை தீர்ந்துவிடும். தக்காளியின் லைக்கோபின் மற்றும விட்டமின் சி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால். இவை சருமத்தை பாதுகாக்கும் கண்களில் கருவளையத்தையும் நீக்கிவிடும்.

உருளைகிழங்கு

உருளைக்கிழங்கை தேங்காய் துருவது போல் துருவிக்கொள்ளுங்கள். இப்படி துருவிய உருளைக்கிழங்கை ஒரு கை எடுத்து பிழிந்தால் உருளைக்கிழங்கு சாறு கிடைக்கும் இந்த சாறை ஒரு பவுளில் சேகரித்து கொண்டு கண்களில் இருக்கும் கருவளையம் பகுதியில் தடவிக் கொள்ளுங்கள். இப்படி தொடர்ந்து நீங்கள் செய்து வந்தால் உங்கள் கண்களில் உள்ள கருவளையம் தடமே இல்லாமல் மறைந்துவிடும்.

புதினா

புதினா இலையில் கண்களில் சுற்றி உள்ள கருவளையம் நீக்கும் சத்துக்கள் உள்ளது. ஆகையால் புதுனா இலையில் இருந்து சாறு எடுத்து அந்த சாற்றை கண்களில் கருவளையம் இருக்கும் பகுதிகளில் பூசி 15 நிமிடங்கள் உலர வைத்து. பின் தண்ணீரில் கழுவி கொள்ளுங்கள் இப்படி தினசரி செய்தால் கண்களில் உள்ள கருவளையங்கள் மறைந்து போகும்.

-விளம்பரம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here