உங்கள் முத்தில் உள்ள வறட்சி போக வேண்டுமா இதை செய்து பாருங்கள் ?

- Advertisement -

நாம் எப்பொழுதும் நம்முடைய முகம் அடுத்தவர்கள் விரும்பும்படி ஆழகாகவும் இருக்க வேண்டும் என்று முகத்தை அழகாக வைத்துக் கொள்வதற்கு பல முயற்சிகளை எடுத்து கொண்டு தான் இருக்கிறோம். அதிலும் சில நபர்களுக்கு என்னதான் முகம் வெள்ளையாகவும், அழகாகவும் இருந்தாலும் அவர்களுக்கு முகம் எப்பொழுதும் வறட்சியாக காணப்படும். மேலும் வெயிலினால் அவர்களுக்கு வியர்வை வடியும் பொழுதும் முகம் பார்ப்பதற்கு அசிங்கமாக தோற்றமளிக்கும் மேலும் முகங்களில் கரும்புள்ளிகள், முகப்பருக்கள் போன்றவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆனால் இதை போக்குவதற்கு சிலர் அழகு சாதன கிரீம்களை பயன்படுத்துவார்கள். ஆனால் நம் வீட்டில் இருக்கும் இயற்கையான பொருட்களை வைத்து எளிதில் சரி செய்து விடலாம். இன்று முகம் வறட்சியாக இருந்தால் அதை எப்படி நீக்குவது என்பதை பற்றி இந்த அழகு சார்ந்த குறிப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

அப்படியே மறக்காம எங்க YouTube சேனலையும் Subscribe பண்ணிருங்க.

- Advertisement -

Youtube Sub

பாதம்

பாதாம் வைத்து உங்கள் முகத்தை நீங்க ஸ்கிரப் செய்து வந்தால் உங்கள் முகத்தை எப்போதும் ஈரப்பதமாக வைத்துக் கொள்ள பெரிது உதவியாக இருக்கும். முதலில் ஒரு கப் பாதாம் பவுடரில் எடுத்து கொண்டு அரை கப் ஆலிவ் எண்ணெயில் சேர்த்து நன்று கலந்து கொள்ளவும். பின் ஒரு டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலந்து கொண்டு உங்கள் முகத்தில் அப்பளை செய்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட் நன்றாக உலர்ந்து காய்ந்தவுடன் குளிர்ந்த நீரால் முகத்தை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளுங்கள் இப்பொழுது நம முகம் ஈரப்பதத்துடன் மென்மையாக காட்சியளிக்கும்.

கீரின் டீ

நான் வறட்சியான சருமத்திற்கு கிரீன் டீ ஸ்கிரப் மிகவும் உதவியாக இருக்கும். ஒரு பவுளில் கிரீன் டீ சேர்த்து அதனுடன் ஒரு டீஸ்பூன் சர்க்கரையும் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும். இதனுடன் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல் தயார் செய்து கொள்ளவும். பின்பு இந்த கிரீன் டீ பேஸ்ட்டை நம் முகத்தில் நன்றாக தேய்த்து விடவும் பின்பு இந்த பேஸ்ட் உலர்ந்த பின் குளிர்ந்த நீரில் நம் முகத்தை கழுவி எடுத்தால் நம் முகத்தை ஈரப்பதமாக வைத்து நம் முகத்தில் உள்ள கிருமிகளை அழைத்து பல நன்மைகளை உண்டாக்கும்.

-விளம்பரம்-

தேங்காய் எண்ணெய்

நம் தேங்காய் எண்ணெய் வைத்து நம் ஸ்கிரப் செய்து முகத்தில் அப்ளை செய்து வந்தால் நமது முகத்தில் உள்ள வறண்ட சருமத்தை சுத்தம் செய்து மென்மையான மற்றும் பொலிவான சருமத்தை நமக்கு தருகிறது. இதை செய்வதற்கு அரை கப் தேங்காய் எண்ணெய் எடுத்து இரண்டு டீஸ்பூன் அளவு சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும் பின் இதில் ஒரு டீஸ்பூன் எலும்பிச்சை பழச்சாறையும் சேர்த்து முகத்தில் தடவி வரவும் என் 10 நிமிடம் கழித்து ஸ்கிராப் உலர்ந்தவுடன் தண்ணீரால் முகத்தை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள்.

காபி பவுடர்

நாம் காபி பவுடர் வைத்து நம் முகத்தை ஸ்கிரப் செய்யும் போது நம் முகத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி நமது முகத்தை புத்துணர்ச்சியுடன் மற்றும் பொலிவுடன் வைத்து நமது சருமத்தை சுத்திகரிக்கும். ஒரு டீஸ்பூன் அளவு காபி பவுடரை ஒரு டீஸ்பூன் அளவு தண்ணீரில் சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ளவும். பின் இதனுடன் ஒரு டீஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து நம் முகத்தில் ஃபேஸ் மாஸ்க் போல் அப்ளை செய்து கொள்ளுங்கள் பிறகு பத்து நிமிடம் கழித்து உலர்ந்த பின்பு தண்ணீரை வைத்து முகத்தை கழுவி எடுத்துக் கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here