ஒரு சிலருக்கு முகம் அழகாகவும், பொலிவுடன் வெள்ளையாக இருக்கும் ஆனால் அவர்களின் கழுத்துப் பகுதி மிகவும் கருமையாக இருக்கும். தொடர்ந்து செயின் அதிகப்படியான நேரங்கள் கழுத்தில் அணிந்து இருப்பதால் அதன் காரணமாக கூட கழுத்தில் கருமை நிறம் அதிகமாக வரலாம். கழுத்தின் கருமையை போக்குவதற்காக பியூட்டி பார்லர் மற்றும் மார்க்கெட்டில் விற்பனைக்கு இருக்கும் ரசாயனம் கலந்த கிரீம்களை வாங்கி அப்ளை செய்வதற்கு பதில் உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து உங்களின் கழுத்தில் உள்ள கருமையை போக்குவதற்கு சில வழிகள் உண்டு ஆம் வீட்டில் இருக்கிற பொருட்களை வைத்து எப்படி அந்த கிரீம் செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை, அப்ளை செய்யும் விதம் என அனைத்தையும் இந்த அழகு குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
தேவையான பொருள்கள் :-
1 டீஸ்பூன் – எலுமிச்சை பழச்சாறு
1/4 டீஸ்பூன் – ரோஸ் வாட்டர்
1 டீஸ்பூன் – அரிசி மாவு
1/2 டீஸ்பூன் – சக்கரை
1 – மஞ்சள் கிழங்கு
4 டீஸ்பூன் – சாதம் வடித்த கஞ்சி
செய்முறை 1 :-
முதலில் ஒரு பவுள் எடுத்துக்கொண்டு இந்த பவுளில் எலுமிச்சை சாறு எடுத்துக் கொள்ளுங்கள் அதனுடன் அரிசி மாவு கலந்து நன்றாக கலக்கி கொள்ளுங்கள்.
செய்முறை 2 :-
பின் சக்கரையும் சேர்த்து கலக்கவும் இந்த கலவையோடு ரோஸ் வாட்டரும் சேர்த்து அந்த பொருட்களை நன்றாக கலக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.
செய்முறை 3 :-
அதன் பின்பு மஞ்சள் தூள் எடுத்துக் கொள்ளுங்கள் மஞ்சள் தூள் கடைகளில் வாங்குவதை தவிர்த்து விட்டு. வீட்டில் மஞ்சள் கிழங்காக வாங்கி அந்த கிழங்கை பொடியாக்கி வைத்துக் கொள்ளுங்கள் இது உங்களுக்கு இயற்கையான முறையில் இருக்கும்.
செய்முறை 4 :-
பின்பு ஒருபவுளில் சாதாம் வடித்த கஞ்சியை எடுத்துக் கொண்டு அதில் நீங்கள் பொடி செய்துள்ள மஞ்சள் கிழங்கு பொடியை போட்டு நன்றாக கலக்கி எடுத்துக் கொள்ளுங்கள் இப்பொழுது நமக்கு தேவையான கிரீம் தயாராகிவிட்டது.
அப்பளை செய்யும்முறை :-
செய்முறை 1 :-
முதலில் கழுத்தில் உள்ள கருமை நிறத்தை போக்குவதற்காக நாம் செய்துள்ள முதல் கலவையை கழுத்தின் கருமை நிறம் உள்ள பகுதிகளில் ஸ்கிராப் செய்து கொள்ளுங்கள்.
செய்முறை 2 :-
உங்கள் கழுத்தை சுற்றி அனைத்து பகுதிகளும் நன்றாக ஒரு ஐந்து நிமிடங்கள் ஸ்கிராப் செய்து பின்பு தண்ணீரை வைத்து கழுவிக் கொள்ளுங்கள்.
செய்முறை 3 :-
அதன்பின் சாதம் வடித்த கஞ்சில் செய்துள்ள கிரீமை எடுத்து கொள்ளுங்கள் பின்பு இந்த கிரீமை நன்றாக முதலில் செய்தது போல கழுத்தை சுற்றி இருக்கும் பகுதிகளை அனைத்து இடத்திலும் அப்ளை செய்து கொள்ளுங்கள்.
செய்முறை 4 :-
அனைத்து இடங்களிலும் நன்றாக அப்ளை செய்துவிட்டு ஒரு பத்து நிமிடங்களுக்கு மேல் நன்றாக உலரும்படி விட்டு விடுங்கள்.
செய்முறை 5 :-
அதன் பின் காய்ந்ததும் ஒரு காட்டன் துணியை தண்ணீரில் நணைத்து அந்த துணியை வைத்து மஞ்சள் கிரீம் அப்பளை செய்த இடங்களை நன்றாக துடைத்து விடுங்கள்.
செய்முறை 6 :-
இதுபோல தொடர்ந்து நான்கிலிருந்து ஐந்து நாட்கள் செய்து வந்தால் உங்களின கழுத்து பகுதியில் உள்ள கருமை நிறம் நீங்குவதை உங்களால் உணர முடியும்.