வீட்டில் உள்ள கெட்ட சக்தியை அழிக்க எலுமிச்சம் பழம் மட்டும் போது! செல்வசெழிப்புடன் வாழலாம்!

- Advertisement -
  • எலுமிச்சை பழம் பல ஆண்டுகளாக நாம் அன்றாட சாப்பிடும் உணவுப் பொருளாகவும், நமது உடல் அழகை பராமரிப்பதற்காகவும், நம் ஆரோக்கியமாக இருப்பதற்கு ஒரு மருத்துவ பொருளாகவும் கூட பயன்பட்டு வருகிறது. ஆனால் இந்து புராணத்தின் படி எலுமிச்சம் பழம் ஒரு புனித பொருளாகவும் இந்துக்களிடையே இருக்கும் நம்பிக்கை. ஏன் சாஸ்திர சம்பிரதாயங்கள் படி பல கடவுள்களுக்கு எலுமிச்சை வழிபாடு நல்ல பலன் கொடுக்க கூடியது எனக் கூறுகின்றது. எலுமிச்சை பழத்தை வைத்து வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகளை வெளியேற்றி மீண்டும் உள்ளே வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி தான் நாம் இன்றைய இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் தெளிவாக காணலாம் வாருங்கள்.

வீட்டில் உள்ள கெட்ட சக்தியை வெளியேற்ற ஒரு எலுமிச்சம் பழத்தை நான்கு துண்டுகளாக வெட்டி உப்பு பரப்பிய ஒரு தட்டின் நடுவே வைத்து தட்டை கட்டிலின் அடியில் வைத்து இரவு தூங்கி காலை எழுந்த பின் அதை எடுத்து ஒரு கவரில் போட்டு மனித காதல் படாத இடத்தில் தூக்கி போட்டு விடுங்கள். இவ்வாறு தொடர்ந்து மூன்று நாட்கள் செய்தால் உங்களது வீட்டில் மாற்றம் உண்டாகும் கெட்ட சக்தியும் வெளியேறிவிடும்.

முதலில் ஒரு மூன்று எலுமிச்சை பழங்களை எடுத்துக் கொண்டு உங்களது வீட்டில் ஏதாவது ஒரு மூன்று பகுதியை தேர்ந்தெடுத்து அங்கு வைத்துக் கொள்ளுங்கள். பின் நாம் வைத்து எலுமிச்சை பழம் எப்போது பழுப்பு நிறத்தில் அல்லது கருப்பு நிறத்தில் வருகிறதோ அப்போது அந்த எலுமிச்சை பழத்தை எடுத்துவிட்டு வேறு எலுமிச்சைப்பழத்தை அந்த இடத்தில் வையுங்கள் இவ்வாறு செய்வதனால் கெட்ட சக்தியை வீட்டில் இருந்து அகற்றி விடலாம்.

- Advertisement -

நீங்கள் வீட்டிலிருந்து வெளியே செல்லும் பொழுது ஒரு எலுமிச்சம் பழத்தை ஒரு கவரில் போட்டு உங்கள் பையில் வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் இரவு வீடு திரும்பி வரும் பொழுது அந்த எலுமிச்சை பழத்தை எடுத்து பார்த்தால் அது காய்ந்து போய் இருக்கும் பட்சத்தில் உங்களை நோக்கி வந்த கெட்ட சக்திகளை ஈர்த்துவிட்டது என்று அர்த்தம்.

-விளம்பரம்-

மழை பெய்யும் போது மழை நீரை பிடித்து வடிகட்டி அதில் எலுமிச்சை பழத்தை போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை வீட்டில் தெளித்துவிட்டால் வீட்டில் உள்ள கெட்ட சக்திகள் வெளியேறிவிடும.

ஒரு கண்ணாடி பவுளில் ஒன்பது எலுமிச்சை பழத்தை சேர்த்து, அதில் வைக்கும்போது எட்டு எலுமிச்சம் பழத்தை சுற்றி வைத்துவிட்டு ஒரு பழத்தை நடுவில் வைத்து பிரிட்ஜுக்குள் வைத்தால் உங்கள் வீட்டில் செல்வ வளம் பெருகும், பண வரவும் அதிகரிக்கும்.

நீங்கள் வேலை பார்க்கும் இடமாக இருந்தாலும் சரி வீடாக இருந்தாலும் சரி ஒரு கண்ணாடி பவுளில் மூன்று எலுமிச்சம் பழத்தை வைத்தால் அது நல்லது மேலும் உறவுகள் பலப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here