- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 15 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
பீர்க்கங்காய் தண்ணீர் காய்கறிகளில் ஒன்று. இந்த பீர்க்கங்காய் பயன்படுத்தி பீர்க்கங்காய் பருப்பு கூட்டு, பீர்க்கங்காய் பொரியல் இதெல்லாம் செஞ்சிருப்பிங்க. பீர்க்கங்காய் வைத்து சட்னி செஞ்சு பாருங்க ரொம்ப ரொம்ப ருசியா கல் தோசை இட்லி எல்லாத்துக்கும் ஒரு அட்டகாசமான காம்பினேஷன் ஆக இருக்கும். ஒரே ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க அந்த அளவுக்கு ரொம்ப ரொம்ப ருசியாக இருக்கும். எப்பவுமே தேங்காய் சட்னி தக்காளி சட்னி, மல்லி சட்னி, புதினா சட்னி அப்படின்னு சாப்பிட்டு போர் அடிச்சு போய் இருந்துச்சுன்னா பீர்க்கங்காய் வைத்து இந்த மாதிரி ஒரு தடவ பீர்க்கங்காய் சட்னி செஞ்சு பாருங்க.
இந்த ரெசிபியை குக்கர்லையும் செய்யலாம் கடாயிலையும் செய்யலாம் உங்களுக்கு எதுல செய்ய பிடிக்குமோ அதுல செஞ்சுக்கோங்க. கடைசியா நல்லா வந்ததும் கடைந்து கொத்தமல்லி இலைகள் எல்லாம் தூவினால் அவ்ளோ அருமையான வாசத்தோட ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும். இந்த சுவையான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே எக்ஸ்ட்ரா ரெண்டு இட்லி தோசை கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. பீர்க்கங்காயில் எக்கச்சக்கமான நன்மைகள் இருக்கு அதனால கண்டிப்பா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு கொடுத்து குழந்தைகளை சாப்பிட வச்சு பாருங்க. இப்ப வாங்க இந்த ருசியான டேஸ்டான பீர்க்கங்காய் சட்னி ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : பீர்க்கங்காய் தேங்காய் பால் கிரேவி
Ingredients
Method
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு சீரகம், கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.
பூண்டு சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
தக்காளி சேர்த்து மசிய வதக்கியதும் பீர்க்கங்காய் குழம்பு மிளகாய் தூள் உப்பு சேர்த்து தண்ணீர் எதுவும் சேர்க்காமல் மூடி போட்டு பத்து நிமிடம் வேக வைக்கவும்.
நன்றாக வெந்ததும் நன்றாக கடைந்து கொத்தமல்லி இலைகள் தூவினால் சுவையான பீர்க்கங்காய் சட்னி தயார்.






