Advertisement
சைவம்

ருசியான பீர்க்கங்காய் பால் கூட்டு சாதத்துடன் பிசைந்து சாப்பிட்ட சுவை அருமையாக இருக்கும் நீங்களும் ஒரு முறை செஞ்சி பாருங்க!

Advertisement

பீர்க்கங்காய் ஒரு ஆரோக்கியமான காய்கறி. இதை ஒரு சிலர் மட்டுமே அவர்களது உணவில் பெரும்பாலும் அடிக்கடி சேர்த்துக் கொள்வார்கள் ஆனால் ஒரு சில அறிந்த பீர்க்கங்காயை சாப்பிடவே மாட்டார்கள். காரணம் சில சமயங்களில் இந்த பீர்க்கங்காயை ஏதேனும் பூச்சி கடித்திருந்தால் கசப்பு தன்மை காரணமாக அந்த பீர்க்கங்காய் வீணாகி போகும்.

அந்த காரணத்தினால் பெரும்பாலும் பீர்க்கங்காயை விரும்ப மாட்டார்கள். ஆனால் பீர்க்கங்காய் உடலுக்கு மிகவும் நல்லது. பீர்க்கங்காய் மட்டும் இல்லாமல் பீர்க்கங்காய் தோலிலும் கூட நாம் சட்னி செய்து சாப்பிடலாம். சுவையானதும் ஆரோக்கியமானதும் கூட.

Advertisement

எனவே பீர்க்கங்காயை வாங்கி அடிக்கடி சாப்பிட்டுக் கொள்ளுங்கள். ஆனால் பீர்க்கங்காய் எப்படி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும் என்று தெரியவில்லை என்றால் இப்பொழுது நாம் சொல்லப் போகின்ற விதத்தில் பீர்க்கங்காய் பால் கூட்டு செய்து பாருங்கள்.

சுவை அருமையாக இருக்கும். சாம்பார் புளி குழம்பு காரக்குழம்பு என அனைத்திற்கும் ஒரு பர்பெக்ட்டான சைட் டிஷ் ஆக இந்த பால் கூட்டு இருக்கும். இந்த பால் கூட்டு செய்வதற்கு குறைந்த நிமிடங்கள் மட்டுமே போதும். சட்டென்று செய்துவிடலாம். இந்த சுவையான பீர்க்கங்காய் பால் கூட்டு எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

பீர்க்கங்காய் பால் கூட்டு | Ridge Gourd Milk Kootu In Tamil

Print Recipe
பீர்க்கங்காயை சாப்பிடவே மாட்டார்கள். காரணம் சில சமயங்களில் இந்த பீர்க்கங்காயை ஏதேனும் பூச்சி கடித்திருந்தால்கசப்பு தன்மை காரணமாக அந்த பீர்க்கங்காய் வீணாகி போகும். அந்த காரணத்தினால் பெரும்பாலும் பீர்க்கங்காயை விரும்ப மாட்டார்கள். ஆனால் பீர்க்கங்காய் உடலுக்கு மிகவும்நல்லது. பீர்க்கங்காய் மட்டும் இல்லாமல் பீர்க்கங்காய் தோலிலும் கூட
Advertisement
நாம் சட்னி செய்து சாப்பிடலாம். சுவையானதும் ஆரோக்கியமானதும் கூட. இந்த சுவையான பீர்க்கங்காய் பால் கூட்டு எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.
Course LUNCH
Cuisine tamil nadu
Keyword Ridge Gourd Milk Kootu
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 245

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1/4 கிலோ பீர்க்கங்காய்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 3 பச்சை மிளகாய்
  • 1/2 கப் தேங்காய்
  • 2 காய்ந்த மிளகாய்
  • உப்பு தேவையான அளவு
  • கொத்தமல்லி இலைகள் சிறிதளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் அரிசி மாவு
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 1 கொத்து கருவேப்பிலை

Instructions

  • முதலில் பீர்க்கங்காயை நன்கு கழுவி சுத்தம் செய்த தோலை நீக்கிவிட்டு உங்களுக்கு தேவையான வடிவத்தில் வெட்டிவைத்துக் கொள்ளுங்கள்.தோலை வீணாக்காமல் அதில் சட்னி செய்து சாப்பிடலாம்.
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி முதலில் பீர்க்கங்காயை சேர்த்துவதக்கவும். பின்னர் வெங்காயம் தக்காளி மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை பீர்க்கங்காயுடன் சேர்த்து நன்றாக வதக்கவும்
  • இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், பச்சை மிளகாய் மற்றும் சோம்பு சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும். அரைத்த விழுதை பீர்க்கங்காய் உடன் சேர்த்து வதக்கி தேவையான அளவு உப்பு சேர்க்கவேண்டும்.
  • மற்றொரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் காய்ந்த மிளகாய்போட்டு தாளித்து பீர்க்கங்காயுடன் சேர்த்து விடவும்.
  • ஐந்து நிமிடங்கள் நன்றாக கொதித்த உடன் மிகவும் தண்ணீராகவும் இல்லாமல் மிகவும் கெட்டியாகவும் இல்லாமல்இரண்டிற்கும் நடுப்பட்ட பதத்தில் கொத்தமல்லி இலைகளை போட்டு இறக்க வேண்டும்.
  • இப்பொழுது சூடான பீர்க்கங்காய் பால் கூட்டு சாப்பிட தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 245kcal | Carbohydrates: 245g | Cholesterol: 1mg | Sodium: 233mg | Potassium: 3.2mg | Fiber: 1.4g | Vitamin A: 13IU | Calcium: 23.34mg
Advertisement
Prem Kumar

Recent Posts

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

5 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

8 மணி நேரங்கள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

9 மணி நேரங்கள் ago

ருசியான கேழ்வரகு முருங்கைக்கீரை அடை டிபனாகவும் சாப்பிடலாம் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!

தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…

10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

13 மணி நேரங்கள் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

22 மணி நேரங்கள் ago