வேலையில் சம்பள உயர்வு, பதவி உயர்வு! நல்ல வேலை கிடைக்க, ஏன் அரசாங்க வேலை கூட கிடைக்கும்! இதை செய்யுங்கள்!

- Advertisement -

தற்போதைய நாட்களில் படித்து முடித்து விட்டு நல்ல வேலையில் சேர்ந்து தன் குடும்பத்தை வழிநடத்த வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் பல இளைஞர்கள் வேலை இல்லாமல் தான் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள் எப்படி ஒரு பக்கம் இருந்தால். இன்னொரு பக்கம் வேலையில் தான் இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் பார்க்கிற வேலைக்கும் வாங்குகின்ற சம்பளத்திற்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கிறது. இன்னும் சிலர் கஷ்டப்பட்டு தனது நிறுவனங்களில் வேலை பார்த்துக் கொண்டிருப்பார்கள் பல வருடங்கள் அவர்கள் வேலை பார்த்தும் இன்னும் அவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பள உயர்வு எதுவுமே கிடைத்திருக்காது. இது போன்ற பிரச்சனைகளில் கஷ்டப்படுபவர்களுக்கு ஆன்மீக ரீதியான சொல்லப்பட்டிருக்கும் பரிகாரத்தை தான் நாம் இன்றைய ஆன்மீகம் குறித்த தொகுப்பில் தெளிவாக காணலாம் வாருங்கள்.

அஞ்சநேயர் அருள்

முதலில் நீங்கள் வேலை தேடுபவர்களாக இருக்கட்டும், வேலை பார்க்கும் இடங்களில் பதவி உயர்வுக்காக காத்திருப்பதாக இருக்கட்டும், ஏன் நல்ல வேலை கிடைக்க காத்திருப்பவரும் சரி உங்களின் கனவு நிறைவேற ஆஞ்சநேயரின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக இருக்க வேண்டும். ஆஞ்சநேயரின் அருளை பெற ஆஞ்சநேயரை தினசரி வழிபட்டு அனுமன் சாலிசா படித்தால் போதும் நம்முடைய வேலை சம்பந்தமாக இருக்கும் அத்தனை பிரச்சனைகளும், தடைகளும் நீங்கிவிடும். தினமும் ஆஞ்சநேயர் வழிபட முடியாதவர்கள் செவ்வாய்க்கிழமையில் மட்டுமாவது ஆஞ்சநேயரை வழிபட்டு அனுமன் சாலிசாவை கட்டாயம் படித்து வாருங்கள்.

- Advertisement -

குரு பகவான்

அதேபோல செவ்வாய்க்கிழமை தினம் அன்று கோவில்களுக்கு சென்று கடவுளை தரிசித்த பின்பு கோவிலின் வெளியே உணவு இல்லாமல் அமர்ந்திருப்பவர்களுக்கு மஞ்சள் நிறமுடைய வாழைப்பழத்தை தானமாக கொடுக்க வேண்டும். ஏனென்றால் மஞ்சள் நிறம் என்பது குரு பகவானுக்கு உரியது குரு பகவானின் அருளும் கிடைத்துவிட்டால் போதும் ஏன் உங்களுக்கு அரசாங்க வேலை கூட கிடைப்பதற்காக வாய்ப்புகள் அதிகம். மேலும் குருவானரா் பணத்தின் அதிபதி கிரகமாகவும் திகழ்கிறார் நீங்கள் செய்யும் தானத்தின் மூலம் உங்களுக்கு நல்ல வேலையும், நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் பதவியை உயர்வும் கூட கிடைக்கும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

-விளம்பரம்-

சிவப்பு நிற துணி

நீங்கள் வேலை தேடுபவராக இருந்தாலும் சரி நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வேண்டுமென எதிர்பார்த்து இருப்பவராக இருந்தாலும் சரி உங்களது மணி பரிசில் எப்போதும் ஒரு சின்ன சிவப்பு துணி இருக்குமாறு வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் சிவப்பு நிறம் என்பது மங்களமான ஒரு நிறம் அது மட்டுமில்லாமல் பார்வதி தேவிக்கு உகந்த நிறமும். அதனால் இந்த சிறிய சிவப்பு நிற துணி உங்களுடன் இருக்கும்போது வேலை சம்பந்தமாக நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் வெற்றியில் தான் முடியும்.

கையழுத்து

பொதுவாக ஒருவரின் கையெழுத்தை வைத்து அவரின் தலையெழுத்தை சொல்லலாம் என்பார்கள். அது போல தான் இந்த விஷயமும் நீங்கள் கையெழுத்து போடும்போது கடைசியாக புள்ளி வைத்து முடிப்பவராக இருந்தால் தயவு செய்து புள்ளி வைப்பதை இன்றோடு நிறுத்திக் கொள்ளுங்கள் இது உங்கள் முன்னேற்றத்திற்கு நீங்களே ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்கு சமம். அதனால் உங்கள் கையெழுத்தில் கடைசியாக புள்ளி வைக்கும் பழக்கம் இருந்தால் அதை தவிர்த்து விடுவது மிகவும் நல்லது. இதனால் கூட உங்களுக்கு வேலை கிடைக்காமல் போகலாம், உங்களுக்கு வர வேண்டிய பதவி உயர்வு வராமல் போகலாம். அந்த அளவிற்கு உங்கள் கையெழுத்து முக்கியத்துவம் வாய்ந்தது.

முயற்சியெல்லாம் வெற்றி தான்

அதனால் நீங்கள் எப்பொழுதும் வேலை சம்பந்தமாக எந்த முயற்சி எடுத்தாலும் நான் மேலே சொன்ன இந்த நான்கு விஷயங்களையும் தவறாமல் கடைபிடித்து சரியாக செய்தால் நீங்கள் எதற்காக முயற்சி எடுக்கிறீர்களோ அந்த முயற்சி வெற்றிகரமாக அமையும் உங்களுக்கு. அரசாங்க வேலை வேண்டும் அதற்காக முயற்சிக்கிறீர்கள் என்றாலும் உங்களுக்கு அதற்கான பலன் கூடிய விரைவில் கிடைக்கும். அந்த அளவிற்கு இவையல்லாம் சக்தி வாய்ந்த பரிகாரங்கள். நம்பிக்கை உடன் செய்து பாருங்கள் உங்களுக்கும் நல்லே பலனை கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here