கடன் பிரச்சினைகள் தீர்வதற்கு பல்வேறு பரிகாரங்களை செய்திருப்போம் ஆனால் அதனுடன் சேர்த்து கடின உழைப்பும் தேவைப்படும். மேலும் கடவுளின் அருளும் தேவைப்படும் இவை அனைத்தும் இருந்தால் சீக்கிரத்தில் உங்களுடைய கடனை நீங்கள் அடைக்க முடியும் செவ்வாய்க்கிழமையில் கடன் தீர நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.

குளிகை நேரம்
பொதுவாக குளிகை நேரம் என்பது கடன் தீவதற்கு கடனை அடைப்பதற்கு நல்ல நேரமாக கருதப்படுகிறது குளிகை நேரத்தில் கடன் வாங்க கூடாது என்று கூறுவார்கள் ஆனால் அந்த நேரத்தில் கடனை திருப்பிக் கொடுக்கலாம். குளிகை நேரத்தில் கடனை நாம் கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்க ஆரம்பித்து விட்டாலே வீட்டில் கடன் பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.
கடன் பிரச்சனை தீர உப்பு பரிகாரம்
செவ்வாய்க்கிழமை என்று வீட்டில் உள்ள மகாலட்சுமி தேவியார் படத்திற்கு பூக்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். பிறகு ஒரு பித்தளை தட்டை எடுத்து அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து அலங்காரம் செய்து ஒரு சிறிய மண்பானை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு உள்புறமும் வெளிப்புறமும் மஞ்சள் தடவி காய வைத்து பிறகு குங்குமம் வைத்து அலங்காரம் செய்து கொள்ளுங்கள் பூக்களும் சுற்றிக் கொள்ளுங்கள். பிறகு அந்த தாம்பாள தட்டில் கல் உப்பை எடுத்து வட்டமாக பரப்பி விட வேண்டும்.
செவ்வாய்க்கிழமை குளிகை நேரம்
செவ்வாய்க்கிழமை என்று பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை குளிகை நேரம் இருக்கும் இந்த நேரத்தில் பூஜையை தொடங்க வேண்டும். ஒரு விரலி மஞ்சள் எடுத்து கல்லுப்பின் மீது உங்களுக்கு எவ்வளவு கடன் தொகை இருக்கிறதோ அதனை எழுத வேண்டும். பிறகு அந்த உப்பை எடுத்து தயார் செய்து வைத்துள்ள மண்பானை கொல் போட்டு அந்த விரலி மஞ்சள் உப்பின் மேல் சொருகி இந்த கலசத்தை மகாலட்சுமி தேவியாரின் முன்பாக வைத்து விளக்கு ஏற்றி தீப தூப கற்பூர ஆரத்தி காட்டி “ஓம் ஸ்ரீம் ஓம்” என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். தொடர்ந்து 11 நாட்கள் அதனை அப்படியே வைத்துவிட்டு தினந்தோறும் விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். பிறகு 11 வது நாள் வெள்ளிக்கிழமை அன்று அந்த மண்பானையில் இருக்கக்கூடிய உப்பை எடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதில் உப்பை போட்டு கரைத்து விட வேண்டும். மஞ்சளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இப்படி செய்தால் சீக்கிரத்திலேயே கடன் பிரச்சனைகள் தீர்ந்துவிடும். இதே போல 48 நாட்களுக்கு ஒரு முறை செய்து வந்தால் நிச்சயமாக கடன் பிரச்சினைகள் தீரும்.
இதனையும் படியுங்கள் : கடன் தீர்க்கும் விநாயகர் பரிகாரம்!!


