கனவன் மனைவி சண்டையால் போர்களமாக இருக்கும் வீடு பூங்காவாக மாற சமையல் அறையில் இதை செய்யுங்கள்!

- Advertisement -

இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் அந்த பிரச்சனைகள் எல்லாம் நொடிப் பொழுதில் அவன் மறந்து விடுவான் வீட்டில் இருக்கும்போது. ஆனால் தற்போதைய நாட்களில் வீட்டில் இருக்கும் பிரச்சனையே பெரிய பிரச்சினையாக இருக்கிறது. எப்பொழுது பார்த்தாலும் சண்டையும் சச்சரவுமாக இருக்கும். குறிப்பாக கணவன் மனைவிக்குள் நடைபெறும் சண்டைகள் தான் அதிகம். இப்படி வீட்டுக்குள் வந்தாலே மனிதனின் நிம்மதி சந்தோஷம் அனைத்தும் பறிபோய் விடுகிறது. இதையெல்லாம் நடக்காமல் செய்து குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவுவதற்காக என்ன செய்ய வேண்டும் என்பதை தான் நாம் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் பார்க்க போகிறோம்.

-விளம்பரம்-

வீட்டை கோவில் போல

நம்முடைய முன்னோர்கள் பல விஷயங்களை நமக்கு சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்கள். அப்படி அவர்கள் சொல்லி சென்ற விஷயம் தான் வீட்டையும் கோவில் போல வைத்திருக்க வேண்டும் என்று. ஏனென்றால் நாம் இப்பொழுது ஒரு கோவிலுக்கு செல்கிறோம் என்றால் எவ்வளவு பிரச்சனை, மன அழுத்தம் இருந்தாலும் கூட கோவிலுக்கு செல்லும்போது ஒரு மன அமைதி கிடைக்கும். நமக்கு இருக்கும் துன்பங்கள் எல்லாம் அப்படியே கரைந்து போய்விடும். அப்படி கோவில்களில் இருக்கும் சூழ்நிலை வீட்டில் இருக்கும் போது வீட்டிலும் எப்போதும் மகிழ்ச்சியும் நிம்மதியும் மட்டுமே இருக்கும். ஆனால் வீட்டிற்குள் வந்தாலே கணவன் மனைவி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு எரிச்சலுடன் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள்.

- Advertisement -

சமையல் அறை விளக்கு

இப்படி கணவன் மனைவி தினம் தோறும் ஒருவருக்கொருவர் எரிச்சலும், வன்மத்துடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் வீட்டில் இருப்பவர்களின் நிம்மதி தான் கேடும் அதனால் இந்த கணவன் மனைவி சண்டை தீர வேண்டும் என்றால் அவர்களின் குல தெய்வத்தை வேண்டி ஒரு தீபம் ஏற்ற வேண்டும் என்று சாஸ்திரங்கள் நமக்கு சொல்கின்றனர். இப்படி இந்த விளக்கை ஏற்றுவது வீட்டில் உள்ள பெண்களாக மட்டும் இருக்க வேண்டும் அதுவும் இந்த விளக்கை ஏற்ற உங்கள் வீட்டின் சமையலறையில் தென்கிழக்கு மூலையில் உங்கள் குல தெய்வத்தின் திருவுருவப்படத்தை வைத்து அதற்கு முன் இந்த விளக்கை ஏற்ற வேண்டும் இந்த விளக்கை நீங்கள் காலையில் சூரிய உதயம் பின் மாலை சூரிய அஸ்தமனத்தின் போது மட்டும் ஏற்ற வேண்டும்.

குலதெய்வம் தெரியாதவர்கள்

இன்றைய நாட்களில் ஒரு சிலருக்கு அவர்களை குலதெய்வமே எதுவென்று தெரியாது அவர்கள் எப்படி இந்த பூஜை செய்வது என்று கேட்டால் உங்களின் இஷ்ட தெய்வத்தை மனதார வேண்டிக் கொண்டு சமையலறை தென்கிழக்கு மூலையில் இந்த அகல விளக்கு ஏற்றி வைக்கலாம். மேலும் சமையல் அறையில் நாம் அடிக்கடி அசைவம் சமைக்கும் அந்த இடங்களில் குலதெய்வத்தின் படத்தை வைப்பது தவறில்லையா என்று கேட்டால் நிச்சயமாக தவறுல்லை குலதெய்வத்திற்கு அசைவம் சைவம் என்றெல்லாம் வரமுறை கிடையாது அதனால் தாராளமாக குலதெய்வத்தின் படத்தை சமையல் அறையில் வைத்து விளக்கேற்றலாம்.

குலதெய்வம்

பெரும்பாலும் வீட்டில் எப்போதும் சண்டை சச்சரவுகள் என பிரச்சினைகளாக இருக்கிறது என்றால் முதலில் குலதெய்வத்தின் கோபமாகத்தான் இருக்கும் வெகு நாட்களாக குலதெய்வத்தை பூஜை செய்யாமலும், கோவிலுக்கு செல்லாமல் இருந்திருப்போம் இதனால் கூட இருக்கலாம் அல்லது உங்கள் வீட்டில் கெட்ட சக்திகள், மாந்திரீக சக்திகள், மற்றும் கண் திருஷ்டி என இது போன்று உங்கள் கண்ணுக்கு தெரியாத சக்திகள் உங்கள் வீட்டில் இருந்தாலும் இது போன்ற கணவன் மனைவி சண்டை , குடும்பத்திற்குள் தகராறு போன்ற போன்ற பிரச்சனைகள் வரும்

-விளம்பரம்-

மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும்

அதனால் சமையலறையில் இது போன்ற உங்கள் குலதெய்வத்தை வைத்து மேலே சொன்னபடி இந்த தீபத்தை ஏற்றி வைத்தால் மட்டும் போதும் உங்கள் வீட்டில் எவ்வளவு நாள்களாக இருந்த சண்டை சச்சரவுகள் குறிப்பாக கணவன் மனைவி சண்டைகள் தீர்ந்து உங்கள் வீட்டில் ஒரு மாற்றம் நிகழும் வீட்டில் நிம்மதியும் சந்தோசமும் நிலைத்திருக்கும். இப்படி சண்டை இல்லாமல் சந்தோஷமாக நிம்மதியும் நிலைத்திருக்கும் வீட்டில் அனைத்து விதமான செல்வங்களும் பெருக தொடங்கும். அதனால் நம்பிக்கையோடு இதை செய்து பாருங்கள் நல்ல பலனை கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here