
பண வசியம் கிடைப்பதற்கு தாந்த்ரீக பரிகாரங்கள் உள்ளது. இவற்றை வட இந்திய மக்கள் பின்பற்றியே செல்வந்தராகவும் இருக்கிறார்கள். பண வசியம் உண்டாக பெண்கள் ஆன்மீக ரீதியாக ஒரு சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும். வீட்டில் மகாலட்சுமி தாயார் நிரந்தரமாக வாசம் செய்ய வேண்டும் என்றால் அந்த வீட்டில் உள்ள பெண்கள் மிகவும் மென்மையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும். பெண்களுக்கு பணம் வசியம் ஆகுவதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பெண்கள் செய்ய வேண்டியவை
பெண்களுக்கு பணம் அதிகமாக வசியம் ஆவதற்கு செவ்வாய், வெள்ளி, சனி போன்ற நாட்களில் வீட்டில் விளக்கேற்றி பூஜை செய்வது மிகவும். முக்கியம் துளசி இலை வில்வ இலை கலந்த தண்ணீரை குலதெய்வ வழிபாட்டிற்கு தயார் செய்து கொண்டு வைக்க வேண்டும். கற்கண்டு நெய்வேதியம் ஆக படைத்து கற்பூரம் ஏற்றி தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
வாரத்துக்கு ஒரு முறையாவது வீட்டில் இருக்கக் கூடிய துடைப்பம் செருப்பு அனைத்தையும் சூரிய ஒளி படுமாறு வைக்க வேண்டும் ஏனென்றால் தொடப்பத்தில் மகாலட்சுமி தேவியார் வாசம் செய்வதாக கூறப்பட்டுள்ளது. அறுந்து போன செருப்புகளை வீட்டில் வைக்க வேண்டாம் குப்பையில் போட்டு விடுங்கள் எப்போதும் சுத்தமாக வீட்டை வைத்திருக்க வேண்டும்.
சனிக்கிழமை என்று பெண் கல்வி துடைக்க வேண்டும் துடைக்கும் போது உப்பு பரிகாரம் எலுமிச்சை சாறு சேர்த்து துடைத்து வர தரித்திரம் பீடை அனைத்தும் அழிந்து போகும்.
பெண்கள் வெள்ளிக்கிழமைகளில் தலைக்கு குளிப்பு சுத்தமாக இருக்க வேண்டும். மகாலட்சுமி தேவியாருக்கு நெய் தீபம் ஏற்றி பூஜை செய்து பால் பாயசத்தை நெய்வேதியம் ஆக வைக்க வேண்டும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இப்படி செய்து வந்தால் வீட்டில் தனம் தானியம் சேரும் வறுமை நீங்கும் சண்டை சச்சரவுகள் குறையும்.
முக்கியமாக வெள்ளிக்கிழமை செவ்வாய்க்கிழமையன்று சாம்பிராணி புகை போடுவது மிகவும் நல்லது பசுஞ்சாண வறட்டி எடுத்து தூளாக்கி அதனுடன் கிராம்பு, துவரம் பருப்பு, பச்சை கற்பூரம் சேர்த்து ஏலக்காயையும் தட்டி சேர்த்து தூபம் போட்டு வீடு முழுவதும் அந்த புகையை காட்ட வேண்டும். வீட்டில் இருக்கக்கூடிய மூலை முடுக்குகள் கட்டிலுக்கு கீழே படுக்கைக்கு கீழே சமையலறையில் என வீடு முழுவதும் காட்ட வேண்டும். இதனால் பெண்களுக்கு பண வசியம் உண்டாகும் தனம் தானியம் பெருகும் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவே இருக்காது.
இதனையும் படியுங்கள் : நகை சேர பெண்கள் செய்ய கூடாத தவறுகள்



