கோவிலில் சாமி முன் இந்த முறை படி பிராத்தனை செய்யுங்கள் நினைத்தது நடக்கும்!

- Advertisement -

நமக்கு எப்பொழுது எந்த பிரச்சனை எந்த ரூபத்தில் வந்தாலும் நாம் அந்த பிரச்சனைகளை முடிக்கவும் அதிலிருந்து முழுமையாக விடுபட்டு வெளியே வருவதற்கும் நாம் செய்யும் முதல் காரியம் தெய்வத்திடம் சரணடைந்து பிரார்த்தனை செய்து நம் குறைகளை கூறி, வேண்டிய வரங்களை பெற்றுக் கொள்வோம் அது மட்டும் இல்லாமல் நமது வாழ்க்கையில் செய்யும் சில சிறிய தவறுகளுக்கும் தெய்வத்திடம் சென்று அதற்கான பரிகாரங்களையும் செய்து புண்ணியத்தை தேடி கொள்வோம். ஆனால் கோவிலில் சாமியிடம் வேண்டுவதாக இருந்தாலும் பரிகாரம் செய்வதாக இருந்தாலும் அதற்கு ஒரு முறை இருக்கிறது அந்த முறைப்படி நீங்கள் இறைவனிடம் வேண்டினால் கண்டிப்பாக அது நிறைவேற்றப்படும். அந்த முறைப்படி பரிகாரம் செய்தாலும் தெய்வம் அதை முழுமையாக ஏற்றுக்கொள்ளும். அதனால் இன்று கோவிலில் தெய்வத்தின் முன் எப்படி பிரார்த்தனை செய்வது, வேண்டுவது பற்றி தான் நாம் இந்த ஆன்மீகம் குறித்த செய்தி தொகுப்பில் நாம் காண இருக்கிறோம்.

-விளம்பரம்-

கோவிலுக்கு சென்றால் தெய்வம் முன் மண்டியிட்டு வேண்டு என்ற நிறைய பேர் சொல்லி நாம் கேட்டிருப்போம் ஆனால், நம்மில் எத்தனை பேர், இந்த முறையில் தெய்வம் முன் மண்டியிட்டு வேண்டி உள்ளனர் என்பது தெரியாது. ஆனால் அடுத்தமுறை நீங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்றாலும் அல்லது வேறு ஏதாவது உங்களுக்கு பிடித்த தெய்வத்துடைய கோவிலுக்கு சென்று வேண்டினாலும் தெய்வத்தின் முன் முட்டி போட்டு உங்கள் பிராத்தனைகளை வையுங்கள். நீங்கள் தெய்வத்தின் சன்னிதானத்திற்கு முன்பு மண்டி போட்டு இரு உங்கள் இரு கைகளையும் ஏந்தி உங்களுடைய பிரச்சனையை மற்றும் குறைகளை கடவுளிடம் சொல்லி வேண்டிய வரங்களை பெற்று கொள்ளுங்கள். இப்படி முட்டி போட்டு வேண்டினால் தெய்வம் நாம் கேட்டதை உடனே கொடுக்கும் என சொல்லபடுகிறது.

- Advertisement -

இப்படி நீங்கள் எந்த தெய்வத்தின் கோவிலுக்கு சென்றாலும் முழங்கால் போட்டு மண்டி இட்டு, உங்களின் இரு கைகளையும் ஏந்தி வேண்டுதல் வைக்கும் போது உங்களுடைய வேண்டுதலை தெய்வம் சீக்கிரம் ஏற்றுக் கொள்ளும் அதே நேரம் அந்த வேண்டுதல் சீக்கிரம் தெய்வத்தால் நிறைவேற்றியும் தரப்படும் என்பது காலம் காலமாக மக்களிடம் உள்ள நம்பிக்கை. நீங்கள் நிறைய கோவில்களில் சிலர் தெய்வத்திற்கு வேண்டுதல் வைத்து முழங்கால் மண்டியிட்டு கோவிலை சுற்றி வளம் வருவார்கள் அல்லது கோவில் படி ஏறி, தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். இப்படி எல்லாம் கூட தெய்வத்திற்கு பிராத்தனை செய்யாலாம் என்று நம்முடைய சாஸ்திரங்கள் கூறுகிறது.

இருந்தாலும் உங்களுடைய உடம்பை பிராத்தனை செய்கிறேன் என்ற பெயரில் வருத்திக் கொண்டு நீங்கள் முழங்கால் இட்டு கோவிலை சுற்றியோ அல்லது கோவில் படிகட்டிலோ நடக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. தெய்வத்தின் சன்னிதானத்திற்கு முன்பே மண்டியிட்டு தெய்வத்ததை முழு நம்பிக்கையோடு நினைத்து மனதார வேண்டிக் கொண்டாலே போதும். நீங்கள் நினைத்தது நிச்சயமாக ஒரு மண்டலத்தில் நடக்கும் அதாவது 48 நாட்களுக்குள் அது நடக்கும். நீங்களும் உங்கள் இஷ்ட தெய்வத்தை நினைத்து முழு நம்பிக்கையோடு வேண்டுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here