சனி பகவான் (சனீஸ்வரன்) ஜோதிடத்தில் கூறப்படும் நவக்கிரகங்களில் ஒருவராவார். சனி கொடுத்தாலும் சரி, கெடுத்தாலும் சரி, அதை யாராலும் தடுக்க முடியாது. நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமான பாவக்கிரகமாக சனி கருதப்படுகிறார். நவகிரகங்களில் ஆயுள்காரகன் என போற்றப்படுபவர் சனீஸ்வர பகவான். ஒருவரின் ஆயுள் நீடிக்கவும், கர்ம வினைகள் நீங்கவும் காரணமாக இருப்பவர் சனீஸ்வர பகவான் தான். இவர் மந்தன், மகேசன், ரவிபுத்ரன், நொண்டி, முடவன், ஜடாதரன், ஆயுள் காரகன் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். இவர் சூரிய தேவன் – சாயா தேவி தேவி தம்பதியினருக்கு பிறந்தவர். இவரது ஒவ்வொரு அசைவும் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக கருதப்படுகின்றது.
சனி பகவான் தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் உள்ளார். அவர் 2023 ஆம் ஆண்டு கும்பத்தில் பெயர்ச்சி ஆனார். இந்த ஆண்டு முழுதும் அவர் கும்பத்திலேயே இருப்பார். இத்னிடையே கடந்த ஜூன் 30 சனி பகவான் கும்பத்திலேயே வக்ர பெயர்ச்சி அடைந்தார். இது ஒரு மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாகும. சனி சுமார் நான்கரை மாதங்கள் அதாவது நவம்பர் 15-ம் தேதி வரை வகர் நிலையில் இருப்பார். அதன் பிறகு அவர் வக்ர நிவர்த்தி அடைவார். இதனால் இந்த காலக்கட்டத்தில் எந்த ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் அதிர்ஷ்டம் கிடைக்க வாய்ப்புள்ளது என்று இந்த ஆன்மீகப் பதிவில் காணலாம்.
மேஷம்

சனி வக்ர பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு சுப பலனை அளிக்கும். தொழிலில் பல ஆர்டர்களைப் பெறலாம், இதனால் நிதி ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சொந்தமாக வீடு கட்டும் வாய்ப்பு வரும். புதிய வேலை கிடைக்கும். நிலம் வாங்கும் வாய்ப்புகள் வரும். கடன்களை அடைப்பீர்கள் . இத்தனை காலம் நிலவிய கடன்களுக்கு முடிவு வரும். நீங்கள் முன்னெடுக்கக்கூடிய எந்த ஒரு வேலையிலும் நல்ல வெற்றியை எதிர்பார்க்கலாம். வியாபாரம் செய்யக்கூடியவர்களுக்கு நல்ல லாபமும், வெற்றியும் கிடைக்கும்.
சிம்மம்

சனி வக்கர பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல செய்திகளைத் தரும். ஆரோக்கியத்தில் சில ஏற்ற தாழ்வுகள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல உறவு இருக்கும். இத்தனை காலம் குழந்தை இல்லாமல் போனவர்களுக்கு குழந்தை பிறப்பு ஏற்படும். எதிர்காலத்தை புரட்டி போடும் அந்த ஒரு சம்பவம் கண்டிப்பாக நடக்கும். மிக மோசமான பொருளாதார சூழ்நிலை, கழுத்தை நெறிக்கும் கடன், குழந்தைகள் வாழ்க்கையில் பிரச்சனை என்று பல பிரச்சனைகளில் இருந்த உங்களுக்கு பிரச்சனைகள் தீர போகிறது.
கன்னி

சனியின் வக்ர பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு பல நல்ல செய்திகளைக் கொண்டு வரும். படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். முக்கியமாக இது வேலை ரீதியாக நீங்கள் சிம்மாசனத்தில் அமரும் காலம். உங்களுக்கு பல புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். ஒன்றல்ல, இரண்டல்ல பல நல்ல வேலைகள் உங்கள் வீட்டை தேடி வரும். குடும்ப உறவுகள் மேம்படும். உங்களின் செல்வ நிலை அதிகரிக்கும். பணியிடத்தில் மதிப்பு அதிகரிக்கும்.
துலாம்

சனி வக்ர பெயர்ச்சியால் துலா ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். வியாபாரம், தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். புரமோசன் கிடைக்கும். கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். மூன்றாவது குழந்தைக்கு வாய்ப்பு உள்ளது. வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற நல்ல வேலை அமையும். திட்டமிட்ட பணிகளில் நல்ல முன்னேற்றமும், அதன் மூலம் வருவாயும் ஏற்படும்.
விருச்சிகம்

சனி வக்ர பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு லாபகரமான பலனைத் தரும். பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் காணலாம். வேலை இல்லை, வருமானம் இல்லை என்ற நிலை பலருக்கும் இருந்திருக்கும். இனி இதனால் உங்களுக்கு பண மழை கொட்டும் என்பார்களே அது இப்போது வரப்போகிறது. இதனால் பணம் உங்களுக்கு கொட்டோ கொட்டு என்று கொட்டும். உங்கள் திட்டங்களில் நல்ல வெற்றியை எதிர்பார்க்கலாம். பழைய முதலீடுகள் மூலம் நல்ல லாபம் உங்களுக்கு கிடைக்கும்.
இதனையும் படியுங்கள் : சூரியன் பெயர்ச்சியால் ஆடி மாதம் அட்டகாசமான அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள்!


