- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
பொதுவா அசைவம் சமைக்க முடியாத நேரத்துல அதுக்கு சமமாக இருக்கிற மாதிரி சைவத்திலேயே ஏதாவது ஒரு சூப்பரான ரெசிபி தேடிட்டே இருப்பீங்க. அப்படி நீங்க தேடும் போது இந்த சேனைக்கிழங்கு சாப்ஸ் ரெசிபியை கண்டிப்பா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாத்துருங்க அசைவமே தோத்துப் போயிடும் அந்த அளவுக்கு ரொம்ப ருசியா இருக்கும். ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க சிக்கன் மட்டன் கூட இந்த சுவைக்கு ஈடாகாது. சிக்கன் கிரேவி சிக்கன் சுக்கா மட்டன் சுக்கா இது எல்லாத்துக்கும் போட்டியாக இந்த ரெசிபி இருக்கும்.
சுட சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட ரொம்ப ருசியா இருக்கும். தயிர் சாதம் ரசம் சாதம் எல்லாத்துக்குமே சூப்பரா இருக்கும். பொதுவா இந்த ரெசிபியை விசேஷ வீடுகளில் நிறைய பேரு சாப்பிட்டு இருப்பீங்க அந்த மாதிரி விசேஷ வீடுகளில் சாப்பிட்டு விட்டு வீட்டிலயும் அதே மாதிரி சாப்பிடணும் அப்படின்னு தோணுச்சுன்னா இந்த ரெசிபியை மிஸ் பண்ணாம செஞ்சு பாருங்க. இந்த டேஸ்டான ருசியான சேனைக்கிழங்கு சாப்ஸ் ரெசிபி கண்டிப்பா எல்லாருமே விரும்பி சாப்பிட வேண்டிய ஒரு ரெசிபி.
இந்த சேனைக்கிழங்கு சாப்ஸ் ரெசிபி கண்டிப்பா வீட்ல இருக்க கூடிய சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் இதுக்கு நம்ம பிரஷ்ஷா ஒரு மசாலா வறுத்து அரைச்சு செய்யப்போறோம். அந்த மசாலாவை வைத்து செய்யும் போது இந்த ரெசிபி அட்டகாசமா இருக்கும். ஒரே ஒரு தடவை இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க. இப்ப வாங்க இந்த சுவையான சேனைக்கிழங்கு சாப்ஸ் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : மாலை நேர ஸ்நாக்ஸாக சேனைக்கிழங்கு பக்கோடா இப்படி ஒரு தரம் வீட்டிலயே செய்து பாருங்க!
Ingredients
Method
ஒரு பாத்திரத்தில் புளியை கரைத்து மஞ்சள் தூள் சேர்த்து உப்பு சேர்த்து சேனைக்கிழங்கு சேர்த்து அரைவேக்காடு வேக வைத்து எடுக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பட்டை, கிராம்பு, சீரகம் ஒரு டீஸ்பூன் சோம்பு, மிளகு, ஒரு பெரிய வெங்காயம் ,கருவேப்பிலை, தேங்காய் துருவல் வேர்க்கடலை அனைத்தையும் சேர்த்து மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி ஆறவைத்து அரைத்துக் கொள்ளவும்.
அதே கடாயில் எண்ணெய் சேர்த்து ஒரு டீஸ்பூன் சோம்பு, கருவேப்பிலை,நறுக்கிய பெரிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
பிறகு சேனைக்கிழங்கு சேர்த்து எண்ணெயிலேயே நன்றாக வதக்கி அரைத்து வைத்த விழுது மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவைத்து எண்ணெய் பிரிந்து வந்ததும் கொத்தமல்லி இலைகள் மிளகுத்தூள் சேர்த்து இறக்கினால் சுவையான சேனைக்கிழங்கு சாப்ஸ் தயார்.






