மேஷம்

மேஷ ராசியினருக்கு முயற்சிகள் வெற்றி தரும் வாரம் இது.தொழில் மற்றும் வியாபார துறையினர் பரபரப்பாக செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் முக்கியத்துவம் பெறுவார்கள். பெண்மணிகளுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். உறவினர்கள், நண்பர்கள் அனுகூலமாக இருப்பார்கள். ஆன்மிகப் பயணத்திற்கு வாய்ப்பு உண்டு. ஆடை ஆபரணங்கள், வாகனம் வாங்க வாய்ப்புகள் கிடைக்கும். அரசாங்க காரியங்களில் அனுகூலத்தைத் தரும். சுபகாரியங்கள் பூர்த்தியாகும். பூமி லாபம் கிடைக்கும். கட்டிய வீடு பழுது பார்ப்பீர்கள். கொடுக்கல் வாங்கல்கள் சுகமாக இருக்கும். நண்பர்களிடம் பேசும் போது எச்சரிக்கை தேவை. பிள்ளைகள் விஷயத்தில் கவனம் தேவை. சகோதர உறவுகளிடையே சற்று உரசல்கள் வந்து நீங்கும்.
ரிஷபம்

ரிஷப ராசியினருக்கு உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும் காலகட்டம் இது. வியாபாரிகள், தொழில்துறையினர் எதிர்பார்த்த லாபத்தை பெறுவார்கள். உத்தியோகஸ்தர்கள் வழக்கத்தை விட கூடுதலாக பணியில் ஈடுபடும் சூழல் ஏற்படும். தாமதங்களை சந்தித்த பல நல்ல விஷயங்கள் இந்த வாரம் நடந்தேறும். இருபால் நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் அமைப்புகளில் புதிய சிந்தனை பிறக்கும். முக்கியமான முடிவுகளை மேற்கொள்வீர்கள். தொழில் போட்டிகள் குறையும். சகோதர உறவுகள் சுமுகமாகும். ஆலய வழிபாட்டுக்கு வாய்ப்பு உண்டு. துணிவான முடிவுகளை எடுப்பீர்கள். தாயாரின் உடல் நலனிலும் கவனம் செலுத்தவும். வம்பு வழக்குகள் வரும். கவனமாகக் கையாளா விட்டால் சிக்கல் தான்.
மிதுனம்

மிதுன ராசியினருக்கு முயற்சிகள் தடைகளைக் கடந்து வெற்றி தரும் வாரம் இது. தொழில்துறையினர், வியாபாரிகள், உத்தியோகஸ்தர்கள் எந்த ஒரு விஷயத்தையும் நேரடியாக கண்காணிக்க வேண்டும். தொழில், வியாபார விரிவாக்க முயற்சிகளை சிறிது காலம் ஒத்தி வைக்க வேண்டும். கல்வித் துறையினர் எதிர்பார்த்த அங்கீகாரத்தை பெறுவார்கள். முயற்சியைக் கைவிட மாட்டீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வேலையில்லாதவருக்கு புதிய உத்தியோகம் கிடைக்கும். கோயில்களுக்கும் வழிபாட்டுத் தலங்களுக்கும் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். நிலம் வீடு விஷயங்களில் லாபம் கிடைக்கும். தேவையில்லாத வம்பு வழக்குகள் வரும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். நல்லது செய்யப்போய் கெட்ட பெயர் வாங்கும் அமைப்பு உண்டு.
கடகம்

கடக ராசியினருக்கு லாபகரமான வாரம் இது. வியாபாரிகள், தொழில் துறையினர் சிரமப்பட நேர்ந்தாலும் அதற்கேற்ற ஆதாயம் இருக்கும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்ல வேண்டும். புதிய தொடர்புகள், நண்பர்கள் மூலம் நன்மைகள் ஏற்படும். சிலருக்கு நல்லவிதமாக இடமாற்றங்கள் ஏற்படும். வெளிநாடுகளிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும். வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். ஊரை விட்டு அதிக தூரம் தள்ளி உத்தி யோகம் செய்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டு. ரியல் ஸ்டேட் வியாபாரங்கள் நல்ல திருப்பத்தை தரும். வீண் குழப்பங்களால் சங்கடங்கள் வரும். தந்தை மகன் உறவுகளில் கவனம் தேவை.
சிம்மம்

சிம்ம ராசியினருக்கு பொருளாதார ரீதியாக அனுகூலமான காலகட்டம் இது. தொழில்துறையினர், வியாபாரிகள் எதிர்பார்த்த ஆதாயத்தை அடைவார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியிடங்களில் தங்களுக்கான அங்கீகாரத்தை பெறுவார்கள். செலவுகளுக்கு ஏற்ற பண வரவும் இந்த வாரம் உண்டு. அரசு ஒப்பந்ததாரர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். துணிச்சலான எண்ணங்களை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் வரும். சுபகாரியத் தடைகள் விலகும். நல்ல காரியங்கள் தொடங்குவதற்கு வாய்ப்புகள் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சி வெற்றி அடையும். வீடுகளை மாற்ற வாய்ப்புகள் கிடைக்கும். பேச்சில் கவனமாக இல்லாவிட்டால் பிரச்னைகள் வெடிக்கும். யாருக்கும் ஜாமின் கையெழுத்து போட வேண்டாம். அவசர காரியங்களில் இறங்கி அவஸ்தைப்படாதீர்கள்.
கன்னி

கன்னி ராசியினருக்கு பெரியோர் ஆசிகள் கிடைக்கும் காலகட்டம் இது. தொழில் வியாபாரம் நல்ல முறையில் இயங்கும். தொழில்துறையினர், வியாபாரிகள், உத்தியோகஸ்தர்கள் வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டும். புதிய நபர்கள் தொடர்பினால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். முயற்சிகள் வெற்றியடையும் வரை அமைதியாக காத்திருக்க வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி சந்தோஷம் நீடிக்கும். மருத்துவச் செலவுகள் குறையும். மகிழ்ச்சியாகச் செலவு செய்யும் அமைப்பு உண்டு. ஆன்மிக பயணத்திற்கான வாய்ப்பு உண்டு. புதிய தொழில் முயற்சிகள் இப்போது வேண்டாம். எந்த விஷயத்திலும் மூக்கு நுழைத்து கருத்துக்களைச் சொல்ல வேண்டாம். முன் கோபமும் அவசர முடிவும் தவறான சொற்களும் சங்கடங்களைத் தரும்.
துலாம்

துலாம் ராசியினருக்கு மனதில் புதிய சிந்தனைகள், எண்ணங்கள் உருவாகும் வாரம் இது. தொழில் துறையினர், வியாபாரிகள், உத்தியோகஸ்தர்கள் கூடுதலாக உழைக்க வேண்டிய காலகட்டம். குடும்ப பொறுப்புகள் அதிகமாகும். அரசியல், அரசாங்க விஷயங்களில் எதிர்பார்த்த காரியங்கள் கைகூடிவரும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பொருளாதார ஏற்றங்கள் உண்டு. ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு. பழைய நகைகளைப் போட்டுவிட்டு புதிய நகைகளை வாங்கும் ஆர்வம் அதிகரிக்கும். சேமிப்பு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். வாகனங்களை இயக்கும் போது கவனம் தேவை. தவிர்க்க முடியாத மருத்துவச் செலவு வரலாம்.
விருச்சிகம்

விருச்சிக ராசியினருக்கு மனதில் உற்சாகம் ஏற்படும் காலகட்டம் இது. புதிய முதலீடுகளை மேற்கொள்வீர்கள். வியாபாரிகள் எதிர்பார்த்த லாபத்தை அடைவார்கள். உத்தியோகஸ்தர்கள் விரும்பிய பணியிட மாற்றம் மற்றும் ஊதிய உயர்வை பெறுவார்கள். நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். முயற்சிகள் எதிர்பாராத வெற்றி தரும். தொழில் வியாபாரம் சிறப்படையும். உத்தியோகஸ்தர்கள் இடமாற்றம் பெறுவார்கள். வீடு வாகனம் முதலிய விஷயங்களில் லாபம் கிடைக்கும். பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடுகள் வேண்டாம். விட்டுக் கொடுத்துச் செல்லவும். தாயார் உடல்நிலையில் கவனம் தேவை. வீண் விவாதங்களில் நேரத்தைச் செலவழிக்க வேண்டாம்.
தனுசு

தனுசு ராசியினருக்கு பொருளாதாரம் திருப்திகரமாக உள்ள வாரம். தொழில் துறையினர், வியாபாரிகள் திட்டமிட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வது அவசியம். கல்வித்துறையில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் உதவுவார்கள். ஆன்மீக நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகளை பெறலாம். திருமணமாகி குழந்தைச் செல்வத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல நேரம். பெரியவர்களின் வழிகாட்டுதல் உண்டு. தந்தை மகன் கருத்து வேறுபாடுகள் வரலாம் பேச்சில் கவனம் தேவை. வீடு மனை பத்திரப்பதிவு முதலிய விஷயங்களில் எச்சரிக்கையுடன் செயல்படவும்.
மகரம்

மகர ராசியினருக்கு மனதில் உற்சாகம் ஏற்படும் வாரம் இது. தொழில்துறையினர் தடைதாமதங்களுக்கிடையில் புதிய திட்டங்களை செயல்படுத்துவார்கள். வியாபாரிகள் லாபம் அடைவார்கள். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் இருக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. புதிய தொடர்புகளால் எதிர்பாராத வாய்ப்புகளை பெறுவார்கள். ஷேர் மார்க்கெட் லாபம் தரும். இல்லத்தரசிகள் மனதில் உற்சாகம் ஏற்படும். உறவுகளில் உள்ள சிக்கல்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். எல்லோரிடமும் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். யார் விஷயத்திலும் தலையிட வேண்டாம். பெண்கள் விஷயத்தில் கவனம் தேவை.
கும்பம்

கும்ப ராசியினருக்கு விடாமுயற்சியோடு செயல்பட்டு வெற்றி பெறும் வாரம் இது. உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை கூடும். தொழில் துறையினர், வியாபாரிகள் நேரம் காலம் பார்க்காமல் உழைக்க வேண்டும். தேவைக்கேற்ற பணம் கிடைக்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். சுப காரியங்கள் தடையின்றி நடைபெறும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் வியாபாரம் நல்லபடியாக நடக்கும். எதிர்பாராத பண வரவுகள் வரலாம். வீடு மனை வாங்கும் யோகமும் உண்டு. முன் கோபத்தை விட வேண்டும். அரசாங்க விரோதம் வேண்டாம். அரசாங்க காரியங்களில் சுணக்கம் ஏற்படும். நட்பு வட்டாரங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இந்த வாரம் முதலீடுகளை தவிர்க்க வேண்டும். செலவினங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும்.
மீனம்
மீன ராசியினருக்கு தகவல் தொடர்பு மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும் காலகட்டம் இது. தொழில் துறையினர், வியாபாரிகள் புதிய வாடிக்கையாளர்கள் மூலம் ஆதாயம் அடைவார்கள். உத்தியோகஸ்தர்கள் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பார்கள். தடைபட்ட வேலை நடக்கும். வழக்கு முடிவிற்கு வரும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்துடன் நேரத்தை செலவிட உங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கு சாதகமாக பலன் கிடைக்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். உறவினர்கள் மூலம் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். ஒப்பந்தங்கள் சில கைநழுவிப் போகலாம் கவனத்தோடு இருக்க வேண்டும். பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
இதனையும் படியுங்கள் : உத்திர நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாகும் சூர்ய பகவான் இனி இந்த ராசிகளுக்கு பணமழை தான்!!


