வாராந்திர ராசிபலன் 9 செப்டம்பர் 2024 முதல் 15 செப்டம்பர் 2024 வரை

- Advertisement -

மேஷம்

இந்த வாரம் மேஷ ராசிக்காரர்கள் உணவு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். இந்த வாரம் வெற்றி ஒன்றையே குறிக்கோளாக நினைத்து பாடுபடுவீர்கள். பணவரவுக்கு குறைவிருக்காது. குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவ தாக இருக்கும். சகோதர வகையில் இருந்து வந்த சச்சரவுகள் மறைந்து சுமுகமான உறவு உண் டாகும். நீதிமன்றத்தில் வழக்குகள் இருந்தால், சாதகமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் கூடுதலாகக் கிடைக்கும். பணியாளர்கள் நல்லமுறையில் பணி செய்வார்கள்.

-விளம்பரம்-

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் இந்த வாரம் மற்றவர்களுடன் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். இந்த வாரம் அரசாங்க வேலையோ தனியார் வேலையோ எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தற்காலிக பணியிடை நீக்கம் ஏற்படலாம் அதனால் கவனமாக செயல் படுங்கள். சண்டைகளை மறந்து கணவனும் மனைவியும் மகிழ்ச்சியோடு இருப்பார்கள். எதிர்பாராத வகையில் பண வரவு கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலுக்கு வேண்டிய அரசு அனுமதியை பெறுவீர்கள். இந்த வாரம் பூர்வீக சொத்தில் இருந்த வில்லங்கத்தை தீர்ப்பதற்காக காவல் நிலையத்துக்கு செல்வீர்கள்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மன அமைதி கிடைக்கும். இந்த வாரம் வாகனம் ஓட்டும்போது மிகவும் கவனமாக இருக்கவும்.‌ இந்த வாரம் திட்டம் போட்டு செய்கின்ற காரியங்கள் கூட சில நேரங்களில் எதிர்மறையான பலன்களை கொடுக்கலாம். அதனால் இந்த வாரம் ஏதும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம் இது. அலுவலகத்தில் உங்களின் பணித்திறன் காரணமாக உயர் அதிகாரிகளின் பாராட்டுகளையும் அதனால் பதவி உயர்வு ஊதிய உயர்வு போன்ற சலுகைகளையும் எதிர்பார்க்கலாம்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் இந்த வாரம் அதிக நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். இந்த வாரம் தொழிலதிபர்கள் வேலை விஷயமாக வேறு மாநிலம் செல்ல நேரிடலாம். பொருளாதார வசதி சுமாராகத்தான் இருக்கும். செலவுகளும் குறைவாகவே இருக்கும் என்பதால் பிரச்னை எதுவும் இல்லை. குடும்பம் தொடர்பான எந்த ஒரு முடிவையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கவனமாக இருக்கவேண்டியது மிகவும் அவசியம். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்ப்புகள் ஓரளவு நிறைவேறும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் இந்த வாரம் வேலை சம்மந்தமாக வெளியூர் பயணம் மேற்கொள்ளலாம். அரசாங்க பணியில் உங்களுக்குத் தேவையான உதவிகளை மேலதிகாரிகள் செய்வார்கள். வியாபாரத்தில் சற்று கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும். பற்று வரவு சுமுகமாக நடக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்கள் முயற்சிகளுக்கு சக வியாபாரிகளின் ஆதரவு கிடைக்கும். திருமண முயற்சிகள் சற்று இழுபறிக்குப் பின்னர் சாதகமாக முடியும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள்.

-விளம்பரம்-

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஆரோக்கியத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வைட்டமின்-சி நிறைந்த உணவுகளை தவறாமல் உட்கொள்ளுங்கள். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். எதிர்பார்த்ததை விட பணவரவு அதிகமாக இருக்கும். தேவையற்ற செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. பிறருக்குக் கொடுத்து வராது என்று நினைத்த கடன் வந்து சேரும். உங்கள் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டியது அவசியம். அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமை இழக்காமல் இருப்பது நல்லது.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் இந்த வாரம் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். இந்த வாரம் முழுவதும் உங்கள் நிதி வாழ்க்கை நன்றாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளன. தேவையான அளவுக்கு பணவரவு இருப்பதால் செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது. கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. சக பணியாளர்களால் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் அவர்களுடன் பேசுவதில் எச்சரிக்கை அவசியம்.

விருச்சிகம்

இந்த வாரம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு மன ஆரோக்கியமும் மிகவும் சிறப்பாக இருக்கும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் அடைந்து பொருளாதார வரவு அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்கு கடையை மாற்ற விரும்பினால், அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். பிள்ளைகளால் மதிப்பும் மரியாதையும் கூடும். ஓரளவுக்கு பணப் புழக்கம் இருப்பதால் செலவுகளைச் சமாளித்துவிடுவீர்கள். வாழ்க்கைத்துணைவழியில் மகிழ்ச்சி உண்டாகும்.

-விளம்பரம்-

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் இந்த வாரம் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். உங்கள் வருமானத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது.‌ கணவரின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தரும். பிள்ளைகள் மூலம் சிலருக்கு பணவரவு கிடைக்கக் கூடும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சில சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் அதிகமாக வரும். ஆனாலும் சற்று கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடனுதவி கிடைக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் இந்த வாரம் மன அழுத்தத்தை தரும் வாரமாக இருக்கும். நீண்ட நாட்களாக நெருங்கிய உறவினரை சந்திக்க திட்டமிட்டிருந்தால் இந்த வாரம் அது நிறைவேறும். சிலருக்கு தெய்வப் பணிகளில் கலந்து கொள் ளும் வாய்ப்பு உண்டு. புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வாரப் பிற்பகுதியில் உடல் ஆரோக் கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சந்தோஷமும் நிம்மதியும் தரும் வாரம். புதிய வேலைக்கு முயற்சி செய்துகொண்டு இருப்பவர்களுக்கு நல்ல பதில் கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிதி விஷயத்தில் கவனம் தேவை. இந்த வாரம், உங்கள் குடும்ப வாழ்க்கையில் நடக்கும் அனைத்து சச்சரவுகளும் நீங்கும். பணவரவு திருப்திகரமாக இருப்பதாலும், தேவையற்ற செலவுகள் இல்லை என்பதாலும் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படும். கணவன் -மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். போட்டிகளைச் சமாளிக்க கடுமையாகப் பாடுபடவேண்டி இருக்கும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

மீனம்

மீன ராசிக்காரர்கள் இந்த வாரம் சுறுசுறுப்பாக காணப்படுவார்கள். இந்த வாரம் வேளையில் நீங்கள் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். இந்த வாரம் கல்வித்துறையில் இருந்து வந்த அனைத்து விதமான பிரச்சனைகளில் இருந்தும் விடுபடுவீர்கள். இதன் காரணமாக நீங்கள் மன அழுத்தம் இல்லாமல் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். வியாபாரம் அளவாகவே இருக்கும். சிலருக்கு வியாபார விஷயமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். பங்குதாரர்கள் சில நேரங்களில் பிடிவாதமாக இருந்தாலும் அனுசரித்துச் செல்வது அவசியம்.

இதனையும் படியுங்கள் : இன்றைய ராசிபலன் – 08 செப்டம்பர் 2024!