பாம்பே சட்னி இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க சட்டுனு வேலை முடிஞ்சுரும்!!

- Advertisement -

உடுப்பி ஹோட்டல் ஸ்டைல் பாம்பே சட்னி நிறைய பேர் வீட்ல ட்ரை பண்ணி பார்த்து இருக்கவே மாட்டீங்க. வெறும் மூணு டேபிள் ஸ்பூன் கடலை மாவு வச்சு ஒரு சூப்பரான பாம்பே சட்னி ரெசிபி. நிறைய பேரு ஊத்தி சாப்பிடற மாதிரி செய்ய முடியும். வீட்ல யாராவது டக்குனு ஏதாவது செஞ்சு தர சொல்லி கேட்டாங்கன்னா அவங்களுக்கு இந்த சூப்பரான பாம்பே சட்னி ரெசிபியை செஞ்சு கொடுங்க. அவ்ளோ டேஸ்டா இருக்கும் இட்லி தோசை சப்பாத்தி பூரி அப்படின்னு எல்லாத்துக்குமே ஒரு பெர்பெக்ட்டான காம்பினேஷனா இருக்கும்.

-விளம்பரம்-

உடுப்பி ஹோட்டலில் செய்ற மாதிரி அப்படியே செய்வதற்கு இதே செய்முறையை பின்பற்றி செய்து பாருங்கள். நம்ம வீட்ல இருக்க கூடிய பொருட்களை வைத்து சட்டுனு இந்த ரெசிபியை செஞ்சுடலாம். டேஸ்ட்டும் அட்டகாசமா இருக்கும் அதே நேரத்துல செய்றதுக்கு ரொம்ப ரொம்ப ஈசியா இருக்கும். 10 15 நிமிஷத்துலையே சூப்பரா செஞ்சு முடிச்சிடலாம். நிறைய நேரம் எல்லாம் தேவைப்படாது. வீட்டுக்கு யாராவது டக்குனு விருந்தாளிகள் வந்துட்டாங்கனா சட்னி செய்ற நேரத்துக்கு இந்த சூப்பரான பாம்பே சட்னி செஞ்சுரலாம்.

- Advertisement -

சாப்பிட்டு கண்டிப்பா உங்கள பாராட்டிட்டு தான் போவாங்க. இந்த ரெசிபி தாளிக்கும் போது உங்களுக்கு தேவைப்பட்டால் கடலைப்பருப்பும் சேர்த்துக்கோங்க. கண்டிப்பா சுவை அருமையா இருக்கும். எப்பவுமே இட்லி தோசை சப்பாத்திக்கு ஒரே மாதிரியா சட்னி சாம்பார் செஞ்சு போர் அடிச்சு போச்சுன்னா இந்த மாதிரி ஒரு சூப்பரான பாம்பே சட்னி ரெசிபியை செஞ்சு பாருங்க. இப்ப வாங்க இந்த சுவையான பாம்பே சட்னி ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

Print
No ratings yet

பாம்பே சட்னி | Bombay Chutney Recipe In Tamil

உடுப்பி ஹோட்டல் ஸ்டைல் பாம்பே சட்னி நிறைய பேர் வீட்ல ட்ரை பண்ணி பார்த்து இருக்கவே மாட்டீங்க. வெறும் மூணு டேபிள் ஸ்பூன் கடலை மாவு வச்சு ஒரு சூப்பரான பாம்பே சட்னி ரெசிபி. நிறைய பேரு ஊத்தி சாப்பிடற மாதிரி செய்ய முடியும். வீட்ல யாராவது டக்குனு ஏதாவது செஞ்சு தர சொல்லி கேட்டாங்கன்னா அவங்களுக்கு இந்த சூப்பரான பாம்பே சட்னி ரெசிபியை செஞ்சு கொடுங்க. அவ்ளோ டேஸ்டா இருக்கும் இட்லி தோசை சப்பாத்தி பூரி அப்படின்னு எல்லாத்துக்குமே ஒரு பெர்பெக்ட்டான காம்பினேஷனா இருக்கும். உடுப்பி ஹோட்டலில் செய்ற மாதிரி அப்படியே செய்வதற்கு இதே செய்முறையை பின்பற்றி செய்து பாருங்கள். நம்ம வீட்ல இருக்க கூடிய பொருட்களை வைத்து சட்டுனு இந்த ரெசிபியை செஞ்சுடலாம். டேஸ்ட்டும் அட்டகாசமா இருக்கும்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Total Time15 minutes
Course: chutney
Cuisine: Indian
Keyword: Bombay Chutney
Yield: 5 People
Calories: 153kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 3 டேபிள் ஸ்பூன் கடலை மாவு
  • 1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 3 பச்சை மிளகாய்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1/2 டீஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • கொத்தமல்லி சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் கடலை மாவு உப்பு பெருங்காயத்தூள் சேர்த்து அரை லிட்டர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கட்டிகள் இல்லாமல் கலந்து கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு சீரகம் கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.
  • நறுக்கிய பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • கலந்து வைத்துள்ள கடலை மாவு கரைசல் சேர்த்து மஞ்சள் தூள் கரம் மசாலா சேர்த்து மறுபடியும் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் நன்றாக கொதிக்க வைக்கவும்.
  • இறுதியாக கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான பாம்பே சட்னி தயார்.

Nutrition

Serving: 250g | Calories: 153kcal | Carbohydrates: 3.6g | Protein: 10g | Fat: 4.1g | Sodium: 137mg | Potassium: 85mg | Vitamin A: 72IU | Vitamin C: 114mg | Calcium: 19mg | Iron: 11mg

இதனையும் படியுங்கள் : கடலை பருப்பு சட்னி செய்வது எப்படி