பேக்கரிகளில் கிடைக்கக்கூடிய பிரட் வச்சு பிரட் சாண்ட்விச், பிரட் அல்வா, பிரட் டோஸ்ட், பிரட் ஆம்லெட் இதெல்லாம் செஞ்சு சாப்பிட்டு இருப்போம் ஆனால் பிரட் வச்சு கொஞ்சம் புதுமையா கொத்து பிரட் இந்த மாதிரி செஞ்சு பாருங்க. வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு விழுது இதெல்லாம் சேர்த்து நல்லா வதக்கி இந்த ரெசிபி செய்யும் போது வாசனையாகவும் இருக்கும் டேஸ்டாகவும் இருக்கும். இந்த ரெசிபியை கண்டிப்பாக மிஸ் பண்ணாம நீங்க செஞ்சு பாக்கணும். ரொம்ப பசிக்குது வீட்டில் எதுவுமே இல்லைன்னா முட்டை பிரட் ரெண்டும் இருந்தா போதும் இந்த சுவையான கொத்து பிரட் ரெசிபி ரெடி ஆகிடும். குழந்தைகள் ஸ்கூலுக்கு போயிட்டு வந்து பசிக்குது அப்படின்னு சொல்றாங்கன்னா அவங்களுக்கு இந்த ரெசிபியை செஞ்சு கொடுத்துடுங்க.
டேஸ்டான இந்த கொத்து பிரட் ரெசிபியை கண்டிப்பா குழந்தைகளுக்கு செஞ்சு கொடுங்க மிச்சம் வைக்காம சாப்பிடுவாங்க. காலையில பிரேக்ஃபாஸ்ட்க்கு இந்த ரெசிபியை செஞ்சு கொடுத்து பாருங்க கண்டிப்பா வேண்டாம்னு சொல்லவே மாட்டாங்க. குழந்தைகள் மட்டுமில்லாமல் பெரியவங்களுமே பிரேக் பாஸ்ட்டுக்கு இந்த ரெசிபியை சாப்பிடுவாங்க. இதை ஸ்னாக்ஸ் ஆகவும் சாப்பிடலாம். பிரட் வச்சு செய்யக் கூடிய ரெசிபிஸ்ல இது ரொம்ப ரொம்ப ஈஸியான டேஸ்டான ஒரு அதனால கண்டிப்பா இதை ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க. இப்ப வாங்க இந்த சுவையான ரொம்ப ரொம்ப ஈஸியான கொத்து பிரட் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
பிரட் கொத்து | Bread Kothu Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 5 பிரட்
- 2 முட்டை
- 2 பெரிய வெங்காயம்
- 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1 தக்காளி
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
- 1/2 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 கொத்து கறிவேப்பிலை
- கொத்தமல்லி சிறிதளவு
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம்பருப்பு கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.
- பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- தக்காளியும் சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா, உப்பு சேர்த்து வதக்கவும்.
- பிறகு இரண்டு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறிய பிறகு பிரட் துண்டுகளை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி சேர்த்து பிரட்டி எடுக்கவும்.
- இறுதியாக கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான பிரட் கொத்து தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : இப்போ வைரலா போயிட்டு இருக்க பிரட் தோசை இப்படித்தான் செய்யணும்!