சப்பாத்திக்கு இந்த மாதிரி பட்டர் சிக்கன் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

- Advertisement -

பொதுவா ஒரு சிலர் ஹோட்டலுக்கு போனாங்கன்னா சைவமா இருந்தா நான் பன்னீர் பட்டன் மசாலா சாப்பிடுவாங்க அதே அசைவமாக இருந்தா கண்டிப்பா பட்டர் சிக்கன் தான் சாப்பிடுவாங்க. ஆனா ஒவ்வொரு தடவையும் இந்த காம்பினேஷன் சாப்பிட ஹோட்டலுக்கு போகணும் அப்படின்ற அவசியம் கிடையாது. வீட்டிலேயே சூப்பரா பட்டர் சிக்கன் செய்யலாம். அப்படியே ரெஸ்டாரன்ட் ஸ்டைல்ல வீட்ல இருக்கக்கூடிய பொருட்களை வச்சு சூப்பரான பட்டர் சிக்கன் ரெசிபி செய்யலாம். இந்த பட்டர் சிக்கன் ரெசிபி சாப்பிடறதுக்கு அவ்வளவு ருசியா இருக்கும்.

-விளம்பரம்-

இதுக்கு எலும்பு யூஸ் பண்ணாம தனிக்கறியா போட்டா டேஸ்ட் சூப்பரா இருக்கும். நீங்க உங்க வீட்ல கண்டிப்பா இருக்கிறவர் ட்ரை பண்ணி பாருங்க அப்படியே ஹோட்டல்ல சாப்பிட்ட அதே ஃபீல் கிடைக்கும். இப்ப எல்லாம் ஹோட்டல்ல கிடைக்கிறதை வீட்டிலேயே சூப்பரா செய்யலாம் அந்த வகையில் இந்த பட்டர் சிக்கன் ரெசிபி சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரைக்கும் எல்லாருமே விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு ரெசிபியா இருக்கும். எப்போமே சிக்கன் வச்சு ஒரே மாதிரி செய்யாம இந்த சூப்பரான பட்டர் சிக்கன் ஒரு தடவை செஞ்சு பாருங்க.

- Advertisement -

கண்டிப்பா உங்க வீட்ல இருக்கிற எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தாங்களா இந்த பட்டர் சிக்கன் அவங்களுக்கு சப்பாத்திக்கு சைடிஷ் ஆகவும் பரோட்டாவுக்கு சைடு டிஷ் ஆகவும் செஞ்சு கொடுக்கலாம். தோசை இட்லிக்கு கூட இது சூப்பரா இருக்கும். வீட்ல ஏதாவது சிம்பிளா ஃபிரைட் ரைஸ் செஞ்சீங்கன்னா அதுக்கும் இது ஒரு சூப்பரான காமினேஷன் இருக்கும். வாங்க இந்த ருசியான ஹோட்டல் ஸ்டைல் பட்டர் சிக்கன் எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.

Print
No ratings yet

பட்டர் சிக்கன் | Butter Chicken Recipe In Tamil

பொதுவா ஒரு சிலர் ஹோட்டலுக்கு போனாங்கன்னா சைவமா இருந்தா நான் பன்னீர் பட்டன் மசாலா சாப்பிடுவாங்க அதே அசைவமாக இருந்தா கண்டிப்பா பட்டர் சிக்கன் தான் சாப்பிடுவாங்க. ஆனா ஒவ்வொரு தடவையும் இந்த காம்பினேஷன் சாப்பிட ஹோட்டலுக்கு போகணும் அப்படின்ற அவசியம் கிடையாது. வீட்டிலேயே சூப்பரா பட்டர் சிக்கன் செய்யலாம். அப்படியே ரெஸ்டாரன்ட் ஸ்டைல்ல வீட்ல இருக்கக்கூடிய பொருட்களை வச்சு சூப்பரான பட்டர் சிக்கன் ரெசிபி செய்யலாம். இந்த பட்டர் சிக்கன் ரெசிபி சாப்பிடறதுக்கு அவ்வளவு ருசியா இருக்கும். இதுக்கு எலும்பு யூஸ் பண்ணாம தனிக்கறியா போட்டா டேஸ்ட் சூப்பரா இருக்கும். நீங்க உங்க வீட்ல கண்டிப்பா இருக்கிறவர் ட்ரை பண்ணி பாருங்க அப்படியே ஹோட்டல்ல சாப்பிட்ட அதே ஃபீல் கிடைக்கும்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: dinner
Cuisine: Indian
Keyword: butter chicken
Yield: 4 People
Calories: 127kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 2 டேபிள் ஸ்பூன் பட்டர்
  • 1/2 கி சிக்கன்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 15 முந்திரி பருப்பு
  • 1/2 டீஸ்பூன் சர்க்கரை
  • 1 டீஸ்பூன் கஸ்தூரி மேத்தி
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் பட்டர் சேர்த்து பெரிய வெங்காயம் தக்காளி முந்திரி பருப்பு சேர்த்து நன்றாக வதக்கி ஆற வைத்து அரைத்துக் கொள்ளவும்.
  • அதே கடாயில் பட்டர் சேர்த்து சிக்கன் சேர்த்து நன்றாக வதக்கி அரைத்த விழுதை சேர்த்து மிளகாய் தூள் கரம் மசாலா உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
  • அனைத்தும் சேர்த்து நன்றாக வெந்ததும் சர்க்கரை சேர்த்து கஸ்தூரி மேத்தி சேர்த்து இறக்கினால் சுவையான பட்டர் சிக்கன் தயார்.

Nutrition

Serving: 550g | Calories: 127kcal | Carbohydrates: 3.8g | Protein: 14g | Fat: 4.8g | Sodium: 150mg | Potassium: 133mg | Vitamin C: 142mg | Calcium: 29mg | Iron: 15mg

இதனையும் படியுங்கள் : சப்பாத்தி, இட்லி, தோசை போன்ற உணவுகளுக்கு ஏற்ற பெப்பர் சிக்கன் சால்னா ஒரு தடவை இந்த முறையில் செய்து பாருங்கள்!!