- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 5
- Cuisine
- Indian
- Course
- Breakfast, dinner
சிக்கன் அப்படின்னு சொன்னாலே நிறைய பேருக்கு வாயில எச்சில் வரும். என்னதான் மட்டன், மீன், கடம்பா, நண்டு, இறால் அப்படின்னு நிறைய நான்வெஜ் ஐட்டங்கள் இருந்தாலுமே நிறைய பேரோட பேவரட்னா அது சிக்கன் தான். அதிலும் அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் அசைவ உணவுகளில் ஒன்று சிக்கன். சிக்கனை பல வகைகளில் சமைத்து சாப்பிடுவது வழக்கம். அதில் சிக்கன் சால்னாவும் ஒன்று. சிம்பிள் ரெசிபியாக இருந்தாலும் இதை இட்லி, பரோட்டா, சப்பாத்தி, தோசையுடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும்.
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? விடுமுறை என்பதால் அந்த சப்பாத்திக்கு சற்று ஸ்பெஷலான சைடு டிஷ் செய்து சாப்பிட நீங்கள் நினைக்கலாம். அதுவும் சப்பாத்திக்கு சிக்கன் சைடு டிஷ் உங்களுக்கு பிடிக்குமானால், வழக்கமாக செய்யும் சிக்கன் கிரேவியை செய்யாமல், பெப்பர் சிக்கன் சால்னாவை செய்து பாருங்கள். இந்த சிக்கன் சால்னா கடைகளில் கொடுக்கப்படும் சால்னாவைப் போன்று நல்ல மணத்துடனும், சுவையுடனும் இருக்கும். மேலும் இது அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.
சொல்லப்போனால் இந்த சால்னாவை நீங்கள் வீட்டில் செய்தால், ஒரு சப்பாத்தி சாப்பிடும் உங்கள் குழந்தைகள் 2 சப்பாத்தியை கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். இது சிம்பிள் ரெசிபியாக இருந்தாலும் இதை இட்லி, பரோட்டா, சப்பாத்தி, தோசையுடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும். எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த பெப்பர் சிக்கன் சால்னாவை எளிய செய்முறையில் வீட்டிலேயே சுவையாக எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ஒரு முறை சிக்கன் வாங்கி இப்படி ருசியான புதினா சிக்கன் ட்ரை பண்ணி பாருங்க அசத்தலான சுவையில் இருக்கும்!!!
Ingredients
Method
முதலில் சிக்கனை நன்கு சுத்தம் செய்து விட்டு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், சீரகம், சோம்பு, மல்லி, வர மிளகாய் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, மற்றும் சிக்கன் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
சிக்கன் சிறிது வெந்ததும் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மிளகு தூள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்கு வதக்கவும்.
பின் நாம் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து அதனுடன் உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் விட்டு குறைந்த தீயில் வைத்து எண்ணெய் பிரிந்து தனியே வரும் வரை கொதிக்க விடவும்.
சிக்கன் நன்கு வெந்து எண்ணெய் பிரிந்து வந்ததும் சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து விடவும்.






