- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
பழைய சாதத்துக்கு கருவாடு மாதிரி ஒரு அருமையான சைட் டிஷ் இருக்கவே முடியாது. அதுலயும் கொஞ்சம் வித்தியாசமா நல்லா டேஸ்ட்டா செஞ்சா கண்டிப்பா பழைய சாதம் எவ்வளவு மீந்து போனாலும் அது சட்டுனு நொடியில் காலியாகிடும். சுவையான கருவாடு ப்ரை பழைய சாதத்துக்கு மட்டுமில்லாமல் ரசம் சாதத்துக்கும் தயிர் சாதத்துக்கும் வச்சு சாப்பிடும்போது அட்டகாசமா இருக்கும். அதுலயும் இன்னைக்கு நம்ம வாழை மீன் கருவாடு வச்சு தான் ஒரு சிம்பிளான கருவாடு ப்ரை பாக்க போறோம். இந்த கருவாடு ப்ரைக்கு நீங்க நெத்திலி கருவாட்டை தவிர மற்ற எந்த கருவாடு வேணும்னாலும் பயன்படுத்தலாம். ஆனா வாழை மீன் கருவாடு பயன்படுத்தினால் சுவை இன்னும் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும்.
நீங்க எவ்ளோ கருவாடு பொறித்தாலும் சட்டுனு காலி பண்ணிடுவீங்க. கணக்கே இல்லாம உங்களுக்கு சாப்பாடும் வாய்க்குள்ள போயிட்டே இருக்கும். அந்த அளவுக்கு இந்த கருவாடு ப்ரை சுவையாக இருக்கும். இந்த கருவாடு ப்ரை செய்யுறதுக்கு நம்ம சின்ன வெங்காயத்தையும் காய்ந்த மிளகாயையும் அரைச்சு அந்த பேஸ்ட் எடுத்து கருவாட்டு மேல தடவி நல்லா ஊற வச்சு பொரிச்சு எடுத்தோம் அப்படின்னா அவ்வளவு ருசியா இருக்கும். வாசனை பக்கத்து வீட்டுக்கும் இழுக்கும். அந்த அளவுக்கு ருசியா இருக்கும். கருவாடு சாப்பிடாதவங்க கூட இந்த மாதிரி ஒரு கருவாடு பொரிச்சு கொடுத்தீங்கன்னா விரும்பி சாப்பிட ஆரம்பிச்சிடுவாங்க.
சுவையான இந்த வாழை மீன் கருவாடு வச்சு தொக்கு கூட செய்யலாம். வெங்காயம் தக்காளி போட்டு நல்லா வதக்கி மிளகாய் தூள் கரம் மசாலா எல்லாம் எப்படி சேர்த்து தொக்கு செஞ்சாலும் சூப்பரா இருக்கும். ஆனா இன்னைக்கு நம்ம ஒரு சூப்பரான சிம்பிளான கருவாடு ப்ரை செய்யலாம். இதுக்கு பெருசா எந்த பொருட்களும் தேவைப்படாது வெறும் நான்கு பொருட்கள் இருந்தாலே போதுமானது ஒரு சூப்பரான கருவாடு ப்ரை தயாராகிவிடும். எவ்வளவு பழைய சாதம் இருந்தாலும் கவலையே படாதீங்க காலியாகிடும். இப்ப வாங்க இந்த சுவையான வாழை மீன் கருவாடு ப்ரை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ருசியான நெத்திலி கருவாடு வறுவல் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க! வீட்ல பழைய சாதம் இருந்தா அதன் கூட சாப்பிட்டு பாருங்க இதன் ருசியே தனி தான்!
Ingredients
Method
முதலில் கருவாட்டை சுடு நீரில் 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்.
மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம் மஞ்சள் தூள் மற்றும் காய்ந்த மிளகாயை சேர்த்து அரைத்து கொள்ளவும்.
அதனை கருவாட்டின் மேல் தடவி 10 நிமிடத்திற்கு ஊற வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து ஊற வைத்துள்ள கருவாட்டை சேர்த்து நன்றாக பொறித்து எடுத்தால் சுவையான கருவாடு பிரை தயார்.






