முட்டை குழம்பு இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க அவ்வளவு சூப்பரா இருக்கும்!!

- Advertisement -

முட்டை குழம்பு ரெசிபி நீங்க எல்லாரும் ஒவ்வொரு மாதிரியா செஞ்சிருப்பீங்க ஆனா இந்த மாதிரி ஒரு தடவை வெங்காயம் தக்காளி வதக்கி அரைத்து செஞ்சு பாருங்க ருசி அவ்ளோ சூப்பரா இருக்கும். பொதுவா வீட்ல மட்டன் சிக்கன் எடுக்காத நேரத்துல முட்டைதான் எல்லாத்துக்கும் பெரிய நான்வெஜ் ஆக இருக்கும். ஒரு சிலர் எந்த உணவு சாப்பிட்டாலும் கூடவே முட்டை வச்சு சாப்பிடுவாங்க. அந்த வகையில இந்த முட்டை குழம்பு ரெசிபி கண்டிப்பா முட்டை பிரியர்களுக்கு ரொம்ப பிடிக்கும். இந்த குழம்பு வைக்கிறதுக்கு நிறைய சிரமப்படணும் அப்படி என்ற அவசியம் கிடையாது. ரொம்ப ரொம்ப ஈசியா செஞ்சிடலாம்.

-விளம்பரம்-

இந்த ரெசிபி சாப்பிடறதுக்கும் அவ்வளவு ருசியா இருக்கும். இட்லி தோசை சப்பாத்தி பூரி சாதம் நெய் சோறு வெஜிடபிள் பிரியாணி அப்படின்னு எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான காம்பினேஷனா இருக்கும். பிரியாணிக்கு கூட இந்த குழம்ப சைடிஷா ஊத்தி சாப்பிடலாம். சாப்பிடுவதற்கு சூப்பராக இருக்கும். இதுல ஒரு முட்டையை உடைத்து சேர்க்கிறதால குழம்பு இன்னும் ருசியா இருக்கும். இதுக்கு நம்ம கடைசியா தேங்காய் விழுது ஊத்தும் போது ரொம்பவே முட்டை குழம்புக்கு ருசியை தூக்கிக் கொடுக்கும்.

- Advertisement -

நீங்க எந்த முறையில முட்டை குழம்பு செஞ்சிருந்தாலும் பரவால்ல இந்த மாதிரி ஒரு தடவை முட்டை குழம்பு ரெசிபி செஞ்சு பாருங்க. கண்டிப்பா வீட்ல இருக்க கூடிய எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். பொதுவாவே வெங்காயம் தக்காளி வதக்கி அரைச்சு சேர்த்தாலே குழம்பு தனி ருசியா இருக்கும் அதுலயும் இந்த மாதிரி நான் வெஜ்க்கு அரைச்சு சேர்க்கும்போது டேஸ்ட் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். இப்ப வாங்க இந்த ருசியான முட்டை குழம்பு ரெசிபி எப்படி செய்யறதுன்னு பாக்கலாம்.

Print
3 from 1 vote

முட்டை குழம்பு | Egg Curry Recipe In Tamil

முட்டை குழம்பு ரெசிபி நீங்க எல்லாரும் ஒவ்வொரு மாதிரியா செஞ்சிருப்பீங்க ஆனா இந்த மாதிரி ஒரு தடவை வெங்காயம் தக்காளி வதக்கி அரைத்து செஞ்சு பாருங்க ருசி அவ்ளோ சூப்பரா இருக்கும். பொதுவா வீட்ல மட்டன் சிக்கன் எடுக்காத நேரத்துல முட்டைதான் எல்லாத்துக்கும் பெரிய நான்வெஜ் ஆக இருக்கும். ஒரு சிலர் எந்த உணவு சாப்பிட்டாலும் கூடவே முட்டை வச்சு சாப்பிடுவாங்க. அந்த வகையில இந்த முட்டை குழம்பு ரெசிபி கண்டிப்பா முட்டை பிரியர்களுக்கு ரொம்ப பிடிக்கும். இந்த குழம்பு வைக்கிறதுக்கு நிறைய சிரமப்படணும் அப்படி என்ற அவசியம் கிடையாது. ரொம்ப ரொம்ப ஈசியா செஞ்சிடலாம். இந்த ரெசிபி சாப்பிடறதுக்கும் அவ்வளவு ருசியா இருக்கும். இட்லி தோசை சப்பாத்தி பூரி சாதம் நெய் சோறு வெஜிடபிள் பிரியாணி அப்படின்னு எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான காம்பினேஷனா இருக்கும்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: LUNCH
Cuisine: Indian, TAMIL
Keyword: egg curry
Yield: 4 People
Calories: 167kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 5 முட்டை
  • 15 சின்ன வெங்காயம்
  • 3 தக்காளி
  • 4 பல் பூண்டு
  • 1 துண்டு இஞ்சி
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் கசகசா
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1/2 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
  • 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • கொத்தமல்லி சிறிதளவு

செய்முறை

  • முதலில் 4 முட்டையை வேக வைத்து உரித்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சின்ன வெங்காயம் பூண்டு தக்காளி இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கி ஆற வைத்து அரைத்துக் கொள்ளவும்.
  • பிறகு கடாயில் எண்ணெய் சேர்த்து சோம்பு கடுகு உளுந்த பருப்பு கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.
  • அரைத்து வைத்த விழுதை சேர்த்து கரம் மசாலா குழம்பு மிளகாய் தூள் உப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  • மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவலையை சேர்த்து கசகசா சீரகம் சேர்த்து அரைத்து அதனையும் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  • பிறகு ஒரு முட்டையை உடைத்து ஊற்றி கலந்து வேக வைக்கவும். குழம்பு நன்றாக வெந்தவுடன் கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான முட்டை குழம்பு தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 167kcal | Carbohydrates: 2.9g | Protein: 14g | Fat: 3.8g | Sodium: 148mg | Potassium: 256mg | Fiber: 9.24g | Vitamin C: 134mg | Calcium: 22mg | Iron: 18mg

இதனையும் படியுங்கள் : முட்டை வச்சு இந்த மாதிரி கொஞ்சம் வித்தியாசமா பட்டர் கார்லிக் முட்டை செய்து பாருங்கள்!