ஆட்டுல இருக்கக்கூடிய பாகங்கள் ஒவ்வொன்னும் ஒவ்வொரு விதமான நன்மைகளை நமக்கு கொடுக்கக்கூடியது. ஆட்டுக்குடல் ஆட்டு ரத்தம் ஆட்டு சுவரொட்டி ஆட்டு ஈரல் இது எல்லாமே சாப்பிடுறது உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது. சுவரொட்டி சாப்பிடுவதால் உடம்புல ரத்த சோகை பிரச்சனை சரியாகும் குடல் சாப்பிடுவதால் வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் சரியாகும். இந்த மாதிரி எல்லாமே ரொம்ப ரொம்ப நல்லது. அந்த வகையில இப்ப நம்ம ஆட்டு ரத்த பொரியல் பார்க்க போறோம்.
இந்த ஆட்டு ரத்த பொரியல் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி செய்வாங்க. ஆட்டு ரத்த பொரியல் இந்த மாதிரி செய்முறையில் ஒரு தடவை சிம்பிளா செஞ்சு பாருங்க செம டேஸ்டா இருக்கும். இதுக்கு நிறைய சின்ன வெங்காயம் சேர்த்து செய்யும் போது அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும் வார்த்தைகளால் சொல்ல முடியாது. அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கும் சுட சுட சாதத்தில் போட்டு கூட பிசைந்து சாப்பிடலாம். வீட்ல மட்டன் குழம்பு வைக்கும் போது சைடு டிஷ்ஷா இதை வைக்கலாம். டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமா இருக்கும்.
இதுல மிளகுத்தூள் சேர்த்து செய்யும் போது சளி இருமல் போன்ற பிரச்சனைகள் இருந்தால் சரியாகும். இந்த சூப்பரான ரெசிபியை கண்டிப்பாக உங்க வீட்ல ஒரு தடவ இதே செய்முறையில் செஞ்சு பாருங்க. சளி இருமல் தொந்தரவு இருந்துச்சுன்னா வெறும் வயிற்றில் இந்த ஆட்டு ரத்த பொரியலை மிளகுத்தூள் அதிகமாக சேர்த்து சாப்பிட்டு பாருங்கள். கண்டிப்பா இருமல் சளி சரியாகிவிடும். டேஸ்ட்டும் அட்டகாசமா இருக்கும். இந்த சுவையான ஆட்டு ரத்த பொரியலை எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்.
ஆட்டு ரத்த பொரியல் | Goat Blood Fry Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 கப் ஆட்டு ரத்தம்
- 1 கப் சின்ன வெங்காயம்
- 1/2 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 டீஸ்பூன் மிளகு தூள்
- உப்பு தேவையான அளவு
- 1 பச்சை மிளகாய்
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- ஆட்டு ரத்தத்தை சுத்தம் செய்து கழுவி கையால் நன்றாக பிசைந்து கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.
- சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி ரத்தத்தை சேர்த்து நன்றாக கிளறவும்.
- கரண்டியால் நன்றாக கொத்தி விட்டு கிளறி வெந்ததும் மிளகுத்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கினால் சுவையான ஆட்டு ரத்த பொரியல் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : ஹோட்டல் ஸ்டைல் ஆட்டுக்கால் பாயா செய்யணும் அப்படின்னா இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!