- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- dinner, LUNCH
நிறைய பேருக்கு ஆட்டுக்கறி குழம்பு விட ஆட்டுக்கால் பாயா ரொம்ப பிடிக்கும். அதுவும் ஹோட்டல் ஸ்டைல்ல அப்படியே வீட்ல செஞ்சு சாப்பிட ரொம்ப ரொம்ப பிடிக்கும். இடியாப்பத்துக்கும் ஆட்டுக்கால் பாயாவுக்கும் ஒரு சூப்பரான காமினேஷன் ஆகவே இருக்கும். ஒரு சிலர் வீட்ல ஆட்டுக்கால் பாயா செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா ஒரு சிலர் என்னதான் ட்ரை பண்ணாலும் ஆட்டுக்கால் பாயா நல்லாவே வராது. அவங்களுக்காகவே இந்த ஆட்டுக்கால் பாயா எப்படி செய்றதுன்னு பார்க்க போறோம் அதுவும் ஹோட்டல் ஸ்டைலில் ஆட்டுக்கால் பாயா எப்படி செய்வது என்று பார்க்கலாம். இந்த ஆட்டுக்கால் பாயா செய்வது ரொம்ப ரொம்ப ஈஸி தான் அரைமணி நேரத்துல செஞ்சு முடிச்சிடலாம்.
சுட சுட இந்த ஆட்டுக்கால் பாயாவுடன் இடியாப்பமும் செஞ்சு சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியாகவே இருக்கும். இந்த சூப்பரான ஆட்டுக்கால் பாயாவோட இடியாப்பம் மட்டும் இல்லாம இட்லியும் கூட ஒரு சிலர் சாப்பிடுவாங்க. இத நீங்க எதுக்கு வேணும்னாலும் காம்பினேஷன் வச்சு சாப்பிட்டுக்கலாம் அவ்ளோ ருசியாவே இருக்கும். ஆட்டுக்கால் சாப்பிடுவதால் நம்ம உடம்புல இருக்கக்கூடிய எலும்புகள் வலிமை அடையும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும். சூப்பரான இந்த ஆட்டுக்கால் பாயா ரெசிபியை கண்டிப்பா நீங்க உங்க வீட்ல செஞ்சு அசத்திடுங்க.
ஆட்டுக்கால் பாயா செய்ய தெரியல அப்படின்னு யாராவது சொன்னாங்களா அவங்களுக்கு முதல்ல நீங்க இதை செஞ்சு காட்டுங்க. சாப்பிட்டுட்டு அசந்து போய்டுவாங்க. ரெஸ்டாரன்ட்ல சாப்பிட்டு அதே டேஸ்ட்ல வீட்லயும் வரனும் அப்படின்னு யோசிச்சீங்கன்னா கண்டிப்பா இந்த மாதிரி இதே அளவுகளில் இதே செய்முறையில் செஞ்சு பாத்தீங்கன்னா உங்களுக்கு ஹோட்டல்ல கிடைக்குற அதே மாதிரியான ஆட்டுக்கால் பாயா வீட்லையே கிடைக்கும். இதுக்காக நீங்க ஹோட்டல் போய் தான் சாப்பிடணும் அப்படின்ற எந்த அவசியமும் கிடையாது. டேஸ்ட்டான இந்த ரெசிபியை கண்டிப்பா உங்க வீட்ல இருக்குறவங்களுக்கு எல்லாத்துக்கும் செஞ்சு கொடுத்து அசத்திடுங்க. இப்ப வாங்க இந்த ருசியான ஆட்டுக்கால் பாயா சட்டுனு சுவையா எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கிராமத்து ஸ்டைல் ஆட்டுக்கால் குழம்பு ஒரு முறையாவது இப்படி செய்து பாருங்க! வீடே மணமணக்கும்!
Ingredients
Method
ஒரு குக்கரில் ஆட்டுக்கால் சேர்த்து மஞ்சள் தூள், ஒரு பெரிய வெங்காயம், ஒரு தக்காளி உப்பு சேர்த்து 10 விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்.
அதே குக்கரில் எண்ணெய் விட்டு அரை டீஸ்பூன் சோம்பு, பட்டை கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளித்ததும் பெரிய வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் ஊற வைத்த கசகசா முந்திரி அரை டீஸ்பூன் சோம்பு பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து அதனையும் ஆட்டுக்காலுடன் சேர்த்துக் கொள்ளவும்.
நன்றாக கிளறி இரண்டு விசில் விட்டு இறக்கி கொத்தமல்லி இலைகள் புதினா இலைகள் சேர்த்து பரிமாறினால் சுவையான ஹோட்டல் ஸ்டைல் ஆட்டுக்கால் பாயா தயார்.






