வெயில் காலம் ஆரம்பிச்ச உடனே எல்லாருக்கும் ரொம்ப வியர்வை வரும் நிறைய பேருக்கு சூடு பிடிக்கும். ஒரு சிலருக்கு வெயில் காலம் சுத்தமா பிடிக்காது ஆனா இன்னும் ஒரு சிலருக்கு வெயில் காலம் வந்தாலே ரொம்ப பிடிக்கும் அதுக்கு காரணம் வெயில் காலத்தோடு சேர்த்து மாங்காய் மாம்பழம் சீசனும் வரும். இந்த சீசன்ல மாம்பழமும் மாங்காயும் எவ்வளவு சாப்பிட முடியுமோ அவ்வளவு சாப்பிட்டுக்கனும் அதுக்கப்புறம் நினைச்சாலும் கூட வாங்கி சாப்பிடுற அளவுக்கு மாங்காய் விலை இருக்காது ரொம்பவே அதிகமா இருக்கும்.
இந்த வெயில் காலத்திலேயே மாங்காய் சீசன்ல மாங்காய் வாங்கி மாங்காய் ஊறுகாய், வடு மாங்காய், இதெல்லாம் வீட்டில் தயார் செஞ்சு வச்சுகிட்டா அடுத்த ஒரு ஆறு மாசத்துக்கு கவலையே இல்லை எப்ப எல்லாம் மாங்காய் சாப்பிடனும் போல இருக்கோ அப்ப சாப்பிட்டுக்கலாம். அந்த வகையில மாங்காய் வச்சு தித்திப்பா காரமா ஒரு சூப்பரான மாங்காய் பச்சடி ரெசிபி செய்ய போறோம். இந்த மாங்காய் பச்சடி ரெசிபி அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும். டேஸ்டான இந்த பச்சடி ரெசிபிக்கு எல்லாரும் போட்டி போட்டுட்டு சாப்பிடுவாங்க.
இதுக்கு மாங்காயை நறுக்கி சேர்த்தாலும் சூப்பரா இருக்கும் துருவி சேர்த்தாலும் சூப்பரா இருக்கும். ஆனா நறுக்கி செய்வது விட ஒரு தடவை துருவி செஞ்சு பாருங்க அவ்வளவு டேஸ்டா இருக்கும். சாம்பார் சாதம் ரசம் சாதம் தயிர் சாதம் எல்லாத்துக்குமே ஒரு பெர்ஃபெக்ட்டான காம்பினேஷன். அதனால கண்டிப்பா வீட்ல தயிர் சாதம் செய்யும் போது இந்த மாங்காய் பச்சடி செஞ்ச சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிட்டு பாருங்க. எவ்வளவு சாதம் சாப்பிடறோம் அப்படின்னு கணக்கே இருக்காது. அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கும்.
டேஸ்ட்டான இந்த மாங்காய் பச்சடி ரெசிபி ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி செய்வாங்க ஒரு சிலர் இதுக்கு காரமே போடாம செய்வாங்க ஆனா காரம் போட்டு செஞ்சு பாருங்க அவ்வளவு சூப்பரா இருக்கும். குழந்தைகளுக்கு செய்யும் போது காரம் கொஞ்சம் கம்மியா சேர்த்துக்கோங்க ஏன்னா ஏற்கனவே மாங்காய் சூடு காரம் அதிகமா சேர்த்தா இன்னும் சூடு அதிகமாகும். அடிக்கடி சூடு பிடிக்கிறவங்களும் கர்ப்பிணிப் பெண்களும் கூட கொஞ்சம் பார்த்து சாப்பிட்டுக்கோங்க. ஆனா ஆசைக்கு கொஞ்சமா சாப்பிட்டுக்கலாம். இப்ப வாங்க இந்த சுவையான மாங்காய் பச்சடி ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
மாங்காய் பச்சடி | Mangai Pachadi Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 மாங்காய்
- 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள்
- 4 டேபிள் ஸ்பூன் வெல்லம்
- 1/2 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
- 1 கொத்து கறிவேப்பிலை
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- 1 பெரிய வெங்காயம்
செய்முறை
- முதலில் மாங்காயை துருவி வைத்துக் கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு கருவேப்பிலை பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
- துருவிய மாங்காய் சேர்த்து உப்பு மிளகாய் தூள் சேர்த்து வேக வைக்கவும்.
- மாங்காய் பாதி வெந்ததும் வெல்லம் சேர்த்து நன்றாக கிளறி இறக்கினால் சுவையான மாங்காய் பச்சடி தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : அடுத்தமுறை மாங்காய் வாங்கினால் அவசியம் ருசியான மாங்காய் மசியல் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!





