Home அசைவம் சிம்பிளான டேஸ்டான நெத்திலி கருவாடு தொக்கு இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

சிம்பிளான டேஸ்டான நெத்திலி கருவாடு தொக்கு இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

நிறைய பேருக்கும் மட்டன் சிக்கன் மீன் கணவாய் நண்டு முட்டை இது எல்லாத்தையும் விட கருவாடு தான் ரொம்ப பிடிக்கும். கருவாட்டுக் குழம்பு வச்சு அதை மூணு நாளைக்கு சூடு பண்ணி சூடு பண்ணி சாப்பிடறவங்களும் இருக்காங்க அதோட டேஸ்ட் ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். ஒரு சிலர் இந்த கருவாட்டு குழம்புல கத்திரிக்காய் முருங்கைக்காய் உருளைக்கிழங்கு இது எல்லாமே போட்டு வைப்பாங்க. ஒரு சிலர் கருவாட்டு குழம்பு மொச்சை பயிறு போட்டு வைப்பாங்க. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி கருவாட்டு குழம்பு வச்சு சாப்பிடுவாங்க.

-விளம்பரம்-

இந்த கருவாட்டு குழம்பு சாதத்துக்கு தான் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். சுடு சாதத்துக்கும் பழைய சாதத்துக்கும் ஒரு அட்டகாசமான காம்பினேஷன் இது. பழைய சாதத்துக்கு அதைவிட சூப்பரா இருக்கும். இட்லி தோசைக்கு ஊத்தி சாப்பிடலாம் ஆனாலும் சாதத்துக்கு தான் நல்ல காம்பினேஷன். என்னதான் நிறைய கருவாடு இருந்தாலும் நிறைய பேருக்கு ரொம்ப புடிச்சதுனா நெத்திலி கருவாடு தான். இந்த நெத்திலி கருவாடு அப்படியே வறுத்து சாப்பிடுவாங்க. இல்லனா நெத்திலி கருவாட்டுல 65 போட்டு சாப்பிடுவாங்க. ஆனா இன்னைக்கு நம்ம ஒரு சூப்பரான டேஸ்டான நெத்திலி கருவாடு தொக்கு தான் செய்ய போறோம்.

இந்த நெத்திலி கருவாடு தொக்கு செய்வதற்கு வீட்டில இருக்க கூடிய குறைவான பொருட்களே போதுமானது. கருவாடே பிடிக்காதவங்க கூட இந்த நெத்திலி கருவாடு தொக்கு செஞ்சு கொடுத்தா விரும்பி சாப்பிடுவாங்க. டேஸ்டான இந்த நெத்திலி கருவாடு தொக்கு சீக்கிரத்திலேயே செஞ்சு முடிச்சிடலாம். சுட சுட சாதத்தில் போட்டு பிசைஞ்சு குழந்தைகளுக்கு ஊட்டும்போது விரும்பி சாப்பிடுவாங்க. வீட்டில் இருக்கக்கூடிய பெரியவங்களுக்கு இந்த மாதிரி ஒரு தடவை வச்சு கொடுங்க சாப்பிட்டு அசந்து போயிடுவாங்க. வீட்டுக்கு விருந்தாளிகள் யாராவது வந்தா கூட மட்டன் சிக்கன் எடுக்க முடியாது சமயத்துல கொஞ்சம் சூப்பரான நெத்திலி கருவாடு தொக்கு செஞ்சு கொடுத்து அசத்திடுங்க. இப்ப வாங்க இந்த சுவையான நெத்திலி கருவாடு தொக்கு ரொம்ப சிம்பிளா டேஸ்டா எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

Print
No ratings yet

நெத்திலி கருவாடு தொக்கு‌ | Nethili Thokku Recipe In Tamil

நிறைய பேருக்கும் மட்டன் சிக்கன் மீன் கணவாய் நண்டு முட்டை இது எல்லாத்தையும் விட கருவாடு தான் ரொம்ப பிடிக்கும். கருவாட்டுக் குழம்பு வச்சு அதை மூணு நாளைக்கு சூடு பண்ணி சூடு பண்ணி சாப்பிடறவங்களும் இருக்காங்க அதோட டேஸ்ட் ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். ஒரு சிலர் இந்த கருவாட்டு குழம்புல கத்திரிக்காய் முருங்கைக்காய் உருளைக்கிழங்கு இது எல்லாமே போட்டு வைப்பாங்க. ஒரு சிலர் கருவாட்டு குழம்பு மொச்சை பயிறு போட்டு வைப்பாங்க. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி கருவாட்டு குழம்பு வச்சு சாப்பிடுவாங்க. இந்த கருவாட்டு குழம்பு சாதத்துக்கு தான் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். சுடு சாதத்துக்கும் பழைய சாதத்துக்கும் ஒரு அட்டகாசமான காம்பினேஷன் இது. பழைய சாதத்துக்கு அதைவிட சூப்பரா இருக்கும். இட்லி தோசைக்கு ஊத்தி சாப்பிடலாம் ஆனாலும் சாதத்துக்கு தான் நல்ல காம்பினேஷன்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: LUNCH, Side Dish
Cuisine: Indian, TAMIL
Keyword: Nethili Thokku
Yield: 4 People
Calories: 134kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 150 கி நெத்திலி கருவாடு
  • 7 பல் பூண்டு
  • 10 சின்ன வெங்காயம்
  • 1 தக்காளி
  • புளி எலுமிச்சை அளவு
  • 1/2 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
  • 1/2 டீஸ்பூன் வெந்தயம்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் மல்லி தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • நெத்திலி கருவாட்டை வெந்நீரில் சேர்த்து 10 நிமிடத்திற்கு ஊற வைத்து கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு வெந்தயம் சீரகம் கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்.
  • பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தை இடித்து சேர்த்துக் கொள்ளவும். மல்லித்தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து புளியை கரைத்து சேர்த்துக் கொள்ளவும்.
  • அனைத்தும் சேர்த்து நன்றாக வெந்து கொதித்து வந்ததும் கருவாட்டை சேர்த்து ஐந்து நிமிடத்திற்கு பிறகு இறக்கினால் சுவையான நெத்திலி கருவாட்டு தொக்கு தயார்.

Nutrition

Serving: 250g | Calories: 134kcal | Carbohydrates: 2.6g | Protein: 16g | Fat: 4.7g | Potassium: 93mg | Vitamin C: 122mg | Calcium: 17mg | Iron: 6mg

இதனையும் படியுங்கள் : ருசியான நெய் மீன் கருவாடு தொக்கு ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!