- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
வீட்ல என்ன விசேஷங்கள் வந்தாலும் நம்ம சாம்பார் தான் வைப்போம். சாம்பார், பருப்பு குழம்பு இதெல்லாம் ஒரு சிலருக்கு ரொம்ப ரொம்ப ஃபேவரட்டா இருக்கும். ஒரு சிலருக்கு சுத்தமா பிடிக்காது. ஆனா சுத்தமா பிடிக்காதவங்களும் கூட இந்த மாதிரி சாம்பார் செஞ்சு கொடுத்தா கண்டிப்பாக விரும்பி சாப்பிடுவாங்க. முள்ளங்கி சாம்பார் ரெசிபி இதே செய்முறையில் செய்து பாருங்கள் கண்டிப்பாக டேஸ்ட் ரொம்ப அட்டகாசமாக இருக்கும். இட்லி தோசை பொங்கல் சாதம் எல்லாத்துக்கும் இந்த முள்ளங்கி சாம்பார் ரொம்பவே சூப்பரா இருக்கும். சாம்பாரில் பல வகைகள் இருக்கு. சுரைக்காய் சாம்பார், அவரைக்காய் சாம்பார், வெங்காய சாம்பார் அப்படின்னு நிறைய சாம்பார் ரெசிபி இருக்கு. அதுல இந்த முள்ளங்கி சாம்பார் நிறைய பேருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
வெறும் சாம்பார் பொடி மட்டும் இருந்தாலே இந்த ரெசிபியை சிம்பிளா வீட்ல செஞ்சு முடிச்சிடலாம். முள்ளங்கியை கடாயில் எண்ணெய் சேர்த்து வதக்கி அதுக்கு அப்புறம் சாம்பார் சேர்க்க வேண்டும் அப்பதான் முள்ளங்கியோட பச்சை வாசனை வராமல் இருக்கும். இந்த சூப்பரான முள்ளங்கி சாம்பார் ரெசிபியை கண்டிப்பா மிஸ் பண்ணாம வீட்ல செஞ்சு பாருங்க இதுக்கு பாசிப்பருப்பு துவரம் பருப்பு ரெண்டுமே சேர்த்து செய்யலாம் இப்போ நம்ம துவரம் பருப்பு சேர்த்து செய்யப் போறோம். 15 நிமிஷத்துல சூப்பரா இந்த சாம்பார் ரெடி ஆகிடும். இந்த சாம்பாருக்கு சின்ன வெங்காயம் சேர்த்து செய்யும் போது டேஸ்ட் இன்னும் சூப்பரா இருக்கும் இப்ப வாங்க இந்த சுவையான முள்ளங்கி சாம்பார் ரெசிபி எப்படி செய்யறதுன்னு பாக்கலாம்.
இதனையும் படியுங்கள் : குக் வித் கோமாளியில் ஷ்ருத்திகா செய்த குளு குளு முள்ளங்கி ஐஸ்கிரீம் ரெசிபி இதோ!
Ingredients
Method
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து துவரம் பருப்பை கழுவி சேர்க்கவும்.
அரைவேக்காடு வெந்ததும் தக்காளியை நறுக்கி சேர்த்து பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து முள்ளங்கியை வட்டமாக நறுக்கி சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி எடுக்கவும்.
துவரம் பருப்பு வெந்ததும் முள்ளங்கியை சேர்த்து சாம்பார் பொடி உப்பு சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.
மற்றொரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி சாம்பாரில் சேர்த்துக் கொள்ளவும்.
இறுதியாக கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான முள்ளங்கி சாம்பார் தயார்.






