- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast
காலையில பிரேக் பாஸ்ட்க்கு எப்பவுமே ஒரே மாதிரியா இட்லி தோசை சப்பாத்தி பூரி பொங்கல்னு செய்யாம கொஞ்சம் வித்தியாசமா இந்த ஆரோக்கியமான மரவள்ளிக்கிழங்கு அடை செஞ்சு பாருங்க. மரவள்ளி கிழங்கு நல்லா அரைச்சு அதுகூட பச்சரிசி கடலைப்பருப்பு சேர்த்து அரைச்சு சுடுற இந்த மரவள்ளிக்கிழங்கு அடை ரொம்ப டேஸ்டியா இருக்கும். ரெண்டு சாப்பிட்டாலே வயிறு ஃபுல்லா நிறைந்து விடும். மரவள்ளிக்கிழங்கு அடை சாப்பிடுவது உடம்புக்கு ஆரோக்கியமானதும் கூட. கிழங்கு வகைகளிலேயே இந்த கிழங்குல தான் நிறைய மாவுச்சத்து நிறைந்திருக்கு.
மரவள்ளிக்கிழங்கை ஒரு சில ஊர்களில் கப்பக்கிழங்கு அப்படின்னு சொல்லுவாங்க. ஒவ்வொரு ஊர்லயும் ஒவ்வொரு மாதிரியா பெயர் மாறுபடும். இந்த மரவள்ளிக்கிழங்கு வேகவைத்து இது கூட மீன் குழம்பு கார குழம்பு ஊத்தி சாப்பிடுவாங்க அதுவும் ரொம்ப டேஸ்டா இருக்கும். ஒரு சிலர் அப்படியே அவிச்சு தாளிச்சு சாப்பிடுவாங்க. ஒரு சிலர் இந்த மரவள்ளிக்கிழங்கு பயன்படுத்தி சிப்ஸ் போட்டு சாப்பிடுவாங்க. ஆனா இன்னைக்கு நம்ம இந்த மரவள்ளி கிழங்கு பயன்படுத்தி ஒரு சூப்பரான அடை ரெசிபி தான் செய்யப் போறோம்.
இது கூட தக்காளி சட்னி, தேங்காய் சட்னி அப்படின்னு எது சேர்த்து சைட் டிஷ்ஷா சாப்பிட்டாலும் டேஸ்ட் சூப்பரா இருக்கும் இத குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ்க்கு கூட கொடுத்து விடலாம் ஆனால் நல்லா சூடா இருக்கிற மாதிரி ஏதாவது ஹாட் பாக்ஸ்ல வச்சு கொடுத்து விடுங்க. இல்லனா நல்ல நிறைய எண்ணெய் ஊற்றி காலையில பிரேக்ஃபாஸ்ட் இல்லனா நைட் டின்னருக்கு ட்ரை பண்ணி பாருங்க. டேஸ்ட் அட்டகாசமாக இருக்கும். எப்பவுமே ஒரே மாதிரியான டிபன் ஐட்டங்கள் சாப்பிட்டு போர் அடிச்சு போனவங்களுக்கு இந்த மாதிரி அடை சாப்பிடுவது கொஞ்சம் மாறுதலாக இருக்கும்.
வீட்ல இருக்குறவங்களுக்கு கொஞ்சம் புதுசு புதுசா ஏதாவது செஞ்சு கொடுத்த மாதிரியும் ஆச்சு. சில சமயங்கள்ல நீங்க மாவு இட்லி தோசைக்கு ஆட்டி வைக்கல அப்படின்னா இந்த மாதிரி மரவள்ளி கிழங்குல அடை சுட்டு சாப்பிட்டு பாருங்க. கண்டிப்பா வீட்ல இருக்க எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். உங்களுக்கும் வேலை முடிஞ்ச மாதிரி இருக்கும். குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ரெசிப்பீஸ் செஞ்சு கொடுத்த மாதிரியும் இருக்கும். இந்த அடை ரெசிபி வீட்ல இருக்குற பெரியவங்களுக்கு குறிப்பா ரொம்ப பிடிக்கும். இப்ப வாங்க இந்த ருசியான மரவள்ளிக்கிழங்கு அடை ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : மாலை வேளையில் ஏதேனும் சூடாக சாப்பிட வேண்டும் என தோன்றுகிறதா? அப்படியானால் இந்த மரவள்ளிக்கிழங்கு பணியாரத்தை ஒரு முறை செய்து பாருங்கள்!!
Ingredients
Method
ஒரு பாத்திரத்தில் பச்சரிசி கடலை பருப்பு காய்ந்த மிளகாய் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
பிறகு மரவள்ளிக்கிழங்கை கழுவி சுத்தம் செய்து துருவி அதனையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து பருப்பு கருவேப்பிலை போட்டு தாளித்து அதனை அரைத்து வைத்துள்ள மாவுடன் கலந்து கொள்ளவும்.
தோசை கல்லில் சிறுசிறு அடைகளாக தட்டி இரு பக்கமும் வேக வைத்து எண்ணெய் ஊற்றி சுட்டு எடுத்தால் சுவையான மரவள்ளிக்கிழங்கு அடை தயார்.






