வாழைக்காய் வச்சு வாழைக்காய் பஜ்ஜி, வாழைக்காய் சுக்கா, வாழைக்காய் சிப்ஸ் அப்படின்னு நிறைய ரெசிபி சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா வாழைக்காய் மிளகு வறுவல் அதுவும் இந்த மாதிரி ஒரு ஸ்டைல்ல கண்டிப்பா சாப்பிட்டு இருக்க மாட்டீங்க. பொதுவா சிக்கன் வறுவல், மட்டன் வறுவல், உருளைக்கிழங்கு வறுவல், சேனை வறுவல் சாப்பிட்டு பழகுனவங்களுக்கு இந்த சூப்பரான வாழைக்காய் மிளகு வறுவல் ரெசிபியை இன்னைக்கு பார்க்கலாம். வாழைக்காய் குழம்புக்கான காய்கறி மட்டுமல்ல, பொரியலுக்கும் பொருத்தமான காயாக இருக்கும்.
பொதுவாக வாழைக்காயை வேகவைத்து பொரியல் செய்வார்கள், ஆனால் வாழைக்காயுடன் மிளகு சேர்த்து பொரியல் செய்யும்போது அது அந்த பொரியலுக்கு தனித்துவமான சுவையைக் கொடுக்கும். இந்த வாழைக்காய் மிளகு வறுவலை தயிர் சாதம், சாம்பார் சாதம், ரசம் சாதம், லெமன் சாதம், வெஜிடபிள் சாதம்ன்னு எல்லாத்துக்குமே சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம். சுவை ரொம்ப ரொம்ப தாறுமாறா இருக்கும். ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாத்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க.
அசைவமே தோத்து போற அளவுக்கு இந்த வாழைக்காய் மிளகு வறுவல் இருக்கும். குழந்தைகளோட லஞ்ச் பாக்ஸுக்கு சைடு டிஷ்ஷா இதை கொடுத்து விட்டீங்கன்னா போதும் சாப்பாடு சாப்பிடாதவங்க கூட ஃபுல்லா காலி பண்ணிட்டு தான் வருவாங்க. அந்த அளவுக்கு ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவலை குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த டேஸ்டான வாழைக்காய் மிளகு வறுவல் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
வாழைக்காய் மிளகு வறுவல் | Vazhakkai Milagu Varuval Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 3 வாழைக்காய்
- 1/2 டீஸ்பூன் சீரகம்
- 1/2 டீஸ்பூன் சோம்பு
- 1 1/2 டீஸ்பூன் மிளகு
- 1 கொத்து கறிவேப்பிலை
- 8 பல் பூண்டு
- கொத்தமல்லி சிறிதளவு
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன் மல்லி தூள்
செய்முறை
- முதலில் வாழைக்காயை தோல் சீவி, நீளவாக்கில் நறுக்கிக் விட்டு உப்பு கலந்து தண்ணீரில் போட்டு வைத்துக் கொள்ளவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் பூண்டு, சோம்பு, சீரகம், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வாழைக்காய் சேர்த்து பொரித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- பின் அதே கடாயில் நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும். பின் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மல்லி தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
- பிறகு பொரித்து வைத்துள்ள வாழைக்காயை சேர்த்து நன்றாக வதக்கி கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான வாழைக்காய் மிளகு வறுவல் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : கறி சுவையை மிஞ்சும் சுவையில் வாழைக்காய் சுக்கா இனி இப்படி செய்து பாருங்கள்!!