அசைவ பிரியர்கள் அனைவருக்குமே பிரியாணி, என்பது மிகவும் பிடித்த உணவு ஆகும். அதிலும் குறிப்பாக சிக்கன் பிரியாணி என்றால் சொல்லவா வேண்டும். அசைவ பிரியர்கள் அனைவரின் மிக பிடித்த உணவு பட்டியலில் இந்த சிக்கன் பிரியாணி கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். பொதுவாக பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும். எவ்வளவு செய்தாலும் அதனுடைய பிரியாணியின் ஏக்கம் அதிகமாகதான் இருக்குமே தவிர குறையாது. காரணம் அதில் சேர்க்கும் பொருட்கள் பாதி வெzந்து கொண்டு இருக்கும் போதே நறுமணம் வீச ஆரம்பித்து விடும்.
பிரியாணி சாப்பிட்டால் செரிக்காது என்று சொன்னவர்கள் கூட சாப்பிட முதல் ஆளாக இருப்பார்கள். அந்த அளவிற்கு நறுமணம் வீசும். சிக்கன் பிரியாணி இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் அரபு நாடுகளில் மிகவும் பிரபலமான உணவு வகை. தற்போது நாம் செய்யும் பிரியாணி முகலாயர்களிடம் இருந்து பெறப்பட்டது. பிரியாணி என்பது அரிசி, வாசனைப் பொருட்கள், மற்றும் மாமிசம் ஆகியவை கலந்து செய்யப்படுகிறது. பிரியாணி சுவை, மணம், மற்றும் ஆரோக்கியம் நிறைந்தது. சிக்கன் பிரியாணியில் பல்வேறு வகைகள் உள்ளது. அந்த வகையில் இன்று சூப்பரான பாக்கிஸ்தான் நாட்டு சிக்கன் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
ஒரே மாதிரியான பிரியாணி வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா. அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான சிந்தி சிக்கன் பிரியாணி செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த சிக்கன் பிரியாணி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
சிந்தி சிக்கன் பிரியாணி | Sindhi Chicken Biriyani Recipe In Tamil
Equipment
- 1 குக்கர்
- 1 கரண்டி
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
- 2 பாஸ்மதி அரிசி
- 1 பட்டை
- 2 லவங்கம்
- 5 பிரிஞ்சி இலை
- 3 ஏலக்காய்
- 3 கடற்பாசி
- 3 கிராம்பு
- இஞ்சி சிறு துண்டு
- 5 பூண்டு
- ½ tsp சோம்பு
- 2 வெங்காயம்
- 5 பச்சை மிளகாய்
- 1 தக்காளி
- ½ cup புதினா,கொத்தமல்லி
- 2 tbsp தயிர்
- ¼ tsp மிளகாய் தூள்
- ½ tsp எலுமிச்ச சாறு
- 3 tbsp நெய்
- தேவையான அளவு தண்ணீர்
- நல்எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
செய்முறை
- முதலில் பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி விட்டு தண்ணீர் விட்டு ஊற வைத்து கொள்ளவும்.
- பின் வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் நீளமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- பின் ஒரு மிக்ஸி ஜாரில் சிறிதளவு கொத்தமல்லி, புதினா, இஞ்சி, பூண்டு,சோம்பு, தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு குக்கரை அடுப்பில் வைத்து சிறிதளவு நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், கிராம்பு, பிரிஞ்சி இலை, ஏலக்காய், கடல்பாசி ஆகியவற்றை வறுத்து கொள்ளவும்.
- பின் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பின் சிறிதளவு கொத்தமல்லி இலை, புதினா சேர்த்து வதக்கவும்.
- பின் நாம் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
- பின் மிளகாய் தூள், உப்பு மற்றும் சிக்கன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் தேவையான அளவு தண்ணீர் விட்டு குக்கரை மூடி 2 விசில் விட்டு சிக்கனை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
- பின் சிக்கன் வெந்ததும் ஊற வைத்த அரிசியை சேர்த்து அதனுடன் தயிர், எலுமிச்சை சாறு, கரம் மசாலா தூள் சேர்த்து குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு இறக்கவும். அவ்வளவுதான் சுவையான சிந்தி பிரியாணி தயார்.