இந்த உலகில் தோன்றிய முதல் கடவுள், முற்றும் துறந்த ஞானி சிவபெருமான் தான் இந்து புராணத்தின் படி சிவபெருமான் ஒலியில் இருந்து பிறந்ததாக சொல்லப்படுகிறது. அவர் இடமிருந்து தான் பிரம்மாவும் விஷ்ணுவும் தோன்றினார்களாம். ஆனால் நம்மில் பலரும் சிவபெருமானிடம் இருந்து தோன்றிய விஷ்ணு பகவானே தான் பிடிக்கும். ஏனென்றால் அவர்தான் காக்கும் கடவுள் நம்மை காப்பார் என. ஆனால் சிவபெருமான் அழிக்கும் கடவுள் என பலரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆம், சிவபெருமான் அழிக்கும் கடவுள் தான், ஆனால் மனிதர்களை அழிக்க மாட்டார் மனிதர்களுக்குள் இருக்கும் ஆணவம், போட்டி, பொறாமை போன்ற கெட்ட எண்ணங்களை அழித்து நம்மளை நல்வழியில் ஒழுங்கு படுத்துவார்.

சிவனுக்கு பிடிக்காத பூஜை, யாகம்
பலரும் சிவபெருமானுக்கு பூஜை, யாகங்கள் பிடிக்காது என்று சொல்வார்கள். ஆம், சிவபெருமானுக்கு பூஜை, யாகங்கள் போன்றவை பிடிக்காது தான். நாம் பிற உயிர்களுக்கு தீங்கு செய்து செய்யும் பூஜை யாகங்களை அவர் என்றும் ஏற்றுக்கொள்ள மாட்டார். ஆனால் நம் குடும்பத்தினருக்காக பொதுநலத்துடன் செய்யும் பூஜைகள் யாகம் எதுவாக இருந்தாலும் சிவபெருமான் ஏற்றுக்கொள்வார். தன் பக்தர்கள் சாதாரணமான ஒரு வில்வ இலையை வைத்து பூஜை செய்தாலே கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருபவர். இப்படிப்பட்ட சிவபெருமானுக்கு நாம் சில பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்தால் நமக்கு என்னென்ன கிடைக்கும் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா ? ஆம் அதைப்பற்றி இந்த ஆன்மீகம் குறித்து தொகுப்பில் நாம் தெளிவாக காணலாம் வாருங்கள்.

அபிஷேக பொருள் மற்றும் பலன்
தயிர் – உடல் பலம், ஆரோக்கியம்.
பசு நெய் – ஐஸ்வரியம், பணம் சேரும்
கரும்புச் சாறு – தன விருத்தி
தேன் – தேகம் பொலிவு பெறும்.
சர்க்கரை – துக்கம் விலகும்.
புஷ்பங்கள் – பூலோக பாவம்
இளநீர் – சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.
ருத்திராட்சம் – ஆனந்த வாழ்வு அமையும்.
அரைத்த சந்தனம் – புத்திர பாக்கியம் கிடைக்கும்.
தூய நீர் – இழந்த பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.
வில்வம் – போக பாக்கியங்கள் வந்து சேரும்.
அன்னம் – தீர்க்காயுள், மோட்சம்
திராட்சைச் சாறு – அனைத்திலும் வெற்றி உண்டாகும்.
பேரீச்சம்பழம் – எதிரிகள் விலகுவார்கள்.
மாம்பழம் – தீராத வியாதிகள் நீங்கும்
மஞ்சள் கலந்த நீர் – மங்கலம்.