- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 6
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
நெல்லிக்காயில ரெண்டு வகையான நெல்லிக்காய் இருக்கு. ஒன்னு பெரிய நெல்லிக்காய் மற்றொன்று சின்ன நெல்லிக்காய் இந்த சின்ன நெல்லிக்காயிலையும் பெரிய நெல்லிக்காயில் இருக்கிற அளவுக்கு நிறைய சத்துக்கள் இருக்கு. அதனால பெரிய நெல்லிக்காய் மட்டும் தான் சாப்பிடணும் அப்படின்ற அவசியம் கிடையாது சின்ன நெல்லிக்காயும் சாப்பிடலாம். அது மட்டுமில்லாமல் இந்த பெரிய நெல்லிக்காய் விட சின்ன நெல்லிக்காய் தான் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். டேஸ்ட்டும் ரொம்பவே அருமையா இருக்கும். சூப்பரான அருமையான இந்த சின்ன நெல்லிக்காய் வச்சு ஒரு ஊறுகாய் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இப்போ நெல்லிக்காய் சீசன் அப்படின்றதால மரத்துல கொத்துக்கொத்தாக நெல்லிக்காய் காய்த்து தொங்கும். என்னதான் உப்பு மிளகாய் தூள் வச்சு சாப்பிட்டாலும் நிறைய சாப்பிட முடியாத அதனால இந்த மாதிரி ஊறுகாய் செஞ்சு ஒரு மூணு மாசத்துக்கு ஸ்டோர் பண்ணி வச்சுக்கோங்க டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். பிரிட்ஜ் குள்ள மூணு மாசத்துக்கு ஸ்டோர் பண்ணி வச்சுக்கிட்டீங்கன்னா கெட்டுப் போகாம எப்ப எல்லாம் வேணுமோ அப்பெல்லாம் எடுத்து சாப்பிட்டுக்கலாம். இந்த சுவையான டேஸ்டான ரெசிபியை கண்டிப்பா எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க.
ரசம் சாதம் சாம்பார் சாதம் தக்காளி சாதம் எல்லாத்துக்குமே சூப்பரான காமினேஷனா இருக்கும். அது மட்டும் இல்லாம தயிர் சாதத்துக்கு ஒரு சூப்பரான காமினேஷன் அப்படின்னு சொல்லலாம். தல தலன்னு தயிர் சாதம் செஞ்சு அதுகூட இந்த சின்ன நெல்லிக்காய் ஊறுகாய் வைத்து சாப்பிட்டால் அவ்வளவு சூப்பரா இருக்கும். டேஸ்டான இந்த ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. ரொம்ப ரொம்ப ருசியாவே இருக்கும் பாக்குறதுக்கு நாக்குல எச்சில் ஊறும். வெறும் சின்ன நெல்லிக்காயை பார்த்தாலே ஒரு சிலருக்கு நாக்குல எச்சில் ஊறும்.
ஆனா இந்த மாதிரி ஊறுகாய் செஞ்சா இன்னுமே பாக்குறதுக்கு செம சூப்பரா இருக்கும். இதுக்கு நம்ம வீட்ல அரைச்ச குழம்பு மிளகாய் தூள் பயன்படுத்தலாம் இல்லனா வெறும் மிளகாய்த்தூளும் பயன்படுத்தலாம். குழம்பு மிளகாய் தூள் சேர்க்கும் போது டேஸ்ட் இன்னும் சூப்பரா இருக்கும். காரணம் அந்த குழம்பு மிளகாய் தூள் நம்ம நிறைய மசாலா பொருட்கள் சேர்த்து இருப்போம். டேஸ்டான இந்த ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாரும் சாப்பாடு கொஞ்சம் அதிகமாவே சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த சுவையான சின்ன நெல்லிக்காய் ஊறுகாய் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ருசியான கலாக்காய் ஊறுகாய் இப்படி செஞ்சி பாருங்க! மாங்கய் ஊறுகாய் போல சாப்பிட ருசியாக இருக்கும்!
Ingredients
Method
ஒரு கடாயில் வெந்தயம் கடுகு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து ஆற வைத்து அரைத்துக் கொள்ளவும்.
அதே கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு சேர்த்து தாளித்ததும் கழுவி துடைத்து வைத்துள்ள நெல்லிக்காயை சேர்த்து வதக்கவும்.
நெல்லிக்காய் நிறம் மாறும் வரை வதக்கிய பிறகு குழம்பு மிளகாய் தூள் பெருங்காயத் தூள் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
பச்சை வாசனை போனதும் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்றாக கிளறி எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கினால் சுவையான நெல்லிக்காய் ஊறுகாய் தயார்.






