Advertisement
அசைவம்

வீட்டில் சுலபமாக செய்யக்கூடிய ருசியான சோம்பேறி மட்டன் வறுவல் இப்படி செய்து பாருங்கள்!

Advertisement

என்ன இது புதுசா சோம்பேறி மட்டன் வறுவல் என்று பெயர் வைத்திருக்கிறார்கள் என்று யோசிக்கிறீங்களா.. எப்போதும் சோம்பேறி சிக்கன் வறுவல் தானே செய்கிறோம். எப்ப பார்த்தாலும்  மட்டன் வாங்கி சமைக்கணும்னு நினைச்சாலே அது ரொம்ப பெரிய வேலையாக தெரியும். அப்படி ரொம்ப பீல் பண்ணி என்னடா பண்றது அப்படின்னு யோசிக்கிறவங்களுக்கு எல்லாம் தான் இந்த ஈஸியான சோம்பேறி மட்டன் வறுவல். நாம் மட்டனை யூஸ் பண்ணி  பெப்பர் ப்ரை,  குழம்பு , பிரியாணி இப்படி வித்தியாசமா உணவுகள் செய்திருப்போம்.

ஆனால் இப்ப பண்ண போறது சோம்பேறி மட்டன் எப்படி செய்யறதுன்னு தெரிஞ்சுக்க போறோம். ரொம்ப நிறைய வேலை செய்து வேலை செய்து டயர்டு ஆகுது அப்படி நினைக்கிறீங்களா ? அப்போ ரொம்ப ஈஸியா சிம்பிளா எதையாவது பண்ணி வேலைய முடிச்சுட்டே ரெஸ்ட் எடுக்கலாம் அப்படின்னு உங்களுக்கு தோணுதா ?அப்போ நீங்க இந்த சோம்பேறி மட்டன் வறுவல் ரெடி பண்ணி சாப்பிடலாம்.

Advertisement

அப்படி என்ன இந்த சோம்பேறி மட்டன் வறுவல் இருக்கு அப்படின்னா ரொம்ப வேலை செய்ய அலுப்பா இருக்கு அப்படின்னு நினைக்கிறவங்க எல்லாம் சிம்பிளா இந்த மட்டனை செய்து டேஸ்ட்டாவே சாப்பிடலாம். அதே மசாலா வச்சி கொஞ்சம் வேற மாதிரி யூஸ் பண்ணி இந்த மட்டன் செய்ய போறோம். நம்மளும் எவ்வளவு நாளைக்கு தான் ரொம்ப வேகமா  நிறைய வேலைகளை செய்றது. அதுக்கு தான் சுலபமா சோம்பேறித்தனமா எப்படி சமைக்கிறது அப்படிங்கறது கத்துக்க போறோம். சுலபமா ஈஸியா இந்த சோம்பேறி மட்டன் பண்ண போறோம். வாங்க இந்த சோம்பேறி மட்டன் வறுவல் எப்படி செய்யலாம்.

சோம்பேறி மட்டன் வறுவல் | Somberi Mutton Fry In Tamil

Print Recipe
இந்த சோம்பேறி மட்டன் வறுவல் இருக்கு அப்படின்னா ரொம்ப வேலை செய்ய அலுப்பா இருக்கு அப்படின்னு நினைக்கிறவங்கஎல்லாம் சிம்பிளா இந்த மட்டனை செய்து டேஸ்ட்டாவே சாப்பிடலாம். அதே மசாலா வச்சி கொஞ்சம்வேற மாதிரி யூஸ் பண்ணி இந்த மட்டன் செய்ய போறோம். நம்மளும் எவ்வளவு
Advertisement
நாளைக்கு தான் ரொம்பவேகமா  நிறைய வேலைகளை செய்றது. அதுக்கு தான்சுலபமா சோம்பேறித்தனமா எப்படி சமைக்கிறது அப்படிங்கறது கத்துக்க போறோம். சுலபமா ஈஸியாஇந்த சோம்பேறி மட்டன் பண்ண போறோம். வாங்க இந்த சோம்பேறி மட்டன் வறுவல் எப்படி செய்யலாம்.
Course Fry
Cuisine tamilnadu
Keyword Somberi Chicken Fry
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 354

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1/2 கிலோ மட்டன்
  • 1 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 பச்சைமிளகாய்
  • 1 துண்டு இஞ்சி
  • 4 பல் பூண்டு
  • 1 ஸ்பூன் மிளகாய்தூள்
  • 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • கொத்தமல்லி சிறிதளவு

Instructions

  • முதலில் மட்டனை நன்றாக சுத்தம் செய்து கழுவி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வெங்காயம், தக்காளி,இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் இவைகளை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • ஒரு கடாயில் சுத்தம் செய்து வைத்துள்ள மட்டனை சேர்த்து அதில் மஞ்சள் தூள், மிளகாய்தூள் , உப்புசேர்த்து பிசறி கொள்ளவும்
  • பிறகு  கலந்து வைத்துள்ளமட்டனில் வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துநன்றாக பிசறி கொள்ளவும்.
  • இப்பொழுது இந்த கடாயை எடுத்து அடுப்பில் வைத்து மேலாக எண்ணெய் ஊற்றி மூடி போட்டு வேக விடவும்.
  • ஐந்து நிமிடம் ஆனவுடன் மூடியை எடுத்து விட்டு நன்றாக மட்டனில் தண்ணீர் சேர்த்து கிளறி விடவும். உங்களுக்கு இந்த மட்டன் குழம்பு போல் வேண்டுமென்றால் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்துவேக வைக்கவும்.
  • அப்படி இல்லை வறுவல் போல் வேண்டும் என்றால் தண்ணீர் குறைவாக சேர்த்து எண்ணெய் ஊற்றி நன்றாக கிளறிவிடவும். மட்டனை மூடி போட்டு வேக வைக்கவும். அவ்வப்போது திறந்து கிளறி விட்டுக் கொண்டேஇருக்கவும்.
  • மட்டன் இருக்கும் நீரிலேயே இந்த  நன்றாக வெந்துவிடும். மட்டன் நன்றாக வெந்து சுருளவந்தவுடன் மேலே கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கி பரிமாறினால் சுவையான சுலபமான சோம்பேறி மட்டன் வறுவல் தயார்.

Nutrition

Serving: 200g | Calories: 354kcal | Carbohydrates: 34g | Protein: 12g | Potassium: 398mg | Calcium: 12mg

இதையும் படியுங்கள் : காரசாரமா  ருசியான மட்டன் கிரேவி இனி இப்படி செய்து பாருங்க! சாதம், இட்லி, தோசை , பூரி, சப்பாத்தியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்!

Advertisement
Ramya

Recent Posts

காலை டிபனுக்கு பக்காவான முள்ளங்கி ஊத்தாப்பம் ஒரு தடவை இப்படி செய்து பாருங்கள்! 2 ஊத்தாப்பம் அதிகமாவே சாப்பிடுவாங்க!

தென்னிந்தியாவை பொறுத்தவரை, இட்லி மற்றும் தோசை என்பது தவிர்க்க முடியாத ஒரு உணவாகும். இதிலும் தோசை என்று எடுத்துக் கொண்டால்…

3 மணி நேரங்கள் ago

சப்பாத்தி, புலவுடன் சாப்பிட ருசியான மஷ்ரூம் பட்டாணி கறி ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

காளான் பிரியரா நீங்கள் அல்லது உங்கள் வீட்டில் உள்ளோர் காளானை விரும்பி சாப்பிடுவார்களா? அதனை ஒரே மாதிரி சமைத்து போர்…

3 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தால் ஏற்படும் நன்மைகள்

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை திருதியை திதியை அட்சய திருதியையாக கொண்டாடுகிறோம். அத்தகைய அட்சய திருதியை அன்று…

4 மணி நேரங்கள் ago

பிரெஞ்ச் ப்ரைஸ் மாதிரி கேரட் ப்ரைஸ் என்று ஒரு தடவை அசத்துங்க!

இப்பலாம் குழந்தைகளுக்கு கடைகளில் கிடைக்கிற பிரெஞ்சு ப்ரைஸ் kfc சிக்கன் ,சிக்கன் ரோல், அப்படின்னா இந்த மாதிரி ஐட்டங்கள் தான்…

6 மணி நேரங்கள் ago

மாலை வேளையில் உங்கள் குழந்தைகளுக்கு பிடித்தமான இந்த வாழைப்பழ குழி பணியாரம் செய்து கொடுங்கள் சுவை மிகவும் அற்புதமாக இருக்கும்!!

தோசை முதல் இட்லி மற்றும் சாம்பார் வரை தென்னிந்திய உணவு எல்லாமே ஆரோக்கியம் தான். தென்னிந்திய உணவு வகைகளில் பெரும்பாலான…

7 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை 2024 என்ன பொருள் வாங்கி வைத்து, எந்த முறையில் பூஜை செய்தால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் ?

இந்தியாவில் இந்துக்கள், ஜயினர்கள் ஆகிய மதத்தினரால் மிகவும் புனிதமான நாளாக கருதப்படுகிறது அட்சய திருதியை திருநாள். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை…

10 மணி நேரங்கள் ago