- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- Side Dish
நான் வெஜ் பிரியர்கள் எல்லாருக்கும் ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொன்னு பிடிக்கும். ஒவ்வொருத்தருக்கு சிக்கன் மட்டன் பிடிக்கும் ஒவ்வொருத்தருக்கும் மீன் கடம்பா நண்டு இதெல்லாம் ரொம்ப பிடிக்கும். ஆனா ஒரு சிலர் இறால் விரும்பி சாப்பிடுவாங்க. அந்த வகையில இறால் வச்சு நிறைய ரெசிப்பீஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. இறால் பிரியாணி இறால் தொக்கு இறால் 65 அப்படின்னா எக்கசக்கமா சொல்லிக்கிட்டே போகலாம் ஆனால் இன்னைக்கு நம்ம இறால் வச்சு செய்யக்கூடிய ஒரு சிம்பிளான சோம்பேறி இறால் வறுவல் தான் செய்யப் போறோம்.
இந்த சோம்பேறி இறால் வறுவல் செய்றது ரொம்ப ரொம்ப ஈசி. இதுக்கு எல்லா பொருட்களையும் ஒன்னா சேர்த்து அரை மணி நேரம் ஊறவைத்து கடாயில் எண்ணெய் ஊத்தி நல்லா கிளறி வேக வச்சு எடுத்தா ரெடியாயிடும். நீங்க அவசர அவசரமா நிறைய வேலைகள் பாக்கறீங்க நேரம் பத்தல அப்படினா கண்டிப்பா இந்த சோம்பேறி இறால் வறுவல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க. வேலையும் சட்டுனு முடிஞ்ச மாதிரி இருக்கும். இந்த ரெசிபிக்காக பெருசா நம்ம கஷ்டப்படணும் அப்படின்ற தேவையில்லை. இந்த ரெசிபி வீட்ல இருக்கக்கூடிய எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். இத கொஞ்சம் தொக்கு பதத்துக்கு கிரேவி மாதிரி வச்சு சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட சூப்பரா இருக்கும்.
பழைய சாதத்துக்கு சைடிஷ் ஆகவும் வெச்சு சாப்பிடலாம். சப்பாத்தி இட்லி, தோசைக்கு சைடிஷ் ஆகவும் சாப்பிடலாம். எல்லாத்துக்குமே ஒரு பெர்பெக்ட் ஆன காம்பினேஷனா இருக்கும். ஒரு தடவை செஞ்சுட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க அந்த அளவுக்கு ஒரு சூப்பரான ரெசிபி தான் இது. இந்த ரெசிபிய செஞ்சி முடிச்ச பின்னாடி கடைசியா கடைல ஒட்டி இருக்கிற கொஞ்சம் கிரேவியோட சாதம் போட்டு பிசைஞ்சு சாப்பிட அவ்வளவு சூப்பரா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான சிம்பிளான அட்டகாசமான சோம்பேறி இறால் வறுவல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : அடுத்தமுறை இறால் வாங்கினால் கடலூர் ஸ்பெஷல் இறால் தொக்கு இப்படி செய்து பாருங்க! சுவை அட்டகாசமா இருக்கும் !!
Ingredients
Method
பாத்திரத்தில் இறாலை கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
அதனுடன் பச்சை மிளகாய், நறுக்கிய பெரிய வெங்காயம், கருவேப்பிலை கொத்தமல்லி இலைகள், நறுக்கிய தக்காளி சேர்த்து கலந்து கொள்ளவும்.
மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, சோம்பு தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
அதன் பிறகு ஒரு கடாயில் தாராளமாக எண்ணெய் சேர்த்து கலந்து வைத்துள்ள இறாலை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
தண்ணீர் எதுவும் சேர்க்கத் தேவையில்லை இறாலே தண்ணீர் அதிகமாக விடும். சுருள சுருள வதக்கி எண்ணெய் பிரிந்து வந்த பிறகு அடுப்பை அணைத்தால் சுவையான சோம்பேறி இறால் வறுவல் தயார்.






