நம் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருட்களும் ஒவ்வொரு தெய்வத்திற்கு உரியது. முக்கியமான நேரத்துல தானமாக கொடுப்பதன் மூலம் நமக்கு அது சாபமாக வரும் என்று சாஸ்திரத்தில் உள்ளது எந்தெந்த பொருட்களை தானம் செய்யக்கூடாது என்று சாஸ்திரத்தில் உள்ளது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

வெள்ளை நிற பொருட்கள்
அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரையில் வெள்ளை நிறத்தில் இருக்கக்கூடிய பொருட்களை மாலை நேரத்தில் யாருக்கும் தானமாக கொடுக்கக் கூடாது என்று நம் முன்னோர்கள் கூற கேட்டிருப்போம். குறிப்பாக உப்பு, பால், தயிர் போன்ற வெள்ளை நிற பொருட்களை மாலை நேரத்திற்கு பிறகு யாருக்கும் தானமாக கொடுக்கக் கூடாது. வீட்டில் நாம் சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய அரிசி கோதுமை போன்றவற்றையும் மாலை அந்தி சாய்ந்ததற்கு பிறகு கொடுக்கக் கூடாது ஏனென்றால் இந்த பொருட்களில் எல்லாம் அன்னபூரணியின் வாசம் இருக்கிறது. வட இந்தியர்களாக இருக்கும் பட்சத்தில் சப்பாத்தி உருட்டும் கட்டை தட்டு போன்றவற்றை யாருக்கும் தானமாக கொடுக்கக் கூடாது.
மகாலட்சுமி வாசம் செய்யக்கூடிய பொருள்
தென்னிந்திய மக்கள் பயன்படுத்தக்கூடிய அரிசி பானை சாதம் வைக்க கூடிய கரண்டி தட்டு அரிசி அளக்கும் அளவை போன்றவற்றை யாருக்கும் கடனாக கொடுக்கக்கூடாது. இதில் எல்லாம் மகாலட்சுமி தேவியார் வாசம் செய்கிறாள். இவர்களை கடனாக கொடுத்து விட்டால் வீட்டில் இருக்கக்கூடிய செல்வ வளம் அனைத்தும் வெளியே சென்று விடும் என்று கூறப்படுகிறது. எனவே தெரியாமல் கூட இந்த பொருட்களை யாருக்கும் கடனாக கொடுக்கக் கூடாது.
ஒவ்வொரு கிழமையிலும் தானமாக கொடுக்கக் கூடாத பொருள்
வெள்ளிக்கிழமை அன்று பாலை தானமாக கொடுக்கக் கூடாது சனிக்கிழமை என்று எண்ணையை எய்தானம் கொடுக்கக் கூடாது வியாழக்கிழமை என்று ஊறுகாயை தானம் கொடுக்கக் கூடாது. திருமணமான பெண்கள் வெள்ளிக்கிழமை அன்று அணிந்திருக்கக் கூடிய நகைகளை யாருக்கும் தானமாக கொடுக்கக்கூடாது கடனாகவும் கொடுக்கக் கூடாது. தங்க நகைகளில் மகாலட்சுமி பரிபூரணமாக வாசம் செய்கிறாள் அதனால் இதனை நீங்கள் மற்றவர்களுக்கு கொடுக்கும்போது உங்களிடத்தில் இருக்கக்கூடிய லட்சுமி அவர்களுக்கு போய் உங்களுக்கு வறுமை ஏற்பட வாய்ப்புள்ளது.
சுத்தம் செய்யக்கூடிய பொருட்கள்
வீட்டை சுத்தம் செய்ய பயன்படுத்தக்கூடிய ஒவ்வொரு பொருட்களிலும் மகாலட்சுமி தேவியார் வாசம் செய்கிறாள். மகாலட்சுமி தாயாருக்கு பிடித்த தூய்மை என்ற ஒரு விஷயத்தை நீங்கள் அலட்சியப்படுத்தக் கூடாது எனவே வீட்டை சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தக்கூடிய துடைப்பம் முறம் மாப் போன்றவற்றை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் அதனை யாருக்கும் கடனாக கொடுக்கவே கூடாது. இதனை சுத்தமாக வைத்து மற்றவர்களுக்கு தானமாக கொடுக்காத பட்சத்தில் மகாலட்சுமி தாயார் வீட்டில் எப்பொழுதும் நிலையாக தங்குவார். வேலை குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் யாருக்கும் தானமாக கொடுக்காமல் இருந்தால் நிச்சயமாக உங்களுடைய வீட்டில் மகாலட்சுமி தாயார் நிரந்தரமாக தங்குவாள்.
இதனையும் படியுங்கள் : அதிர்ஷ்டம் பெற இந்த 5 பொருட்களை மட்டும் வியாழக்கிழமை அன்று தானம் செய்து பாருங்கள்!




