நாம் வீட்டில் பூஜை அறையை எவ்வளவு சுத்தமாக வைத்துக் கொள்கிறோமோ அதே அளவிற்கு வீட்டில் உள்ள பீரோவையும் சுத்தமாக வைக்க வேண்டும். பீரோவில் நாம் ஒரு சில பொருட்களை வைப்பதன் மூலம் பணம் பீரோவில் தங்குவது கிடையாது. அப்படி இருக்கும் போது அந்த பொருட்களை எல்லாம் வெளியேற்றி விட்டால் மிகவும் விரைவிலேயே பல பிரச்சினைகள் அனைத்தும் சரியாகிடும். எனவே பீரோவில் ஒரு சில பொருட்களை நாம் வைக்க வேண்டும் ஆனால் ஒரு சில பொருட்களை வைக்கக்கூடாது அப்படி என்னென்ன பொருட்களை வைக்க வேண்டும் வைக்கக் கூடாது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

பீரோவில் வைக்க கூடாத சில பொருட்கள்
நம் வீட்டு பீரோவில் ஆண்கள் பெண்கள் பயன்படுத்தக்கூடிய உள்ளாடைகளை வைக்கவே கூடாது. இரண்டாவது நகை அடமானம் சொத்து பத்த அடமானம் வைத்த பத்திரங்களை பீரோவில் வைக்கக்கூடாது கவரிங் நகைகளையும் பீரோவில் வைக்கக்கூடாது. நெயில் பாலிஷ் மேக்கப் சம்பந்தமான பொருட்கள் போன்றவற்றை வைக்கவே வேண்டாம். மேலும் புதிதாக வாங்கிய சிரிப்பை கூட பீரோவில் வைப்பது தவறானது. பணம் வைக்கும் பீரோவில் இது போன்ற பொருட்களை வைப்பதை தவிர்த்து விட வேண்டும். இவைகள் தான் பணம் சேர்வதற்கு தடையாக உள்ளவை. மேலும் பீரோ துருப்பிடித்து ஆங்காங்கே உடைந்து போய் இருக்கக் கூடாது மிகவும் பழுதான நிலையில் உள்ள பீரோவை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பீரோவில் நாம் பணம் நகை புத்தாடைகள் போன்றவற்றை வைப்போம். முன்பெல்லாம் பீரோ இருந்தாலே அது பணக்கார வீடாக இருக்கும். ஆனால் இப்பொழுதெல்லாம் அப்படி கிடையாது.
பீரோவில் வைக்க வேண்டிய சில பொருட்கள்
பீரோவில் துணிகளுக்கு இடையே ஒரு வெள்ளை துணியில் வசம்பை கட்டி வைக்கலாம் மேலும் காய்ந்து போன பூக்களை வைக்கலாம். போன்றவற்றை காற்றின் துணியில் கட்டி பீரோவில் வைப்பதன் மூலம் பீரோவுக்கு நேர்மறையான ஆற்றல் உண்டாகும். பீரோக்குள் நாம் பணம் வைக்கும் பெட்டியில் சிறியதாக அதிமதுரக் கட்டை வைக்கலாம் இது சுக்கிரனுக்கு உரிய பொருளாக உள்ளது. இந்த அதிமதுரக் கட்டை வீட்டில் பணத்தை ஈர்க்கக்கூடிய ஒரு பொருள். வீட்டில் குங்குமச்சிமிழ் இருந்தால் அதனையும் பீரோக்குள் வைக்கலாம் ஆனால் கவனமாக வைக்க வேண்டும். பீரோவை அழகாக சுத்தம் செய்த வீட்டில் பூஜை செய்யும் போது பீரோவிற்கும் ஊதுபத்தி சாம்பிராணி காட்டி பணம் தங்க வேண்டும் என்று மகாலட்சுமி தேவியை வேண்டிக் கொள்ள வேண்டும்.
இதனையும் படியுங்கள் : கொடுத்த பணம் திரும்ப கிடைக்க பரிகாரம்


