பணம் சேர வேண்டுமா ? புதிய பைக் வாங்க வேண்டுமா ? தங்கம் சேர வேண்டுமா ? இந்த ஒரு பூஜை மட்டும் செய்யுங்கள்!

- Advertisement -

பொதுவாக ஆன்மீகத்தை பொருத்தவரை நம்முடைய தேவைகள் பூர்த்தியாக வேண்டும் என்றால் அதற்காக சாஸ்திரங்கள் கூறும் பரிகாரங்களோ, பூஜைகளையோ சரியான முறையில் நாம் செய்து வந்தாலே போதும் நமக்கான பலன் நமக்கு கிடைக்கும் அப்படி உங்களுக்கு இருக்கும் பல தேவைகளை ஒரே நேரத்தில் பூர்த்தி ஆவதற்கும் ஆன்மீகத்தில் சில பூஜைகளும் பரிகாரங்களும் சொல்லப்பட்டுள்ளன. அப்படி ஒரு சக்தி வாய்ந்த பூஜையை பற்றி தான் நாம் இன்று பார்க்க போகிறோம் இந்த ஒரு பூஜையை மட்டும் நீங்கள் சரியாக செய்து முடித்து விட்டால் போதும் உங்கள் தேவை என்னவாக இருந்தாலும் அது பூர்த்தியாகும்.

-விளம்பரம்-

சௌபாக்கிய பூஜை

பொதுவாக நாம் வீட்டு பெரியோர்கள் பெண்களை ஆசீர்வாதம் செய்யும்போது சௌபாக்கியவதி ஆக வாழ்வாய் என்று ஆசீர்வாதம் செய்வார்கள். இதில் சௌபாக்கியவதி என்பதற்கான அர்த்தம் அனைத்தையும் நலன்களையும் பெற்று ஒரு நல்ல வாழ்க்கை வாழ் என்பதே அர்த்தம். அதே போலத்தான் நம்முடைய தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து நம்மை ஒரு செழிப்பான வாழ்வை வாழவைக்கும் இந்த பூஜையின் பெயரும் சௌபாக்கிய பூஜை. இப்படி இந்த சௌபாக்கிய பூஜையை நீங்கள் செய்யும் போது நீங்கள் தொழில் வியாபாரம் நடத்துவராக இருந்தால் உங்கள் தொழிலில் வியாபாரம் நன்றாக பெருகி அதில் லாபம் நிறைய கிடைக்கும். அது போல உங்கள் வீட்டில் பணம் தங்கம் என அனைத்தும் சேரும் புதியதாக வீடுகள், வாகனங்கள் போன்றவை வாங்குவதற்கான யோகங்கள் கைகூடி வரும் இப்ப டிசொல்லிக் கொண்டே போகலாம்.

- Advertisement -

தேவையானவை

இப்படி நம் வாழ்க்கையை செல்வ செழிப்போடு வாழ்வதற்கு வழி புரியும் இந்த சௌபாக்கிய பூஜை எப்படி செய்வது என்று பார்க்கலாம். முதலில் இந்த சௌபாக்கிய பூஜையை செய்வதற்கு நமக்கு சிவலிங்கம், சாளக்கிராமம், ஸ்ரீ மேரு மற்றும் ருத்ராட்சம் இந்த பொருள்கள் எல்லாம் தேவைப்படும் மேலும் இந்த பூஜையில் நாம் இந்த பொருட்களுக்கெல்லாம் காய்ச்சாத சுத்தமான பசும் பாலால் தினசரி அபிஷேகம் செய்து மலர்களால் அர்ச்சனை செய்து, வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் போன்றவற்றை நெய்வேத்தியம் ஆக வைத்து கற்பூர ஆராதனை காட்ட வேண்டும். இதுதான் சௌபாக்கிய பூஜை செய்யும் முறை.

சிவலிங்கம்

இதில் இதில் நாம் முதலில் அபிஷேகம் அர்ச்சனை செய்ய வேண்டிய பொருள் சிவலிங்கம் இப்படி நீங்கள் இந்த சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும்போதும் அர்ச்சனை செய்யும் பொழுதும “ஓம் நமச்சிவாய” என்ற பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இப்படி இந்த மந்திரத்தை நாம் சரியாக உச்சரிந்து அபிஷேகம் அர்ச்சனைகள் செய்யும்போது சிவபெருமானின் பரிபூரண அருள் கிடைக்கும்.

சாளக்கிராமம்

இரண்டாவதாக நாம் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்யும் பொருளாள் சாளக்கிராமத்திற்கு அபிஷேகம் அர்ச்சனை செய்யும் போது “ஓம் நமோ நாராயணய” என்ற விஷ்ணுவின் மந்திரத்தை நாம் உச்சரிக்க வேண்டும். இப்படி நாம் விஷ்ணுவின் மந்திரத்தை உச்சரித்து அபிஷேகம் அர்ச்சனை செய்யும் போது விஷ்ணு பகவானின் பரிபூரண அருளும் நமக்கும் கிடைக்கும்.

-விளம்பரம்-

ஸ்ரீ மேரு

மூன்றாவதாக நம் அபிஷேகம் அர்ச்சனையும் செய்ய வேண்டிய பொருள் ஸ்ரீ மேரு இந்த பொருள் மகாலட்சுமியின் ஒரு அம்சமாக சாஸ்திரங்களில் சொல்லப்படும். இப்படி ஸ்ரீ மேருக்கு அபிஷேகமும் அர்ச்சனையும் செய்யும் பொழுது மகாலட்சுமியின் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் அல்லது அஷ்டலட்சுமி ஸ்தோத்திரத்தை உச்சரிக்க வேண்டும். இப்படி நாம் இந்த மகாலட்சுமி மந்திரங்களை உச்சரித்து அபிஷேகமும், அர்ச்சனையும் செய்யும் போது நமக்கு மகாலட்சுமியின் பரிபூரண ஆசீர்வாதமும், லட்சுமி கடாட்சமும் கிடைக்கும்.

ருத்ராட்சம்

கடைசியாக நாம் அபிஷேகம் மட்டும் அர்ச்சனை செய்ய வேண்டிய பொருள் ருத்ராட்சம் ஆகும். ருத்ராட்சத்திற்கு நாம் அபிஷேகம் மட்டும் அர்சனைகள் செய்யும் பொழுது சரஸ்வதி தேவியின் மந்திரங்களை உச்சரித்து நாம் ருத்ராட்சத்திற்கு அபிஷேகமும் அர்ச்சனையும் செய்யும் பொழுது சரஸ்வதி தேவியின் ஆசீர்வாதமும் நமக்கு கிடைக்கும் இப்படி இந்த நான்கு தெய்வங்களின் அருளும் இருக்கும் ஒருவர் என்ன நினைத்தாலும் அவர்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி ஆகிவிடும். அதுவே இந்த பூஜையும் நோக்கமாகும்

தானம் செய்யலாம்

இப்படி இந்த பொருட்களை எல்லாம் வாங்கி அதற்கு அபிஷேகம் அர்ச்சனை செய்யும் போது இந்த மந்திரங்களை உச்சரித்து கொண்டு தினசரி வழிபட முடியாதவர்கள். இந்த பூஜைக்கு நான் மேலே சொன்ன நான்கு பொருட்களையும் வாங்கி அதனுடன் ஒரு நந்தி சிலையும் வாங்கி தினசரி சிவபூஜை செய்பவர்களுக்கு வியாழக்கிழமை தினத்தில் தானமாக வழங்கினால் இந்த சௌபாக்கியா பூஜை செய்யும் போது உங்களுக்கு கிடைக்கும் அதே பலன் இந்த தானத்தின் மூலமாகவும் கிடைக்கும். இதுவும் முடியாத என்றால் இந்த பொருட்களை எல்லாம் கோவில்களில் தானமாக கொடுத்து அர்ச்சகரியிடம் அதற்கு அபிஷேகம் செய்ய சொல்லலாம் இதுபோன்று நாம் செய்யும் போது நாம் தேவைகள் அனைத்தும் பூர்த்தி ஆகி செல்வது செழிப்பான ஒரு வாழ்க்கை வாழலாம் நம்பிக்கையோடு செய்து பாருங்கள் நல்ல பலனை கிடைக்கும்.

-விளம்பரம்-

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here