- Prep
- 5 min
- Cook
- 15 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு சால்னா ரொம்ப பிடிக்குமா? அதை உங்கள் வீட்டில் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கு தான் இந்த பதிவில் கூறியுள்ள செய்முறையை பின்பற்றி இன்று உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுங்கள். இந்த சால்னா பரோட்டா, சப்பாத்திக்கு மட்டுமின்றி தோசை, இட்லி, பூரி போன்றவற்றிற்கும் அட்டகாசமாக இருக்கும்.
உங்கள் வீட்டில் உள்ளோரை அசத்த நினைத்தால், நிச்சயம் இந்த மீல் மேக்கர் சால்னாவை முயற்சிக்கலாம். இந்த மீல் மேக்கரை பலவாறு சமைத்து சாப்பிடலாம். பொதுவாக மீல் மேக்கரை பிரியாணியில் தான் சுவைத்திருப்பீர்கள். இல்லையெனில் குருமா, கிரேவி போன்றவற்றை தான் சுவைத்திருப்பீர்கள். ஆனால் ஒருமுறை இந்த சால்னாவை செய்யுங்கள். இப்படி சால்னாவை செய்யும் போது, மட்டன் சால்னாவே தோற்றுப் போகும் அளவில் ருசி இருக்கும். இந்த மீல் மேக்கர் சால்னா செய்வது மிகவும் சுலபம்.
அதோடு, இது அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். குறிப்பாக இது அவசர நேரத்தில் செய்ய ஏற்றது. சிம்பிளா அதே சமயம் ரொம்ப சுவையான சால்னா இது. ரொம்ப மெனக்கிடாமல் ஈசியாக பத்தே நிமிடத்தில் செய்துவிடலாம். இனி பரோட்டா, சால்னா சாப்பிட வேண்டுமென்று தோன்றினால் கடைகளுக்கு செல்ல வேண்டாம் ஈஸியாக வீட்டிலேயே செய்யலாம். நல்ல சுவையில் ஆரோக்கியமான சால்னா செய்யும் போதே மணம் வீசும்படி எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் மீல் மேக்கர் மிளகு வறுவல் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!
Ingredients
Method
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு வறுத்து மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். அதன்பிறகு நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து சிறிதளவு தண்ணீர் மற்றும் உப்பு விட்டு கொதிக்க விடவும்.
பின் நாம் எடுத்து வைத்துள்ள காய்கறிகள், ஊற வைத்த மீல் மேக்கர் சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.
அதன்பிறகு சால்னாவில் எண்ணெய் பிரிந்து வந்ததும் தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி விட்டு கொத்தமல்லி சேர்த்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான மீல் மேக்கர் சால்னா தயார்.






