இந்த உலகில் வாழும் ஜீவராசிகளில் பேசும் திறன் என்பது நமக்கு மட்டுமே உள்ளது. வேறு எந்த உயிரினத்திற்கும் இந்த பேச்சு திறன் என்பது கிடையாது. இப்படி என்னதான் அனைத்து மனிதர்களுக்கும் பேச்சு திறன் இருந்தாலும் பல நபர்களால் சரிவர பேச முடியாது. அவர்கள் பேச வேண்டும் என்று நினைத்தாலும் அவர்கள் மனதில் சில தயக்கம், தடுமாற்றம் இருந்து கொண்டே தான் இருக்கும். ஆனால் சில நபர்கள் தங்களின் பேச்சுக்கள் மூலமாக தாங்கள் நினைத்ததை சாதித்துக் கொள்ளவும், தங்கள் பேச்சை வைத்து அனைவரையும் மயக்கியும் கொள்வார்கள். நீங்களே சிந்தித்துப் பாருங்கள் உங்களுக்குத் தெரிந்த நபர் ஒருவர் பேசி பேசியே அனைவரையும் தன் கைவசம் வைத்துக் கொள்வார். அவர் என்ன சொன்னாலும் அவர் உடன் இருப்பவர்கள் கேட்பார்கள். இப்படி பேசும் திறன் என்பது சில ராசிக்காரர்களுக்கு அவர்களது பிறப்பிலிருந்து அவர்களுடன் இருக்கும். அதுஎந்தெந்த ராசிக்காரர்கள் என்பதை பற்றி இந்த தொகுப்பில் காணலாம் வாருங்கள்.
அப்படியே மறக்காம எங்க YouTube சேனலையும் Subscribe பண்ணிருங்க.
மீனம் ராசிகாரர்கள்
மீனம் ராசிக்காரர்களுக்கு எங்கும் குறைந்த அளவு மரியாதை மட்டும் இருக்கும். இந்த பிரச்சினையின் காரணமாக இவர்கள் அடுத்தவர்களுடன் எப்போதும் இனிமையாகவும், பாசமாகவும் பேசுவார்கள். ஆனால் இவர்களும் பேசியே மயக்கி விடுவார்கள் மேலும் இவர்களுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் அவர்களுக்கு உதவி கரம் நீட்டுவதற்கு இயற்கையாகவே இவர்களுடன் இறக்க குணம் உடைய நபர்களை வைத்துக் கொள்வார்கள். இப்படி இந்த மீனம் ராசிக்காரர்களுக்கு உதவி கரம் தேவைப்படும் போதெல்லாம் அவர்கள் உதவி செய்வதற்கு நிலையாக இருப்பார்கள். இந்த பண்பு மீனம் ராசிக்காரர்களுக்கு இயற்கையாகவே அமைந்த ஒன்று.
கன்னி ராசிகாரர்கள்
கன்னி ராசிக்காரர்களும் இயற்கையாகவே இனிமையாக பேசும் திறன் கொண்டவர்கள். இவர்கள் எப்பொழுதும் சிந்தித்துக் கொண்டும் திட்டமிட்டுக் கொண்டே தான் இருப்பார்கள். தான் திட்டமிட்டதை பற்றி சிந்தித்து கொண்டு இருப்பதால் தங்கள் கருத்துக்களை வெளியில் கூறுவதற்கு முன்னாடி தங்கள் கருத்துக்களை தங்களது இனிமையான பேச்சுக்களுடன் தொடுந்து கூறி அனைவரையுமே மயக்கி விடுவார்கள்.
மிதுனம் ராசிகாரர்கள்
மிதுனம் ராசிக்காரர்களுக்கும் ஒருவரை பேசி கவர்ந்து விடுவது எளிதான செயலாக இருக்கும். ஏனென்றால் மிதுனம் ராசிக்காரர்கள் யாரிடம் பேச தயங்க மாட்டார்கள் பேச விரும்புவரிடம் உடனடியாக சென்று பேசி விடுவார்கள். அவர்களை சுற்றியுள்ள நபர்களை பற்றி தெரிந்து கொள்வதில் மிகவும் ஆர்வமுடன் செயல்படுவார்கள். இதனால் இவர்களும் அடுத்த நபர்களிடமும் வெளிப்படையாக இருக்கும் குணம் கொண்டவர்கள். இதனாலையே இவர்களுக்கு பேசும் கலை என்பது இயற்கையாக உள்ள பண்பு.
துலாம் ராசிகாரர்கள்
துலாம் ராசி கொண்டபர்கள் எப்பொழுதும் அமைதியை விரும்பும் குணம் கொண்டவர்கள் என்று சொல்வார்கள். எவ்விதமான சூழ்நிலை ஏற்பட்டாலும் யாருடன் உண்டான மோதல்களையும் தவிர்க்கவே எண்ணுவார்கள். அவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை வந்தாலும் அடுத்தவர்களுடன் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள் தங்களுக்கு உள்ளே வைத்துக் கொள்வார்கள். இவர்கள் பேசிப் பழகும் நண்பர்கள் வட்டாரம் ஒரே மாதிரியான பண்புகள் இருப்பவராக இருப்பார்கள். அவர்களுடன் மட்டுமே பேசி பழகுவார்கள் இவர்களிடம் பேசி அடுத்தவரை மயக்கும் அன்பு இயல்பாகவே இருக்கும் அது மட்டுமில்லாமல் ராஜதந்திரம் என்ற பண்புகளும் இவர்களிடையே காணப்படும்.
விருச்சிகம் ராசிக்காரர்கள்
விருச்சிகம் ராசிக்காரர்கள் பேச்சு எப்படி இருக்கும் என்றால் திறமையாக பேசுவார்கள், உணர்ச்சிபூர்வமாக பேசுவார்கள் மற்றும் இனிமையாகவும் பேசுவார்கள். இவர்கள் தந்திரமாக பேசக்கூடிய நபர்களும் கூட இவர்கள் உணர்ச்சிகரமாக பேசியும், பரிசு பொருட்களை வழங்கியும் அதன் மூலமாக தங்கள் என்னத்ததை சாதித்துக் கொள்ளக்கூடிய திறன் படைத்தவர்கள். இவர்கள் இவர்களிடம் இருக்கும் திறமையான பேச்சாள் அவர்களுக்கு தேவைப்படும் பொழுதுதான் அடுத்தவர்களிடம் பேசுவார்கள் இல்லையென்றால் அவர்களிடம் சரியாக பேச மாட்டார்கள்.