- Prep
- 5 min
- Cook
- 20 min
- Total
- 25 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை அன்று பெரும்பாலான அசைவ பிரியர்கள் மட்டன் தான் அதிகமாக சமைப்பார்கள். அசைவப் பிரியர்களின் முதன்மையான தேர்வு மட்டன் குழம்பாகவே இருக்கும், குறிப்பாக வீக் எண்ட் நாட்களில் மட்டன் உணவு விரும்புகிற அசைவப் பிரியர்கள் அதிகம். அசைவம் என்றால் போதும் எல்லோருக்கும் நாவில் எச்சில் ஊற ஆரம்பித்து விடும். அசைவத்தில் எல்லோருக்கும் எல்லாம் பிடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு சிலருக்கு கோழி, மீன், இறால், நண்டு போன்றவை பிடிக்கலாம். ஆனால் ஒரு சிலருக்கு ஆட்டுக்கறி பிடிக்காது, ஒரு சிலர் ஆட்டுக்கறி விரும்பி சாப்பிடுவர்கள்.
நாம் எப்பொழுது மட்டன் வாங்கினாலும் மட்டனை பயன்படுத்தி அதிக பட்சமாக மட்டன் குழம்பு அல்லது மட்டன் கிரேவி மட்டும் தான் பெரும்பாலும் சமைப்போம். அதுவும் ஒரே மாதிரியான மட்டன் குழம்பு, கிரேவி வைக்கும் பொழுது மட்டன் பிரியர்களுக்கு அதை சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருக்கும். அப்படி விரும்பி சாப்பிடுபவர்களுக்கு உதவும் வகையில் இந்த தொகுப்பில் காரசாரமான மட்டன் வறுவல் மிகவும் சுவையாக எப்படி வைக்கலாம் என்று பார்க்கலாம். இந்த காரசாரமான மட்டன் வறுவல் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
இது தவிர சப்பாத்திக்கும் அட்டகாசமாக இருக்கும். இதன் செய்முறை எளிது என்பதால் பேச்சுலர்களும் இதை செய்து சாப்பிடலாம். அதுமட்டுமல்லாமல் பெரும்பாலும் குழந்தைகள் சிக்கனைத் தான் விரும்பி சாப்பிடுவார்கள். சிக்கன் 65, சில்லி சிக்கன், சிக்கன் குழம்பு போன்றவற்றையே சாப்பிடுவார்கள். ஆனால், மட்டனே பிடிக்காத குழந்தைகளும் விரும்பி உண்ணும் இந்த காரசாரமான மட்டன் வறுவல் செய்து கொடுத்துப் பாருங்கள். கண்டிப்பாக பாராட்டுகள் குவியும். முக்கியமாக மட்டன் பிடிக்காதவர்கள் இதனை சுவைத்தால், இதற்கு அடிமையாகி விடுவார்கள். இப்போது சுவையான காரசாரமான மட்டன் வறுவல் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு
Ingredients
Method
முதலில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் மட்டனை சேர்த்து அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் விட்டு ஆறு விசில் விட்டு இறக்கவும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வேகவைத்த மட்டனை சேர்த்து நன்கு சுருள வதக்கி கொத்தமல்லி சிறிதளவு தூவி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான காரமான மட்டன் வறுவல் தயார்.






