ஆவணி மாதம் தமிழில் ஆண்டின் ஐந்தாவது மாதமாக கருதப்படுகிறது. இதை “மடங்கல்” அல்லது “கார்” என்றும் அழைக்கிறார்கள். இது சூரியன் சிம்ம ராசியில் பயணிக்கும் 31 நாட்கள் கொண்ட தமிழ்ப் மாதம். ஆவணி மாதம் ஆன்மிக ரீதியாகவும், அதிக திருவிழாக்கள் நடைபெறும் விரதத்திற்கும் சிறப்பு வாய்ந்ததாகும். இதில் பெண்கள் அதிகமாக விரதங்கள் மேற்கொள்வதும், பல முக்கிய பண்டிகைகளும் வரும் மாதமாகும். கேரளத்தில் இதுவே முதல் மாதமாகவும் சிம்ம மாதமாகவும் கொள்ளப்படுகின்றது. ஆவணி என்பது துன்பங்கள் நீங்கும் மாதம் என்றும், இது ஈசனுக்கு உரிய மாதம் என்றும் சொல்வர். அந்த வகையில் இந்த மாதத்தில் அதிக நன்மைகளை பெறவிருக்கும் ராசிக்காரர்கள் யார் என்று இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம்.
மேஷம்

குழந்தைகளின் கல்வி தொடர்பான பணிகளில் வெற்றி கிடைக்கும். நினைத்த காரியம் கைகூடும். உங்களின் நிதிநிலை முன்பாக அதிகரிக்கும். தன்னம்பிக்கை நிறைந்த மாதமாக இருக்கும். நீங்கள் செய்த வேலை பிறரால் பாராட்டப்படும். ஆன்மீகம் சார்ந்த விஷயத்தில் ஆர்வம் அதிகரிக்கும். அரசு பணி தொடர்பான முயற்சிகளில் உள்ளவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். வெளிநாட்டு பயணம் தொடர்பான முயற்சியில் வெற்றி கிடைக்கும்.
ரிஷபம்

குடும்பத்தில் இணக்கம் நிலவும். வீடு சொத்து வானம் வாங்குவதற்கான வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். இந்த மாதத்தில் நீங்கள் எடுக்கக்கூடிய சிறிய முயற்சிகள் கூட சிறப்பான பலனைத் தரும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. அரசு துறையில் சிறப்பான பலனை பிரிவீர்கள். காதல் தொடர்பான விஷயத்தில் இணக்கமான சூழல் எதிர்பார்க்கலாம். தந்தையின் மூலம் நிதி நன்மை பெறுவீர்கள்.
மிதுனம்

வேலையில் ஈடுபாட்டுடன் உங்கள் முழு திறமையை காட்டுவீர்கள். தன்னம்பிக்கை நிறைந்திருக்கும். காரிய தடைகள் அனைத்தும் நீங்கும். உங்களின் வேலைகளை சரியான நேரத்தில் முடித்து பாராட்டு பெறுவீர்கள். சிலருக்கு புனித யாத்திரை செல்ல வாய்ப்பு கிடைக்கும். ஆன்மீக செயலில் ஆர்வம் அதிகரிக்கும். வெளிநாடு தொடர்பான விஷயங்களில் சாதக பலன்கள் கிடைக்கும். அரசு தொடர்பான விஷயத்தில் சாதகமான சூழல் இருக்கும்.
கடகம்

நிதி ரீதியாக வலுவான நிலை இருக்கும். பேச்சுதிறனால் காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். புதிய வேலை, திட்டங்களைச் செயல்படுத்த நினைப்பவர்களுக்கு அதில் முன்னேற்றம் உண்டாகும். வேலையை முடிப்பதிலும், வருவாய் பெருக்குவதற்கான முயற்சிகள் வெற்றி பெறும். குடும்ப வாழ்க்கையில் நல்ல முடிவுகளை எடுக்கலாம். மூதாதையரின் சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். ஆக்கப்பூர்வமான பணிகளில் சிறப்பான வெற்றி பெறுவீர்கள். எதிரிகளை எளிதாக தோற்கடிப்பீர்கள்.
சிம்மம்

ஆளுமை மேம்படும். சமூகத்தில் அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் கடின உழைப்பின் முழு பலனை பெற்று மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் திறமையை நிரூபிக்க முடியும். பிள்ளைகள் வழியில் இருந்து நல்ல செய்திகள் வரவிருக்கும். தலைமைத்துவ திறன்கள் மேம்பட்டு தன்னம்பிக்கை ஏற்படும். உங்களின் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். அரசாங்கம் தொடர்பான வேலையில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்கள் கல்வி, போட்டிகள் தொடர்பான விஷயத்தில் சாதகமான பலன்கள் உண்டு.
துலாம்

ஆசைகள் நிறைவேறும். வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. நன்மைகள் பல தானாகவே உங்களைத்தேடி வரும். தடைபட்ட வேலைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். பணியிடத்தில் உங்களுக்கு பாராட்டும், பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய லாபம் கிடைத்து மகிழ்ச்சியடைவீர்கள். பரம்பரை சொத்து தொடர்பான தகராறுகள், பிரச்னைகள் தீரும். காதல் திருமணம் கைகூடும். வியாபாரம் மற்றும் தொழிலில் நீங்கள் நல்ல முடிவுகளை எடுக்கலாம்.
விருச்சிகம்

வேலையில் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உங்களின் வேலையை சிறப்பாக செய்து முடித்து பாராட்டு வாங்குவீர்கள். பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. உயர் அதிகாரிகள் உங்கள் திறனை பாராட்டுவார்கள். வேலை வாய்ப்பு, மாணவர்களுக்கு படிப்பில் வெற்றியும் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள்.
தனுசு

ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. நிலுவையில் உள்ள வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்களின் சகோதர, சகோதரிகளுக்கு உதவ முன் வரலாம். மாணவர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவார்கள். கல்வி, வேலை தொடர்பாக வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு முயற்சி நிறைவேறும். குழந்தை பாக்கியத்திற்காக வேண்டும் தம்பதிகளுக்கு அந்த வரம் கிடைக்கும்.
மீனம்

வேலையில் தொழிலில் உங்கள் செயல் திறன் சிறப்பாக இருக்கும். தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புகளும் கிடைக்கும். நிதிநிலைமை மேம்பட்டு கடனிலிருந்து விடுபட வாய்ப்பு கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த தகராறு, மனவருத்தம் தீரும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு சாதகமான காலம். திருமண தம்பதிகளுக்கு குழந்தைப்பேறு வாய்ப்பு உண்டு. மேலதிகாரியுடன் இனிமையான உறவு ஏற்படும். பயணங்களின் மூலம் நன்மைகள் நடக்கும். அரசு தொடர்பான வேலைகள் விரைவாக முடியும்.
இதனையும் படியுங்கள் : சனிப்பெயர்ச்சியில் எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய சில ராசிகள்!!


