
பொதுவாகவே நம்ம ஊர் பகுதிகளில் நாம் எங்கும் வெளியில் செல்லும் போதும், குடும்பத்துடன் சுப காரியங்களுக்கு செல்லும் பொழுதும், இது போன்ற நாம் வீட்டை விட்டு வெளியேறும் போது எதிரே பூனை வந்தால் சகுனம் சரியில்லை சிறிது நேரம் அமர்ந்து விட்டு செல்லுங்கள் என்று வீட்டில் உள்ள பெரியோர்கள் சொல்லி கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் நாம் இன்றும் அந்தப் பூனையை மட்டும் குறை சொல்லிக் கொண்டு இருப்போம் ஆனால் அதையும் தாண்டி நாம் வெளியில் செல்லும் பொழுது இன்னும் சில விலங்குகளை நம் எதிரில் வரும் பொழுது அதை நமக்கு நல்ல சகுனமாகவும் இருக்கும் அதனால் நான் போகின்ற காரியமும் சிறப்பாக நடக்கும். அதனால் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் இதைப் பற்றி தெளிவாக காணலாம் வாருங்கள்.
இந்து கடவுள்கள் என எடுத்துக் கொண்டால் அனைத்து கடவுள்களின் அம்சமாக விளங்குவது பசு மாடு தான். அதற்கு நிறைய தெய்வீக தன்மை இயற்க்கையாகவே நிறைந்துள்ளது. அதனால் நாம் வெளியே செல்லும் பொழுது பசு எதிரே வந்தால் அது மிகவும் நல்ல சகுனமாகும் அதுவும் பசுமாட்டின் பின்புறம் தொட்டு வணங்கி சென்றால் நாம் செல்லும் காரியம் நல்லபடியாக நடக்கும்
நீங்கள் பலரும் ” என்னைப்பார் யோகம் வரும்” என்ற குதிரையின் படங்களை அதிகம் பார்த்திருப்பீர்கள். அதேபோல் தான் நாம் வெளியே செல்லும் பொழுது எதிரில் கழுதை அல்லது குதிரை வந்தால் கூட அது நமக்கு நல்ல சகுனம் தான்.
மூஞ்சுறு விநாயகரின் வாகனமாகும் அதனால் முதல் கடவுள் விநாயகரின் அம்சமான மூஞ்சுறு நாம் வெளியும் எதிரே வந்தால் அது ரொம்ப ரொம்ப நல்ல சகுனம் அதனால் நீங்கள் செல்கின்ற காரியம் சுபமாக முடியும்.
நாம் வெளியே செல்லும் பொழுது நமக்கு எதிரே நாய் வந்தாலும் அதுவும் மிகவும் நல்ல சகுனம். ஏனென்றால் நாய் பைரவரின் வாகனமாகும் பைரவரின் முழு ஆசியும் பெற்றது. அதனால் நாம் செல்லும் பயணமும் நம் கையில் எடுத்த காரியம் சுபமாகவே முடியும்.



