மேஷம்

இந்த வாரம் உங்கள் ஆளுமைத் திறன் பளிச்சிடும்.எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்வீர்கள். பழைய சிக்கல்கள் தீர்ந்து புதிய பாதை புலப்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நடக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். முதலீடுகள் செய்ய இது சாதகமான வாரம். தொழில் தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். வளர்ச்சிப் பாதையில் புதிய வெளிச்சம் காண்பீர்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும். அரசியலில் உள்ளவர்களுக்குச் செல்வாக்கு அதிகரிக்கும். பிறர் விஷயங்களில் தலையிட்டு கருத்து சொல்ல வேண்டாம். பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப்பிரதி வாதங்களில் ஈடுபடவேண்டாம்.
ரிஷபம்

இந்த வாரம் எதிலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுக்கவும். வார இறுதியில் மன நிம்மதி கூடும். தந்தை வழி உறவுகளால் அனுகூலமான செய்திகள் வரும். உறவினர்களிடையே வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். வீட்டில் மகிழ்ச்சியும் ஆரோக்கியமான கலகலப்பும் உண்டு. மருத்துவச் செலவுகள் குறையும். நண்பர்கள் உதவி செய்வார்கள். சிலருக்கு அலைச்சல் பயணங்களும், மன அலைச்சலும் உருவாகும். திடீர் பதற்றங்கள் படபடப்பு உருவாகும்.
மிதுனம்

இந்த வாரம் உங்கள் பேச்சுத்திறன் மற்றவர்களை கவரும். இக்கட்டான சூழலையும் நகைச்சுவையால் கையாளுவீர்கள். சகோதரர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கி ஒற்றுமை பலப்படும். குடும்ப ரகசியங்களை மூன்றாம் நபரிடம் பகிர வேண்டாம். புதிய சொத்து வாங்கும் யோகம் கூடி வரும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள். அரசாங்க அனுகூலங்கள் உண்டு. போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. மருத்துவ செலவுகள் கட்டுக்குள் அடங்கும். ஆன்மிகப் பயணமும் சிந்தனைகளும் அதிகரிக்கும். தாயின் உடல்நிலையில் கவனம் தேவை. பிள்ளைகள் விஷயத்தில் கவனம் தேவை.
கடகம்

இந்த வாரம் மனத்தெளிவு பிறக்கும். குழப்பங்களைத் தவிர்த்து யதார்த்தத்தைப் புரிந்துகொள்வீர்கள். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். சுயதொழில் செய்பவர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீட்டில் விருந்தினர்கள் வருகையால் கலகலப்பு கூடும். நிலுவையில் இருந்த வேலைகள் விரைந்து முடிவுக்கு வரும். பொருளாதாரத்தில் எந்தச் சிக்கலும் இருக்காது. கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். கொடுத்த பணம் வசூலாகும். தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடக்கும். தேவையில்லாத விரோதங்கள் உருவாகலாம். மற்றவர்கள் விஷயத்தில் உங்கள் கருத்தை வலியுறுத்த வேண்டாம்.
சிம்மம்

இந்த வாரம் உங்கள் நிர்வாகத் திறமை கூடும் வாரம். இழந்த மரியாதையை மீண்டும் பெறுவீர்கள். அரசாங்க ரீதியான உதவிகள் எளிதில் கிடைக்கும். பூர்வீகச் சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டாகலாம். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. பொருளாதார ரீதியாக வெற்றி கிடைக்கும். அடைக்க வேண்டிய கடன்கள் அடைபடும். வாடகைக் கட்டடத்தில் இருந்து சொந்த கட்டிடத்திற்குக் குடி போகும் வாய்ப்பு உண்டு. தாயாரின் உடல்நிலையில் கவனம் தேவை. பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் கவனம் தேவை.
கன்னி

இந்த வாரம் புத்திசாலித்தனத்தால் எதிரிகளை வீழ்த்தி வெற்றி பெறுவீர்கள். தடைப்பட்ட காரியங்கள் வேகம் எடுக்கும். புதிய வாகனம் வாங்கும் யோகம் கைகூடும். குடும்பத்தில் திருமண பேச்சுவார்த்தைகள் சுபமாக முடியும். வியாபாரத்தில் புதிய மாற்றங்களைச் செய்து லாபத்தை அதிகரிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். உபரி வருமானம் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. செய்யும் வேலைக்கு பாராட்டும் அங்கீகாரமும் கிடைக்கும். நண்பர்களாலும், குடும்ப உறுப்பினர்களாலும், காரியங்கள் சாதகமாகும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அவ்வப்பொழுது ஆரோக்கிய பிரச்னைகள் ஏற்படும். கேட்ட விஷயத்தைச் சரி பார்க்காமல் மற்றவர்களுடன் பகிர வேண்டாம்.
துலாம்

இந்த வாரம் ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை உண்டாகும். நீண்ட காலத் திட்டங்களைச் செயல்படுத்தத் தொடங்குவீர்கள். சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும். சகோதரிகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டும் ஒத்துழைப்பும் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். மற்றவர்களின் ஒத்துழைப்பால் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவீர்கள். சேமிப்பு அதிகரிக்கும். நன்மைகள் கிடைத்தாலும் அவசரப்பட்டு விவேகம் இல்லாமல் பேசி சில வாய்ப்புகளை இழந்து விடுவீர்கள் என்பதால் பேச்சில் நிதானமும் கவனமும் தேவை. கோபத்திலும் அவசரத்திலும் எந்த முடிவுகளும் எடுக்க வேண்டாம்.
விருச்சிகம்

இந்த வாரம் எதையும் சமாளிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றியைத் தரும். தேவையற்ற அலைச்சல்கள் குறைந்து நிம்மதி கூடும். வீட்டில் சுப காரிய பேச்சுவார்த்தைகள் தொடங்கும். பணப்புழக்கம் சீராக இருக்கும். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. உடன்பிறந்தோரால் மகிழ்ச்சி உண்டு. சுபகாரியங்கள் தடை நீக்கி இனிமையாக நடைபெறும். உற்சாகமான மனநிலையில் இருப்பீர்கள். கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் மனம் விட்டுப் பேசி அகற்றிக் கொள்ளும் வாய்ப்பு உண்டு. முக்கிய முடிவுகளை இப்போதைக்கு எடுக்க வேண்டாம். செலவுகள் அதிகரிக்கும் காலம் என்பதால் யோசித்து நல்லவிதமாக செலவு செய்யுங்கள்.
தனுசு

இந்த வாரம் மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்வீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். தந்தை வழி உறவினர் பிணக்குகள் தீரும். ஆன்மீகப் பயணம் செல்வீர்கள். பூர்வீகச் சொத்து தொடர்பான சிக்கல்கள் முடிவுக்கு வரும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு லாபம் இருமடங்காகும். புதிய தொழில் தொடங்க முதலீடுகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிறைவேறாத காரியங்களைத் நிறைவேறும். வணிகத்தில் புதிய ஒப்பந்தங்கள் உருவாகும். யாருடனும் பகைமை பாராட்ட வேண்டாம். சில நேரத்தில் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் சண்டை சச்சரவுகள் நிகழலாம். நீங்கள் கவனமாக அந்த பிரச்னையைக் கையாள வேண்டும்.
மகரம்

இந்த வாரம் குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் நீங்கி அமைதி நிலவும். மூத்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். சமூகத்தில் உங்கள் சொல்லுக்கு மதிப்பு இருக்கும். திருமணமான தம்பதிகளுக்கு இடையே இருந்த இடைவெளி குறையும். உத்தியோகத்தில் உங்கள் திறமை அங்கீகரிக்கப்படும். வாகனம் வாங்கும் யோகம் கூடி வரும். மருத்துவச் செலவுகள் கட்டுக்குள் வரும். வெளிநாடு வேலை தேடுபவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். திடீர் பணவரவுகள் கிடைத்து சந்தோஷம் அதிகரிக்கும். மற்றவர்களால் உங்கள் குடும்பத்தில் தேவையில்லாத குழப்பங்கள் உருவாகும் வாய்ப்பு உண்டு. யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம்.
கும்பம்

இந்த வாரம் கடின உழைப்பிற்குப் பின் நிச்சய வெற்றி கிடைக்கும். சமூக சேவையில் ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்களுடன் இருந்த கசப்புகள் நீங்கும். சகோதரர் மூலம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பு அங்கீகரிக்கப்படும். புதிய திட்டங்களைச் செயல்படுத்த இது சரியான நேரம். நீண்ட நாட்களாக வராத கடன் வசூலாகும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். நிதானமாக காரியங்களைச் செய்யுங்கள். திடீர் முடிவுகள் எடுக்க வேண்டாம். தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
மீனம்

இந்த வாரம் கற்பனைத் திறன் அதிகரிக்கும். புதிய கலைகளைக் கற்க ஆர்வம் காட்டுவீர்கள். ஆன்மீக குருவின் ஆசி கிடைக்கும். குழந்தைகளால் பெருமை உண்டாகும். மனைவி ஆலோசனைகள் குடும்ப முன்னேற்றத்திற்கு உதவும். புதிய சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வீர்கள். பழைய கடன்கள் அடைக்க வழி பிறக்கும். உத்தியோகத்தில் புதிய நுணுக்கங்களைக் கற்பீர்கள். போட்டித்தேர்வுகள் வெற்றி கிடைக்கும். பெற்றோர்கள் உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் தருவார்கள். பிறருடைய தவறான ஆலோசனை உங்களுக்கு சிக்கலைத் தரும். யார் சொன்னாலும் மறு யோசனை செய்யுங்கள்.
இதனையும் படியுங்கள் : 2026 ராகு கேது பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்


