ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் பொழுது நம்மில் பலருக்கு பலவகையான கனவுகள் வரும். இருப்பினும் நாம் காணும் அனைத்து கனவுகளுக்கும் பலன் இருக்கும் என்று எளிதாக சொல்லிவிட முடியாது. கனவுகள் என்பவை நாம் நடக்க வேண்டுமென்று நினைப்பது மட்டுமல்ல, நாம் செய்யத் தவறியதாகவும், அதை அறியாமலும் கூட இருக்கலாம். கனவுகள் நமக்கு அவற்றை நினைவுபடுத்தலாம். அதை சொப்ன சாஸ்திரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் கனவில் பல்லிகளைப் பார்ப்பது நல்ல சகுனமாக கருதப்படுவது கிடையாது. அதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. என்ன மாதிரியான பல்லிகளை கனவில் கண்டால் என்ன பலன் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பல்லி பூச்சிகளைக் கொல்வது போன்று கனவு கண்டால்
உங்கள் கனவில் பல்லி பூச்சிகளைக் கொல்வது போன்று கண்டால் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் உங்கள் வாழ்க்கையில் அல்லது பண விஷயத்தில் சில இழப்புகளை சந்திக்க கூடும் அல்லது நிதி நெருக்கடிகளை சந்திக்க கூடும். அதனால் கவனமாக இருக்க வேண்டும்.
பல்லி விரட்டுவது போன்று கனவு கண்டால்
கனவில் பல்லியை பார்த்து பயந்து ஓடுவது போன்ற கனவு வந்தால் உங்கள் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளை சமாளித்து வெற்றி பெறும் வாய்ப்பு உண்டாகும். அதுமட்டுமல்லாமல் உங்களுக்கு பண வரவு நடக்கப்போவதாக பொருளாகும். சில நேரங்களில், பல்லி விரட்டுவது போன்று கனவு காண்பது வாழ்க்கையில் வரக்கூடிய தடைகளை உணருவதைக் குறிக்கலாம்.
பல்லியை கொள்வது போன்று கனவு கண்டால்
பல்லியை கனவில் கொள்ளுவது போன்று கண்டால் நீங்கள் மிகவும் நேசிப்பவர்களை பிரிய போகிறீர்கள் என்று அர்த்தம். அதுமட்டுமல்லாமல் உங்களுக்கு எந்த பிரச்சனைகள் நடந்தாலும் அது விரைவில் முடிவுக்கு வரும் என்று பொருள். அத்தகைய கனவு உங்கள் வீட்டிற்குள் வரும் பிரச்சினைகளிலிருந்து நீங்கள் விரைவில் விடுபடப் போகிறீர்கள் என்பதையும் குறிக்கிறது.
வீட்டிற்குள் பல்லி நுழைவது போன்று கனவு கண்டால்
உங்கள் கனவில் ஒரு பல்லி உங்கள் வீட்டிற்குள் நுழைவதைக் கண்டால், நீங்கள் ஏதோ பிரச்சினையைப் பற்றி கவலைப்படுகிறீர்கள் என்றும் நீங்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது. அதுமட்டுமில்லாமல் நீங்கள் செய்யக்கூடிய வேலை மற்றும் பொறுப்புகளை மிக கவனமாக செய்து முடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
ஒரே இடத்தில் நிறைய பல்லிகளை பார்ப்பது போன்று கனவு கண்டால்
ஒரே இடத்தில் நிறைய பல்லிகளை பார்ப்பது போன்று கனவு கண்டால், எதிர்வரும் நாட்களில் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். எதிரிகளால் ஏற்படும் பிரச்சினையை முன்கூட்டியே அறிவிக்கவே இவ்வாறு கனவில் பல்லி வருவதாக கூறப்படுகின்றது. அதுமட்டுமல்லாமல் ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்படும். அதனால் நீங்கள் எந்த ஒரு செயலில் ஈடுபட்டாலும் அதில் எச்சரிக்கையுடன் செயல்படவும்.
இதனையும் படியுங்கள் : வாழ்க்கையில் அதிர்ஷடம் வர போவதை முன்னக்கூடியே உணர்த்தும் கனவுகள் ? என்னெ்ன கனவுகள் தெரியுமா ?


